கல்லூரி மாணவி தொடர்ந்து 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான மாணவி ஏப்ரல் 2019 இல், கல்லூரிக்கு பரீட்சைக்கு சென்றார். அப்போது விகாஸ் மற்றும் பூரு ஜாட் ஆகிய இருவர் ஆல்வாரில் உள்ள எஸ்.எம்.டி பகுதியில் இருந்து அவரை கடத்தி சென்றனர்.
அவர் மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கபட்ட பெண் 2019 மே மாதம் மலகேரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் ஆனால் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் இரண்டு வருடங்கள் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி அந்த பெண்னை அவர்கள் மிரட்டி உள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு, கவுதம் சைனி என்ற நபர் தன்னை சந்திக்கும்படி பாதிக்கபட்ட பெண்ணுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அந்த வீடியோவை அனுப்பி வைத்து உள்ளார்.பின்னர் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், மலகேரா போலீசார் 2021 ஜூன் 28 அன்று கும்பல் பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்தனர். போலீசார் பாதிக்கபட்ட பெண்னை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வியாழக்கிழமை 164 அறிக்கைகளை பதிவு செய்தனர்.
குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதில் விகாஸ் மற்றும் பூரு ஜாட் ஆகிய இருவர் அடங்குவர். கைது செய்யப்பட்ட மூன்றாவது குற்றவாளி கவுதம் சைனி ஆவார்.