Category:
Created:
Updated:
இந்தியாவின் தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி இணையத்தள விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது .
இணையத்தள விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற அரச நிர்வாக அதிகாரி நசிமுதீன் தலைமையில் Online Gaming Authority , இணையத்தள விளையாட்டுக்களின் விதிகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளது .
பணம் செலுத்தி இணையத்தள விளையாட்டுகளில் உள்நுழைவதற்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை இணையத்தளத்தில் பணம் செலுத்தி விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளையாடும் போது 30 நிமிட இடைவெளியில் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
000