13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர்
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சி.றுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் றிஸ்வான் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிறுமியின் தந்தை அவர்களை விட்டு பிரிந்து சென்றுள்ள நிலையில் தாயுடன் சிறுமி தனியே வசித்து வந்துள்ளார்.
அவரின் தாயார் வேலைக்கு சென்றிருந்த சமயம் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு சி.றுமியின் பெரிய தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் நேற்றைய தினம் நீதிபதியின் முன் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.