கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் சௌபாக்கிய வாரத்தின் புதிய வீடு கையளிப்பு மற்றும் வீட்டுத்திட்ட கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கியா வாரத்தின் இறுதி நிகழ்வில் பயனாளிகளுக்கான புதிய வீடு கையளிப்பு மற்றும் வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகள் என்பன நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை இரணைமாதாநகர் ஜெயபுரம் மற்றும் பொன்னாவெளி உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்றுள்ளன.
இதில் ஜெயபுரம் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதுடன் இரணைமாதாநகரில் புதிய பயனாளிக்குரிய வீட்டினை நிர்மானிப்பதற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன் சமுர்த்தி மாவட்டப் பணிப்பாளர் ஆரணி தவபாலன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியின் பூநகரி பிரதேசசபை உறுப்பினர் பிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பொன்னாவெளி கரியாலைநாகபடுவான் நல்லூர் பல்லவராயன்கட்டு கொல்லகுறிச்சி ஆகிய பகுதிகளில் வீட்டுத்திட்டத்துக்குத் தெரிவான பயனாளிகளுக்கான 200 000 ரூபா வீட்டுக்கான முதல்கட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் பூநகரி பிரதேச செயலக சமுர்த்தி பிரதம முகாமையாளர் சமுரத்தி திட்ட உத்தியோகத்தர் ஏனைய சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராமசேவையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.