இலங்கையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனமானது கடந்த இருபது வருடங்களில் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் மிதிவெடிகள் மற்றும் ஒரு மில்லியன் வரையாான வெடிபொருட்கள் என்பவற்றை அகற்றியுள்ளது
ஹலோட்ரஸ்ட் திட்ட முகாமையாளர் ஸ்டீபன் ஹால், தெரிவித்துள்ளார்மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டை (24-11-2022) நிறைவு செய்துள்ளதுஇதனையொட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு அந் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் அதரிவித்துள்ளார் அதாவது 24 நவம்பர் 2022 அன்று, ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் கண்ணிவெடி அகற்றப்பட்டதன் 20ம் ஆண்டுநிறைவைக் நிறைவு செய்துள்ளது.
ஹலோவானது இலங்கையில் மிகப்பெரிய மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமாகும். இதில் 1300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர், அவர்களில் நாற்பது வீதமானோர் பெண்கள் ஆவர். மனிதவலு முறை கண்ணிவெடி அகற்றும் அணிகள், கருவிகள் மற்றும் கவசமிடப்பட்ட இயந்திரங்கள் போன்றவற்றைகிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகபயன்படுத்துகின்றது.ஹலோவின் அணிகள் கடுமையாக உழைத்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காதவெடிபொருட்களை அகற்றி மக்கள் பாதுகாப்பாக அவர்களின் இடங்களுக்கு திரும்பவும் அவர்களதுநிலங்களில் விவசாயம் செய்யவும் வழிவகுத்து வருகின்றது. 20 ஆண்டுகளில் ஹலோவின் நடவடிக்கை மூலம்114 km2 நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது- இது 6700 கிரிக்கெட் மைதானங்களுக்கு சமனாகும்270 000 மிதிவெடிகள் மற்றும் கிட்டத தட்ட ஒரு மில்லியன் வெடிபொருட்கள்அழிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் 280 000 மக்கள ; அவர்களது வாழ்விடங்களுக்கு இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
கடந்த 2017 டிசம்பரில் சர்வதேச கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்துள்ளது. ஒப்பந்தம்2018ல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 2028 ஆண்டளவில் அறியப்பட்ட கண்ணிவெடி பிரதேசங்களைதுப்பரவு செய்ய இலங்கை உறுதிபூண்டுள்ளது.
இவ் இலக்கை அடைவதற்கு, இலங்கைக்கு உதவ ஹலோ தனது உயிர்காக்கும் பணியைத் தொடர உறுதிபூண்டுள்ளது.இவ் இலக்கை இலங்கை அடைய உதவ நாங்கள் எங்களை அர்ப்பணித்துள ளோம். இவ் இலக்கு அடையப்படும் வரை எங்கள் மிதிவெடி அகற்றும் அணிகள் பணிபுரியும்.
இலங்கை கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டவுடன், வெற்றிகரமான எதிர்காலத்திற்குத் தேவையான திறன்கள் எங்கள்அனைத்துப் பணியாளர்களும் பெற்றிருப்பதை உறுதிசெய்ய, நாம் தேசிய மிதிவெடி நடவடிக்கை மையம்மற்றும் ஏனைய கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.