Ads
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு UAE விதித்துள்ள தடை
கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு இலங்கை, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம் அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது.இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், தென் ஆபிரிக்கா மற்றும் வியட்நாம் உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் இலங்கை உட்பட குறிப்பிட்ட நாடுகளுக்கான விமான சேவைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விஷேடமாக டெல்டா வகை வைரஸ் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads