ஆயுள் காப்புறுதி வைத்திருப்பவர்கள் விடும் தவறுகள்
ஆயுள் காப்புறுதிகளினை செய்து அதற்கு தொடர்ந்து பணம் செலுத்தி வருபவர்கள் விடும் தவறுகளினை பின்வரும் ஏழு வகைக்குள் ஓர் அறிவுரைக்காக குறிப்பிடுகின்றேன்.
தயவு செய்து மூன்று நிமிடங்களில் கேளுங்கள்.
(1) உயிர் இழப்பின் பின்பு பணம் பெற சரியானவரினை நியமித்திருக்கின்றீர்களா?
ஏனனில் திருமணத்தின் முன்பு ஆயுள் காப்புறுதியில் சேர்ந்திருந்தால் எவரோ ஒருவரின் பெயர் பதிவிலிருந்திருக்கும் . அதில் மாற்றம் செய்யாத காரணங்களினால் காலம் தவறிய மரணங்களில் திருமணத்தின் பின்பு மனைவி பிள்ளைகளுக்கு பணம் போகாது வேறு எவரோ கைகளில் போய் சேர்ந்த துயரமான கதைகள் பல உண்டு. தேவையான நேரங்களில் காலங்களுக்கு ஏற்ற மாதிரி, மாற்றங்கள் செய்யவேண்டிய நேரங்களில் செய்யவேண்டியது அவசியமாகும். .
(2) உயிர் இழப்பு நடந்தால் முதல் பணம் பெற உரித்துடையவர் (Primary beneficiary),என நியமிப்பதுடன் துரதிர்ஷ்டாவசமாக அவரும் அந்த நேரம் உயிருடன் இல்லையேல் பணம் உரித்துடையவர் என அடுத்த வரிசையில் உள்ளவர்கள் (Contingent Beneficiaries) பெயர்களினை முறையாக பதிவு செய்தீர்களா? ஏனனில் எவருக்கும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமையில்தான் வாழ்க்கை ஓடுகின்றது.
(3) தொழில் செய்யமுடியதளவுக்கு உடல் நிலைமை பாதிக்கப்பட்டால் மாதம் செலுத்தும் பணம் செலுத்த தேவையில்லை என்ற சரத்து (Waiver of Disability premium) சில ஆயுள் காப்புறுதிகளில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த நிலைமை ஏற்பட்டும் அதற்கு விண்ணப்பித்து அந்த சலுகைகளினை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கின்றீர்களா?
(4) விலாசங்கள் மாறினாலும் அவை காப்புறுதி கம்பனிக்கு அறிவிக்காத காரணங்களினால் பல இடங்களில் கட்டணம் செலுத்த தவறியபோதெல்லாம் அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதங்கள் தவறி இறுதியாக ஆயுள் காப்புறுதியும் ரத்து செய்யப்பட்டும் உள்ளது.
(5) தங்களின் வங்கிகளிருந்து மாதா மாதம் கட்டணம் ஒழுங்காக செலுத்தப்படுகின்றதா? என்பதனை ............
தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்....