கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட செருக்கன் கிராமத்தில் வாழும் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான அடிப்படைவசதிகள் மற்றும் குடி நீர் வசதிகள் உள்ளிட்டவை இல்லாத நிலையில் நீண்ட காலமாக பெரும் சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவித
கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட செருக்கன் கிராமத்தில் வாழும் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான அடிப்படைவசதிகள் மற்றும் குடி நீர் வசதிகள் உள்ளிட்டவை இல்லாத நிலையில் நீண்ட காலமாக பெரும் சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட செருக்கன் கிராமத்தில் தற்போது 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.குறித்த கிராமத்தில் வாழும் குடும்பங்களில் 90 வீதமான குடும்பங்கள் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் குறித்த கிராமத்திலிருந்து கடற்கரைக்கு செல்லும் சுமார்மூன்று கிலோ மீற்றர் தூரம் வரையான பகுதி இதுவரை புனரமைக்கப்;படாமல் காணப்படுவதனால் கடற்தொழிலுக்கு செல்வோர் தினமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருதாக தெரிவித்துள்ளனர்.
இதனை விட குறித்த கிராமத்தில் வாழும் குடும்பங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளபோதும், அவற்றுக்கான நிதியொதுக்கீடுகள் போhதுமானதாக இல்லாத காரணத்தினால் நிரந்தர வீடுகளில் அதிகளவானவை முழுமைப்படுத்தப்படாத நிலை கானப்படுகின்றன.
ஆத்துடன் அதிகளவான குடும்பங்கள் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தற்காலிக வீடுகளிலே வாழ்ந்துவருகின்றன.இவ்வாறு தற்காலிக வீடுகளில் வாழும் குடும்பங்கள் சொல்லனத்துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டசில காலங்களில் இரவு பகல் வீடுகளில் இருக்கமுடியாத நிலை ஏற்;படும் என்றும தெரிவிததுள்ளார்.
தமக்கான வீட்டுத்திட்டங்களை கோருகின்ற போதும், புள்ளியிடல் முறைகளில் உள்வாங்கப்படவில்லை அல்லது குறைந்த குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் என தாங்கள் விலக்கபபடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை புனகரி பரந்தன் வீதியில் போதிய போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரியுள்ளனர்.