
ஈஸ்டர் விடுமுறையில் 73 இலட்சம் பேர் வாக்களிப்பு
கனடாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் நீண்ட விடுமுறை நாட்களில் முன் கூட்டிய வாக்களிப்பு சாதனை அளவினை எட்டியுள்ளது. 7.3 மில்லியன் (73 இலட்சம்) கனடியர்கள் ஏப்ரல் 18 முதல் 21 வரையிலான நான்கு நாட்களில் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒட்டாவா உள்ளிட்ட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள், குறிப்பாக பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வாக்குச்சாவடிகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிலர் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்ததாக அதிருப்தி வெளியிட்டனர்.
முதல் நாளிலேயே 20 இலட்சம் பேர் வாக்களித்ததால் சில வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகளை விரைவில் மாற்ற வேண்டிய சூழ்நிலை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது. நாங்கள் அனைத்து தேர்தல் பணியாளர்களின் ஊக்கத்தையும், வாக்களித்த அனைவரின் பொறுமையையும் பாராட்டுகிறோம்,” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.