Ads
ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 33 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.எவ்வாறாயினும், இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இன்று மாலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Info
Ads
Latest News
Ads