இங்கிலாந்தில் வசிப்பவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம்
புதிய பயண விதிகளின் கீழ், இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஜூலை 19ஆம் திகதி முதல் ஓய்வுக்காக செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
இரண்டு அளவு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் திரும்பி வரும்போது, சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஆனால், அவர்கள் திரும்பிச் செல்லும் இரண்டு நாட்களுக்கு முன்போ அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு சோதனை எடுக்க வேண்டும்.
பச்சை மற்றும் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளிலிருந்து திரும்பும் குழந்தைகள் சுயமாக தனிமைப்படுத்தத் தேவையில்லை, ஆனால் அவர்கள் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தால் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
செம்மஞ்சள் பட்டியல் தனிமைப்படுத்தப்பட்ட ஆலோசனையின் மாற்றம் இங்கிலாந்தில் மட்டுமே நடைமுறைக்கு வரும். ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளும் இதைப் பின்பற்றுமா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை தற்போது ஒரே பச்சை பட்டியலைக் கொண்டுள்ளன
கொரோனா ஆபத்து குறைவாக உள்ள நாடுகள் பச்சை பட்டியலிலும், ஆபத்தாகக் கருத்தப்படும் நாடுகள் செம்மஞ்சள் பட்டியலிலும், மிக ஆபத்தாகக் கருதப்படும் நாடுகள் சிவப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
பச்சை பட்டியலில் இடம்பெற்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது. ஆனால் அவர்கள் 2 நாட்களுக்கு பிறகு பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.