சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  678 news
  •  ·  16 friends
  • S

    23 followers

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் இன்றைய தினம் தெரிவித்தார்.இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை அவர்களது காரியாலயத்தில் இன்று சந்தித்தார்.இந்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது. அத்துடன் வெளியில் காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் கனேடியத் தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன்,கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்தார்.கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கசார்பு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் Decide Mckinnon இன் உறுதிமொழியோடு கலந்துரையாடல் சுமுகமாக முடிந்தது.

  • 825
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads