கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டவர்களால் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டவர்களால் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் அசமந்தப் போக்கை காட்டி வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கனரக வாகனத்தை பயன்படுத்தி காடழிப்பில் அழிப்பில் ஈடுபட்ட சமயம் அதனை அவதானித்த அவ்வூர் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது குறித்த அனுமதியினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர் தமக்கு அந்தக் காணியை வழங்கியதாகவும் தெரிவித்து இளைஞன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டை பொலிஸார் ஏற்க மறுத்ததுடன் வைத்திய சாலையில் இருந்து வைத்தியர் ஒருவரின் அழுத்தம் காரணமாக வெளியேற்றவும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது இந்த நிலையில் பல்வேறுபட்ட அழுத்தத்தின் மத்தியில் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களை இதுவரை கைது செய்யவில்லை என அறியமுடிகின்றது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சாரதி மற்றும் அவரது சகோதரர் இணைந்து இத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதில் பொலிசார் அசமந்தப் போக்கை காட்டி வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.