Ads
ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் 14இலட்சத்து ஆறாயிரத்து 289பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை 17ஆயிரத்து 444பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 189பேர் பாதிக்கப்பட்டதோடு 31பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 942பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 575பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Info
Ads
Latest News
Ads