Ads
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 46,617 பேருக்கு தொற்று..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,04,58,251 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 853 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,00,312 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,95,48,302 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 59,384 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,09,637 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 34,00,76,232 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads