அடுத்த வாரத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும்
நாட்டில் அடுத்த வாரத்தில் கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார்.
எதிர்பார்த்தப்படி சீன தயாரிப்பான 20 லட்சம் சைனோபாம் கொவிட் தடுப்பூசிகளுக்கான மருந்து இன்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேபோன்று மேலும் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் மற்றுமொரு ஒரு தொகை தடுப்பூசிகளுக்கான மருந்து இந்த மாதத்தின் 3 ஆவது வாரத்தில் நாட்டிற்குக் கிடைக்கவிருப்பதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதத்தை அண்மிக்கும்போது நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணியை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் ரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரான விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன மேலும் கூறினார்.