Feed Item
·
Added article

தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலமாக அறிமுகமாகி, தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. அதன் பிறகு அவரது ஒவ்வொரு படங்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான சிறை என்ற படம் தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. சிவாஜி கணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற அடையாளங்கள் இருந்தாலும், திரையுலகப் போராட்டத்தில் தான் சந்தித்த தனிமை குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில்,அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சிறை.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் வாரி குவித்து வருகிறது. வணிக ரீதியாக வசூலை வாரி கொடுக்கிறது.

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட 75வது நாள் வெற்றிவிழா நடைபெற்றது. விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த நடிகர். அனைத்து படங்களிலும் அவருக்கென ஒரு தனி சிறப்புடன் நடித்திருப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. என்று இரண்டு நடிகர்களின் வாரிசு தான் விக்ரம் பிரபு. தலைமுறை தலைமுறையாக தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கும்கி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது அழகும் உயரமும் சரியான பாடி கட்டும் இவருக்கு பல வாய்ப்புகளை தேடி கொடுத்து வருகிறது. குறிப்பாக இவர் போலிஸ் கதாபாத்திரத்திற்கு மிகவும் அச்சடித்தால் போல் இருப்பார்.இவர் பெரும்பாலும் எதார்த்தமான மற்றும் ஆக்ஷன் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, கபாலி வெள்ளை யானை மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்,இறுகப்பற்று போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார் பல படங்கள் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது.

டாணாக்காரன் படத்தில் இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். ஒரு காவலராக நினைக்க ஆசைப்பட்ட ஒரு இளைஞன்சந்திக்கும் கொடுமைகளை பற்றி பேசி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கத இயக்குனர் தமிழ் தான் இந்த டாணாகரன் திரைப்படத்தை கதை எழுதியுள்ளார். தமிழ் முதலில் ஒரு போலீஸ்காரனாகவே இருந்து அதன் பிறகு கதை எடுக்கும் இயக்குனராக மாறிவிட்டார். அப்பொழுது பட்ட கஷ்டங்களை விலகும் படமாக தான் இந்த படம் உருவானது என்றும் ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அவரின் கதைக்கேற்ப விக்ரமின் நடிப்பும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்துள்ளது.

இந்த வெற்றி விழாவில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு கலந்துக் கொண்டு பேசினார். அவர் "ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன்னால் நிற்கும் போது, என் தாத்தா சிவாஜி கணேசன் மற்றும் என் அப்பா பிரபு ஆகியோர், இந்த திரையுலகில் பெற்றிருந்த நற்பெயரை நான் காப்பாற்ற வேண்டும்.என்ற பெரும் பொறுப்பும் ஒருவித பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது". நடிகரின் பேரன் மற்றும் மகன் என்னும் ஒரு சூழல் என்னை தாக்குகிறது. நான் தனிமையை மிகவும் அதிகமாக உணர்ந்து இருக்கிறேன் என்றும் உருக்கமாக கூறியிருந்தார். நான் ஒரு சினிமா துறையின் வாரிசு என்பதாலும் என்ற ஒரு தனி அடையாளம் கிடைக்கவில்லை என்றும் கவலைப்பட்டார் விக்ரம் பிரபு.

வெளிநாட்டிற்கு வந்து திரும்பிய பிறகு நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன் என் ஆசைக்கு என் அப்பா நான் உனக்கு உதவ மாட்டேன் ஏன் உன் முயற்சியால் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டார் அதன் பிறகு 25 படம்‌ நான் நடித்துள்ளேன் அனைத்து படங்களும் என் சொந்த உழைப்பில் முன்னேறி இருக்கிறேன் என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார் விக்ரம் பிரபு.நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன் என்று கூறினார். சிறை எனக்கு 25ஆவது படம் என்பதால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் எனது மகிழ்ச்சியை தன் நண்பர்களுடன் விழாவில் பகிர்ந்துள்ளார் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

  • 24