நம்பிக்கையுடன் பணியாற்றுமாறு பிரதமர் கோரிக்கை
சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (01) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 500 கிராமங்களை “சௌபாக்கியா உற்பத்தி கிராமங்களாக” அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதற்கமைய நுவரெலியா மந்தாரம்நுவர போஞ்சி விதை மற்றும் கோப்பி உற்பத்தி கிராமம், பேராதனை உடுஈரியகொல்ல மலர் உற்பத்தி கிராமம் மற்றும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரான்பட்டிருப்பு நல்லெண்ணெய் உற்பத்தி கிராமம் என்பன “சௌபாக்கியா உற்பத்தி கிராமம்” என பெயரிடப்பட்டு அதற்கான டிஜிட்டல் நினைவு பலகைகள் பிரதமரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
குருநாகல் கனேவத்த கும்புக்கெடே கிராமம் மற்றும் கம்பஹா மீரிகம கீனதெனிய கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட “சௌபாக்கியா செனஹசே நவாதென” வீடு இந்நிகழ்வின்போது அவ்வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
மக்களுக்கு செயற்திறனான மற்றும் துரித சேவையை வழங்குவதற்கு சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு இன்று (01) முதல் எதிர்வரும் 07ம் திகதி வரை “சௌபாக்கியா – சமுர்த்தி வாரம்” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.