கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் ஆனையிறவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை 12-032023 முற்பகல் பிரதிடசை செய்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் நிர்மாணிக்கப்பட்ட நடராஜர் சிலையினை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள ஆனையிறவு பகுதியில் பிரதான வர்த்தகமையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிலையம், நவீனகுளியலறை, விளையாட்டு முற்றம், மற்றும் கடற்கரை உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் மூல திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்ட பணிகள் நிறைவு பெற்று;
அங்கு நிறுவப் பெற்ற சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிட்சை செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் இந்து மத சிவாச்சாரியார் கள் பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதி ராஜா பக்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.அதாவது விசேடமாக 27 அடி உயரமான நடராஜர் சிலை ஆறடி உயரமான பீடத்தில் ஏற்றி கிளிநொச்சி ஆனையிறவு வீர மண்ணுக்கு அழகு சேர்க்கிறமை குறிப்பிடத்தக்கது.