Ads
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்
இன்று காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவின் மத்திய பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகராஜ வளவ்வே பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Info
Ads
Latest News
Ads