Ads
இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 14 நோயாளர்கள்
கோவிட்டின் டெல்டா மாறுபாட்டின் தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 14 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாட்டில் டெல்டா கோவிட் – 19 கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார். தொற்று கண்ணுக்கு புலப்படாமையால் டெல்டா மாறுபாட்டைக் கொண்ட பலர் இருக்கக்கூடும். எனவே தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், வைரஸ் எளிதில் அவர்களுக்கு பரவக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads