Ads
உலக டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம்
உலக டெஸ்ட் தர பட்டியலில் புதிய தரப்படுத்தல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவுகள் அடிப்படையில் தரப்படுத்தலில் மாற்றம் பதிவாகியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை 10 விக்கெட்டுகளால் வீழ்த்தியது. மேலும், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணி 323 ஓட்டங்களினால் வெற்றி கண்டது.
இதன்படி, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் தர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவுஸ்திரேலியா அணி முதல் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவுஸ்திரேலிய அணி 102 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
000
Info
Ads
Latest News
Ads