Ads
வீடின்றி வறுமையில் வாழும் முத்தையா விஜயகுமார் என்பவருக்கு இராணுவத்தினரால் புதிதாக வீடு நிர்மானிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்க்குட்பட்ட இந்திராபிரம் கிரமசெரவகர் பிரிவில் பகுதியில் வீடின்றி வறுமையில் வாழும் முத்தையா விஜயகுமார் என்பவருக்கு இராணுவத்தினரால் புதிதாக வீடு நிர்மானிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.குறித்த கையளிப்பு நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு கலந்துகொண்டு இல்லத்தை குறித்த குடும்பத்திடம் கையளித்துள்ளதுடன் அன்பளிப்பு பொருள்களையும் வழங்கி வைத்து மரக்கன்றும் நாட்டி வைத்தார்.இந்நிகழ்வில் பளை பொலிஸ் பொறுப்பதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர், கிராம சேவகர், 551 ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கழிந்த ஜெயவர்த்தனா,552 ம் படைப்பிரிவு படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Info
Ads
Latest News
Ads