Ads
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று (4) காலை இலங்கை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை இன்று (04) அதிகாலை சீனாவின் பீஜிங்கில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கமைய இதுவரை 5.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads