
ஒவ்வொருவரும் குடும்பங்களுக்கிடையே ஒற்றுமைகளை கொண்டிருக்கின்ற போதுதான் சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் கல்வி பணிப்பாளர் க.அ இ சிவனருள்ராஜா தெரிவிப்பு
ஒவ்வொருவரும் குடும்பங்களுக்கிடையே ஒற்றுமைகளை கொண்டிருக்கின்ற போதுதான் சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் என்று கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.அ இ சிவனருள்ராஜா தெரிவித்துள்ளார்இன்று (11-03-2023) பிற்பகல் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலையின் தரம் ஐந்து புலமைப் பரிசில்; பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களை விட அதற்கு குறைவான புள்ளிகளை பெற்றவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை காட்டுகின்றனர்.
ஆனால் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் அதற்கு மேல் கல்வியில் ஆர்வம் காட்டுவது குறைவாகவே கானப்படுகின்றது.குறிப்பாக முருகானந்த ஆரம்ப பாடசாலiயானது எமது வலயத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு பாடசாலையாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர்நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள்; சமூகமாக தற்போது உள்ளோம் எங்களிடத்திலே ஒரு வன்மையான உணர்வுகளே கூடுதலாக இருக்கின்றது.
மாணவர்களிடையே கலைகள் ஊடாக மென்மையான உணர்வுகளை கட்டி எழுப்ப வேண்டும் அந்த உணர்வுகள் மேம்பட வேண்டும் அவ்வாறு மேம்படும் போது தான் நாங்கள் ஒவ்வொருவர் மீது ஒருவர் அன்பாகவும் குடும்பங்களிடையே ஒற்றுமையாகவும் சமூக சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி முருகானந்த ஆரம்ப பாடசாலையின் கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(11-03-2023) பிற்பகல் பாடசாலை அதிபர் க.கருணானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வின் முன்னதாக பிரதமர் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.அ. சிவனருள் ராஜா கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் பொ. விஜயநாதன் டிமற்றும் பாடசாலை யின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.