Category:
Created:
Updated:
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (20) (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்
இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மருந்தக பிரிவுகள் முற்றாக செயழிந்துள்ளன. இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.