Ads
ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெப்பன்பொல பிரதேசத்தில் நேற்று (09) இரவு ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு சிலாபம் பிரதேச போதை ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சிலாபம் பிரதேச போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 139 கிராம் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads