Ads
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பதிவுகளை பதிவு செய்தமையால் இளைஞர் கைது
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் புகழ்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகளை பதிவு செய்தமையால் 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு (2) கைது செய்யப்பட்டதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சண்முகராசா விதுலஷன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்டொ சாரதியான அவர், தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாகவும், இது பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அரசியல் மற்றும் சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
கைதானவர் இன்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Info
Ads
Latest News
Ads