Ads
குடல் அறுவை சிகிச்சைக்கு பின் போப் ஆண்டவர் குணம் அடைகிறார்
குடல் அறுவை சிகிச்சைக்கு பின் போப் ஆண்டவர் குணம் அடைந்து வருகிறார் என்று வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்தியோ புருனி தெரிவித்துள்ளார். 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது.
அவர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வருகிறார். இதுபற்றி வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்தியோ புருனி விடுத்துள்ள அறிக்கையில், “போப் ஆண்டவர் இரவில் நன்றாக ஓய்வு எடுத்தார். இன்று காலை அவர் உணவு சாப்பிட்டார். செய்தித்தாள்களைப் படித்தார். நடை பயிற்சியும் மேற்கொண்டார்” என கூறி உள்ளார். இந்த வாரம் முழுவதும் அவர் ஆஸ்பத்திரியில ஓய்வு எடுப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
Info
Ads
Latest News
Ads