
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொழிற்சாலையில் தீ விபத்து:
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஃபோர்ட் செயிண்ட் ஜான் நகரத்திற்கு வடக்கே உள்ள இயற்கை வாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
இயற்கை வாயு தொழிற்சாலையின் பணியாளர்கள் குழாயைத் தட்டி காயப்படுத்தியபோது தீ விபத்து ஏற்பட்டதாக பி.சி. எனர்ஜி ரெகுலேட்டர் அறிவித்துள்ளது. தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக நிறுவனம் தரிவித்துள்ளது.
இந்த விபத்தில், ஒப்பந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. மேலும் மற்றொரு பணியாளர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவரின் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று Tourmaline நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணங்களை கண்டறியும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.