TamilPoonga

  •  ·  Administrator
  • S

    15 friends
  • S

    23 followers
  • 5072 views
  • 1 votes
  • More
Profile QR
This is your profile QR Code.
Info
Gender:
Man
Age:
48
Name:
TamilPoonga
Friends count:
Followers count:
Membership
Administrator
Relationships
Empty
Joined Organizations

Welcome to tamilpoonga.com Join with us and upload photos, videos, articles, and you can link any videos/photos from youtube, facebook, twitter etc. All your post get points.

  • 171
Added a news  
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே பொலிசாரால் நேற்று (24) இரவு வளைக்கப்பட்டது.இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 அழகிகளும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். 0777xxxx27 , 077xxxxx13 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக குறித்த விடுதியில் அழகிகளை ஒப்பந்தம் செய்து மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்றோர் அங்கு சென்று வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
  • 147
  • 140
1859: பிரித்தானிய, பிரெஞ்சு பொறியியலாளர்கள் சுயஸ் கால்வாய் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தனர்.1898: ஸ்பெய்னுக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது.1945: இத்தாலியில் நாஸி படைகள் சரணடைந்தன.1981: ஜப்பானின் சுராகா நகரிலுள்ள அணு மின் உலையில் 100 ஊழியர்கள் கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளாகினர்.1988:இரண்டாம் உலக யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.2005: ஜப்பானின் அமகாசாக்கி நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 107 பேர் பலி.2006: கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொலைக் குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.2007: ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸினின் இறுதிக் கிரியை இடம்பெற்றது.2011: அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சூறாவளியினால் சுமார் 300 பேர்பலி.
  • 150
கருத்து கந்தசாமி
  • 148
திருக்குறள்
  • 144
  • 145
காலை வணக்கம்
  • 143
Added a post  
 ஒரு ஊரில், சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே தன் வேலை விஷயமாக, இங்குமங்கும் போவதும், வருவதுமாய் இருப்பார்.ஒரு நாள், விபத்தில் காயமடைந்து, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சில நாட்களில், வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை, தன் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.சில நாட்கள், அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்...சில நாட்கள், மேற்கு, வடக்கு... இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும், அவரது பயணம் இருந்தது.இதை பார்த்த பொதுமக்கள் சிலர்,ஒரு நாள், வணிகரை நிறுத்தி, " என்னப்பா இது... ஒரு நாள் கிழக்கே போற... ஒரு நாள் மேற்கே போற... ஒரு நாள் உடனே திரும்பிடறே... ஒருநாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற... ஒரு நாள் மெதுவா போற... ஒண்ணும் விளங்கலையே... என்னாச்சு..? " என்றனர்." முன்ன மாதிரி இல்லங்க... இப்ப இந்த, கழுதையோட உதவி தேவைப்படுது; அதை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. நான் போக சொல்ற இடத்துக்கெல்லாம், இது போறதில்லை; நான் சொல்ற எதையும் கேட்கறதும் இல்லை...அதுக்காக, விட்டுட முடியுங்களா... நமக்கு வேலையாகணும்... அதேசமயம், கழுதை கூடவெல்லாம் மல்லுக்கட்ட முடியாது. அதுக்கு சொன்னாலும் விளங்காது. அதனால, நான் கொஞ்சம் மாறிக்கிட்டேன்... அது, கிழக்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்...மேற்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்... அது, வேகமா போனாலும், அதற்கேற்ப பழகிட்டேன்... இப்ப, கழுதைக்கும் பிரச்னை இல்ல; எனக்கும் இல்ல. வாழ்க்கை நிம்மதியா போகுது..." என்றார்.இதேபோல, நம் வாழ்க்கையும் நிம்மதியாக போக வேண்டுமானால், வீட்டில், அலுவலகத்தில், பல கழுதைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... அதற்காக, கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது. அதுங்களுக்கு சொன்னாலும் புரியாது, புரிய வைப்பதும் கஷ்டம்.அதனால, நாம கொஞ்சம், " அட்ஜஸ்ட் " செய்து கொண்டால், நம் வேலையும் நடக்கும்; வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும்.
  • 391
Added an event  
கனடா கந்தசுவாமி கோவிலின் கார்த்திகேயன் விழா. June 22-23. இலவச நுழைவு மற்றும் இலவச வாகன நிறுத்துமிடம்.Canada Kanthaswamy Temple's Kaarthikeyan fest. Free entrance and parking.கனடா கந்தசுவாமி கோவில் திறந்த வெளி அரங்கில் மாபெரும் இசை பெரு விழா நடை பெற திருவருள் கூடியுள்ளது,இந்தியாஐரோப்பிய,கனேடிய கலைஞர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்,
733 Birchmount Rd, Scarborough, ON, Canada
  • 668
changed a profile cover  
  • 621
  • 582
  • 482
விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது. இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, "இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது.ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க, இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்.படித்ததில் பிடித்தது..👍
  • 271
காலை வணக்கம்
  • 271
TamilPoonga Ads