உலகம் முழுவதும் திடீரென முடங்கியது டுவிட்டர்
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் இன்று காலை முதலே பிரச்சனை ஏற்பட்டது. டுவீட்களை போஸ்ட் செய்வதிலும் டைம்லைன் தகவல்களைப் பார்ப்பதிலும் பயனாளர்கள் நுழைவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
சர்வர் செயலிழப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். டுவிட்டர் இணையத்தில் தகவல்களை போஸ்ட் செய்தால் 'ஏதோ தவறு நடந்துவிட்டது அல்லது மீண்டும் முயற்சிக்கவும் டுவீட் இப்போது ஏற்றப்படவில்லை என தகவல்கள் வந்தது. டுவிட்டர் பாதிப்பு குறித்து பயனர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த டுவிட்டர் நிர்வாகம், டுவிட்டரில் தகவல்களை போஸ்ட் செய்வதில் பிரச்சினை உள்ளது. இதனை நாங்கள் சரி செய்து வருகிறோம். நீங்கள் உங்கள் டுவிட்டர் கணக்கை விரைவில் பயன்படுத்த முடியும்’ என தெரிவித்தது.
இந்நிலையில் மாலை 6 மணியளவில் டுவிட்டர் உலகளவில் முடங்கியது. இதனால் பயனர்கள் டுவிட்டர் கணக்கை பயன்படுத்த முடியாததால் அதிர்ச்சி அடைந்தனர். தேடல் மற்றும் ட்வீட்டுகளை பதிவேற்றம் செய்ய முடியாத நிலை, லாக் அவுட் பிழை மற்றும் மோசமான சூழ்நிலை போன்ற பல சிக்கல்கள் இருப்பதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.