நாட்டில் பஞ்சம் ஏற்படக்கூடும் - எச்சரிக்கை விடுக்கும் சஜித்
அரசாங்கம் உரம் தொடர்பில் எடுத்துள்ள முடிவு காரணமாக இலங்கை எதிர்காலத்தில் பஞ்சத்தை எதிர்நோக்க கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்ற ´´எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதார நிவாரணம் வழங்கும் பொருட்டு 2,365,000 ரூபாய் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த அரசாங்கத்திற்கு உணவு இறக்குமதி செய்ய பணம் இல்லை. பின்னர் நாட்டில் பஞ்சம் ஏற்படும். உணவுப் பற்றாக்குறையால் மக்கள் வீதியில் மயங்கி விழக் கூடும். படிப்படியாக சேதன இயற்கை உரத்தை நோக்கி செல்ல ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். இந்த நாட்டு மக்களை வீணாக மரணத்தின் விளிம்பிற்கு இழுக்க வேண்டாம் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.