டுவிட்டரை வாங்கினார் எலான் மஸ்க்
உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார்.
எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில், கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவதற்கு ஒருநாள் முன்பே, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார்.டுவிட்டர் முதலீட்டாளர்களில் ஒருவரான ரோஸ் கெர்பர், எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் முடிந்ததை உறுதிப்படுத்தினார். மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். பல ஆய்வாளர்கள் டுவிட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் இப்போது செலுத்தும் விலை மிக அதிகம் என்று தெரிவித்தனர்.
டுவிட்டரின் உரிமையாளரானது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், "இந்நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை. மனிதகுலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமான டுவிட்டரை வாங்கினேன்" என்று மஸ்க் கூறினார்.