Ads
பொன்னியின் செல்வன்
மணிரத்தினத்தின் பொன்னியன் செல்வன்
Empty
Added a news
.......இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான ஒரு வழிமுறையே வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான முயற்சியும் இருக்கின்றது என தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளர் றுஷங்கன், மேலும் கூறுகையில் -வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு சிகரம் தரும் தீர்வுதொழில்மையமான கற்கைத்துறைகளாகக.பொ.த.(உ/த) கலைத்துறை பாடநெறிகள்வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை எமது நாட்டில் தொடர்ந்தும் எந்தவிதத் தீர்வும் இல்லாமல் நீடித்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் கணிசமான தொகையினர் இவ்வாறு தம்மை வேலையற்ற பட்டதாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு வீதிகளில் இறங்கிப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறை பட்டதாரிகள் என்பது தெரியவரும்.மேலும் பாடத்தெரிவுகளை மேற்கொள்ளும்போது, அந்தப் பாடச் சேர்மானங்கள் மூலம் கிடைக்கக்கூடிய எதிர்கால வாழ்க்கைத் தொழிலுக்கான வாய்ப்புக்கள் எவை என்பது குறித்தோ, பல்கலைக்கழக நுழைவுக்குத் தேவையான இசட் புள்ளிகளை பெறுவதற்கு இந்தப் பாடச் சேர்மானங்கள் எவ்வாறு துணை புரியும் என்பதுபற்றியோ மாணவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.அதுமட்டுமல்லாது பல்கலைக்கழக பட்டக்கல்வி மட்டத்திலும் தொழில்மையமான பாடத் தெரிவுகளுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவதில்லை.தாம் பட்டக்கல்வியைத் தொடரும் பாடங்களுக்கு தொழிற்சந்தையில் இருக்கும் கேள்வி என்ன? தமது பாடங்களில் தொழில்மையமான இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் எவை என்பதுபற்றியெல்லாம் தெரியாமலே மாணவர்கள் பட்டக்கல்வியையும் பூர்த்திசெய்கிறார்கள்.இதனாலேயே, பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னரும் தொழில்வாய்ப்பு பெற முடியாதவர்களாக இந்த மாணவர்கள் காணப்படுகின்றனர்.பட்டக்கல்வியை நிறைவுசெய்தவர்களின் நிலையே இதுவாயின், க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறைப் பாடங்களைக் கற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களின் நிலை இதைவிட மோசமானது.இந்தளவுக்கும், இலங்கையில் அதிகளவு மாணவர்கள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது கலைத்துறையிலேயே கல்வி கற்று வருகிறார்கள்.குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இது இன்னமும் அதிகமாகும். தொழில்வாய்ப்புக்களும், தொழில் கல்விக்கான வாய்ப்புக்களும் மிகக் குறைவாகவுள்ள இந்தப் பகுதிகளிலுள்ள இவ்வாறு கலைத்துறையைத் தெரிவுசெய்து கற்கும் மாணவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைமைக்கே ஒவ்வொரு வருடமும் தள்ளப்பட்டு வருகின்றனர். அதேநேரம் வடக்கு மாகாணத்தில் 15 வருடங்களுக்கு மேலாக கல்வி-தொழில் வழிகாட்டி சேவையை வழங்கி, கருத்தரங்குகள் மூலமாகவும், சிகரம் இளையோர் மாதாந்த சஞ்சிகை, பிரசுரங்கள், இலங்கையிலேயே முன்முதலாக தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட கல்வி-தொழில் வழிகாட்டி கையேடு என்பவற்றின் மூலமாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொழில்மையமான கல்விக்கான வழிகாட்டலை வழங்கி, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நேரடித் தொழிற்பயிற்சிகளின் மூலம் உள்நாட்டு – வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்து, ஒரு தனியார் தொழில் முயற்சியாக இந்தச் சேவையை வழங்கியைமையைக் கௌரவித்து இலங்கை வர்த்தக கைத்தொழில் மன்றங்களின் சம்மேளத்தினால் தொழில்முனைவோருக்கான விருதையும் பெற்ற அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனம், கலைத்துறை மாணவர்களின் இந்த வேலையில்லாப் பிரச்சினைக்கான புத்திபூர்வமான செயன்முறைத் தீர்வு ஒன்றை முன்வைக்கிறது. உயர்தரக் கலைத்துறைப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, தொடர்பாடல் ஊடகக் கற்கைகள் துறை, விருந்தோம்பல் மற்றும் வடிமைப்புத் துறை, அழகியல், கலை-இலக்கிய கற்கைகள் துறை, வர்த்தகம் சந்தைப்படுத்தல் கற்கைகள்துறை, சட்ட கற்கைகள் துறை, பொதுச்சேவை – அபிவிருத்தி கற்கைகள் துறை என்று 6 தொழில்மையமான கற்கைகள் துறைகளாக கலைத்துறை பாடங்களை வகைப்படுத்தி, இவற்றில் மாணவர்களுக்கு அதிகம் பொருத்தமான துறையை அவர்களது இயல்பான ஆற்றல், ஆர்வம், இயல்தகைமை என்பவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்வதற்குத் தேவையான வாழ்க்கைத்தொழில் உளவியல் மதிப்பீட்டையும் செய்து, அவரவருக்குப் பொருத்தமான துறைகளில் மாணவர்கள் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் தொடர்பாடலுக்கான ஆங்கில பாடநெறியை கட்டாய பாடமாக வழங்குவதுடன், அவர்கள் தெரிவுசெய்யும் துறைகளுக்குத் தேவையான தொழில்சார் திறன்விருத்திப் பயிற்சிகளையும் மேலதிகமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதுமே தொழில் ஒன்றில் இணைந்துகொள்வதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்வதுடன், பல்கலைக்கழக அனுமதி கிடைத்தால் பகுதிநேரமாக தொழில்செய்துகொண்டு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவும், கிடைக்காவிட்டால் முழுநேரமாகத் தொழில்செய்துகொண்டு பகுதிநேரமாக வெளிவாரிப் பட்டக்கல்வியைத் தொடர்வதற்கும் மாணவர்களால் இயலுமாக இருக்கும். அத்துடன் ஏப்ரல் மாத பிற்பகுதியில் இந்தக் கற்கைநெறிகளையும் நாம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவிருப்பதால், ஏற்கனவே க.பொ.த. உயர்தரத்துக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி அல்லது தொழில்வாய்ப்புக்களைப் பெற முடியாதவர்களும், சாதாரணதரத்துக்கு மேல் கல்வியைத் தொடர முடியாதவர்களும் உரிய தயார்ப்படுத்தல் கற்கைநெறிகளைக் கற்றுத்தேறி, இந்தத் தொழில்வாண்மையான கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்து தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இவ்வாறு, பல்கலைக்கழக அல்லது பட்டக்கல்வி நுழைவுக்கு முன்னரோ, அன்றி, அவற்றை நிறைவுசெய்தவுடனேயோ மாணவர்கள் தொழில்திறன்களை விருத்திசெய்து, வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக தயார்ப்படுத்தப்படுவதால், பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னர் வேலையற்ற பட்டதாரிகள் என்று தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டு வீதிகளில் நின்று போராடவேண்டிய இழிநிலையும் அவர்களுக்கு ஏற்படாது. அதுமட்டுமல்லாது வழி மாறி செல்லும் நிலையும் தடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
- 29
Added a post
1) ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மஹாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.2) கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.3) வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பின் போய்விடும்.இதையே தர்ம சாஸ்திரம்... "சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ... ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது.சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.4) நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.5) வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.6) செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.7) அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம் அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16 வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.8) சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.9) ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.10) பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.11) பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.
- 132
Added a post
இலங்கையில் “லத்தி” என்று அழைக்கப்படும் யானையின் சாணம் பற்றி என்ன அறிந்திருக்கிறீர்கள்? இதோ சற்றே விந்தையான தகவல்கள்.......ஆப்பிரிக்க யானைகள் கிரகத்தின் மிகப்பெரிய நிலப்பரப்பு விலங்குகள். இவை நிறையச் சாப்பிடுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒரு யானை 450 கிலோகிராம் தாவரங்கள் வரை உண்ணலாம். இருப்பினும், 40% மட்டுமே முழுமையாக ஜீரணிக்கப்படுகிறது, இதன் விளைவாக கணிசமான அளவு, (சுமாராக 50 கிலோ அளவு) நார்ச்சத்து(ஃபைபர்) -நிரப்பப்பட்ட droppings கழிவாகப் போடப்படுகின்றன.யானையின் சாணி ஒரு சிறந்த கொசு விரட்டியாக செயற்படுகிறது. வறட்டி ஆக்கப்பட்ட யானைச் சாணியை, அது நன்கு காய்ந்ததும் ,ஒரு சிறு துண்டை எடுத்து, அதை நெருப்பால் பற்ற வைத்து சிறிது நேரம் விட்டு வைத்தால் போதும். நுளம்புகள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போய் விடும். மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இதைப் பற்ற வைத்து எரியும் போது இதில் இருந்து எந்த ஒரு நாற்றமும் வராது. இதனால் இவை மற்ற செயற்கை நுளம்பு விரட்டிகள் போல நமது நாசிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.யானையின் சாணியில் செய்த வரட்டியில் சிறிது துண்டை எடுத்துக் கொண்டு அதைத் தீயிலிட்டு, அந்தப் புகையை நுகர்வதால் கடுமையான தலைவலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம். தலைவலியைக் குணப்படுத்தவும், பல்வலி மற்றும் பல்வகை நோய்களை கட்டுப்படுத்தவும் யானையின் சாணம் மிகவும் உதவுகிறது
- 159
Added article
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்குடி அவரது தந்தை செல்வந்தர், சுதந்திர வீரன் என்ற நாளிதழை அவர் நடத்தினார். சுதந்திர காலத்தில் அந்த நாளிதழ் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் குடும்பத்தை இலங்கை கொழும்புக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் தந்தை மற்றொரு செய்தித்தாளில் பணிபுரிந்தார். பள்ளிப்படிப்பை இலங்கையில் படித்த சந்திரபாபு 1943ல் சென்னை தனது குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணி வந்தார்.1947ல் தன அமராவதி என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார்.சாப்ளின் ஸ்டைலில் உடல் மேனரிசங்கள் செய்ததும், மேற்கத்திய நடனங்களை லாவகமாக ஆடியதும், சென்னை பாஷையில் மிகுந்த நிபுணத்துவம் இருந்ததும் சந்திரபாபுவின் ப்ளஸ்.இவர் எல்லோரிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். இவரின் பாணி கொஞ்சம் திமிர் பிடித்தவரோ என சொல்லவைக்கும். இவரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாகவும் அதே நேரம் அவரிடம் இருந்த நற்குணங்களையும் இயக்குனர் தயாரிப்பாளர் காரைக்குடி நாராயணன் ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.எம்.ஜி.ஆரில் இருந்து சிவாஜி வரை தன்னை விட இளையோர் மூத்தோர் அனைவரையும் மிஸ்டர் சேர்த்து பெயர் சொல்லி அழைப்பதுதான் இவரது பாணி.திருமணம் முடிந்த அன்றே மனைவியின் காதல் அறிந்து அவருடனே சேர்த்து வைத்த நல்ல மனதுக்காரர் என்றாலும், இவரின் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாத வெளிப்படையான செய்முறைகள் நடவடிக்கைகள், ஆங்கிலத்திலேயே பேசி திரிவது, அடுத்தவர்களிடம் மரியாதை இல்லாதது போல் நடந்துகொண்டது போல் தெரிந்தது. இதுவும் இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இப்படி எண்ணற்ற காரணம் உண்டு.எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரிக்க இருந்தார் , அந்த படத்தில் நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் விலகினார், இதற்கு சந்திரபாபுவின் நடவடிக்கைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணியிடம் தவறாக நடந்துகொண்ட காரணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இந்த படத்துக்கு வாங்கிய கடன்கள் கொஞ்சம் இவரை பதம் பார்த்தது. அதற்கு பின்பு எம்.ஜி.ஆர் தனது அடிமைப்பெண் படத்தில் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தை வழங்கி இருக்கிறார் அதில் கொஞ்சம் தேறி வந்த சந்திரபாபு, தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை தயாரித்து தோல்வியடைந்தார் இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டது.மேலும் சந்திரபாபுவின் தனிப்பட்ட செயல்பாடுகளும் அவரை அதல பாதாளத்தில் தள்ளி பொருளாதாரம் எதுவும் இல்லாமல் ஆக்கியது. இயக்குனர் ஏபி நாகராஜனின் கட்டுப்பாட்டில் சின்ன சின்ன உதவிகளுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார் . 1974ல் தனது 46வயதில் இவர் மரணமடைந்தார்.இவர் இறந்தபோது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தான் இவரின் இறுதி சடங்குக்கு உதவி செய்துள்ளார். சென்னையில் உள்ள குய்பில் தீவில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
- 181
Added a post
மேஷம்சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம் கைகூடும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாமதம் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு ரிஷபம்சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மிதுனம்எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வாழ்க்கையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப திருப்பங்கள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு வித்தியாசமான முறையில் தீர்வு காண்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சிம்மம்மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னிபொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம்விளையாட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத்துறைகளில் ரசனை திறன் மாற்றமடையும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சாதுரியமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கிக் கொள்வீர்கள். சாஸ்திரம் தொடர்பான குழப்பங்கள் நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம் விருச்சிகம்உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறையும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடுவதற்கான சூழல்கள் அமையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் தனுசுபுதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான உத்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை மகரம்குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறியும் மனப்பக்குவம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் கும்பம்விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கவலை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் மீனம்எந்த ஒரு செயலிலும் ஆர்வமின்மையுடன் செயல்படுவீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- 184
Added a post
குரோதி வருடம் பங்குனி மாதம் 13 ஆம் தேதி வியாழக்கிழமை 27.3.2025.சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 09.23 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று அதிகாலை 12.02 வரை அவிட்டம். பின்னர் இரவு 11.01 வரை சதயம். பிறகு பூரட்டாதி.புனர்பூசம், பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 187
Added article
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆகிய சூப்பர் ஹிட் படங்களும் அடக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் பெரிய ஹிட்கள் எதுவும் கொடுக்கவில்லை.தெலுங்கு சினிமா ஹீரோக்கள் எல்லாம் பேன் இந்தியா ஹீரோக்களாக மாறி வருகின்றனர். இன்னும் மகேஷ் பாபு அந்த கட்டத்தை எட்டவில்லை. ஆனால் தற்போது அவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வரும் படம் இந்தியாவின் பிரம்மாண்டமானப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.மகேஷ் பாபு நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அதடு’ என்ற படம் தொலைக்காட்சியில் ஒரு புதிய சாதனைப் படைத்துள்ளது. இதுவரை அந்த படம் 1500 முறைக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. எந்தவொரு இந்திய படமும் படைக்காத சாதனை இது என சொல்லப்படுகிறது.
- 473
Added a news
கனடாவில் ஒரு பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்பைன் பகுதியில் குறித்த வீரர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் குழுவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, விமானி ஒரு பனிச்சரிவைக் கவனித்து சைரனை ஒலித்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த வீரர்களை மீட்பதற்கான துரித நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.பலியானவர்கள் விஸ்லர் BC-யைச் சேர்ந்த 44 வயது நபர், இடாஹோ USA-வைச் சேர்ந்த 45 வயது நபர் மற்றும் காஸ்லோ BC-யைச் சேர்ந்த 53 வயது வழிகாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
- 481
Added a post
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேர் .முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.முதல்.நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு,அடுத்த நபரை அழைத்தார்.அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த இரண்டாவது நபர்.அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.மூன்றாவது நபரை அழைத்து வந்தார்.கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார் மூன்றாம் நபர்.அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.மூன்றாம் நபர் சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'
- 483
Added a post
வீட்டை விற்றுவிட்டு.. புது ஓனருக்கு தெரியாமல் அதே வீட்டில் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்!சீனாவில் தன்னுடைய வீட்டை புது ஓனருக்கு விற்ற பெண், புது உரிமையாளருக்கு தெரியாமல் 7 ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஜிங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஜாங் எனும் பெண்மணி. இவர் கடந்த 2016ம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டை விற்பதாக அறிவித்தார். சிலர் வீட்டை வாங்க முன்வந்தனர். ஆனால் விலை கட்டுபடியாகவில்லை.சரியான விலைக்காக ஜாங் காத்திருந்தார். கடைசியாக 2019ம் ஆண்டு லீ என்பவருக்கு வீடு மிகவும் பிடித்துப்போய்விட்டது. பங்களா மாதிரி வீடு.. தோட்டம், மரங்கள், காற்றோட்டமான இயற்கை எழில் கொஞ்சும் வசதியுடன் இருப்பதால், வீட்டை ரூ.2.24 கோடி கொடுத்து வாங்கிக்கொள்வதாக கூறினார்.பத்திரப்பதிவும் செய்யப்பட்டு அதே ஆண்டில் வீடு லீ கைக்கு மாறியது. லீ பரபரப்பான பிசினஸ் மேன். வீட்டில் இருக்கும் நேரம் குறைவுதான். எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் விடுமுறையில்தான் வீட்டில் அதிக நேரத்தை கழிப்பார்.இப்படியே 7 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் இவர் குடியிருக்கும் வீட்டில் இவருக்கே தெரியாமல் வேறு யாரோ இருப்பது போன்று அடிக்கடி தோன்றியிருக்கிறது.வித்தியாசமான சத்தங்கள், திடீர் வெளிச்சம் என அமானுஷ்யமாக நடந்திருக்கிறது...பேய் எதாவது இருக்கும் என்று யோசித்த லீ, அதை ஓட்டுவதற்கு சில விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் இதே பிரச்சனை.அவருடைய உள்ளுணர்வு, அவரை தவிர இங்கு வேறு யாரோ இருப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தது. இப்படி இருக்கையில்தான் ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யலாம் என்று முடிவெடுத்து வேலையில் இறங்கியிருக்கிறார்.வீடுதான் பெருசாச்சே.. எனவே சுத்தம் செய்யும் பணி 2-3 நாட்கள் வரை இழுத்திருக்கிறது. எல்லா அறைகளையும் சுத்தம் செய்த அவர், கடைசியாக தோட்டம் பக்கம் வந்திருக்கிறார்.அங்கு ஒரு கழிவறை இருந்திருக்கிறது. இதுவரை அவர் அதை பயன்படுத்தியதில்லை.ஆனால் அதை சுத்தம் செய்து வைத்தால், நண்பர்கள் யாராவது வந்தால் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என்று யோசித்து கிளீன் செய்ய கழிவறை கதவை திறந்திருக்கிறார்.அங்குதான் ஒரு ட்விஸ்ட் காத்திருந்திருக்கிறது.தோட்டத்தில் இருந்தது உண்மையான கழிவறை கிடையாது. கதவுக்கு பின் ஒரு படிக்கட்டு செல்கிறது. இதை கொஞ்சம் கூட லீ எதிர்பார்க்கவே இல்லை. மனதில் பயம் ஒருபக்கம், மறுபுறம் இந்த படிக்கட்டு எங்கு போகிறது என்கிற கேள்வியும் இருந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு படிக்கட்டில் இறங்கியிருக்கிறார்.அது ஒரு அறைக்கு அழைத்து சென்றது. அந்த அறை விசாலமாக, ஒரு ஆள் வசிப்பதற்கு ஏற்றார் போல இருந்திருக்கிறது. காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்திற்கான வசதியும் அங்கு செய்யப்பட்டிருக்கிறது.அதேபோல அறையின் ஒரு மூலையில் மினி பார் இருந்திருக்கிறது. அங்கு உயர்தர சரக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த லீ-க்கு இந்த வீட்டில் பேய் இல்லை, வேறு யாரோ ஒரு ஆள் இருக்கிறார் என்று தெரிந்துவிட்டது.அறையை முழுமையாக சோதனையிட்டதில் மற்றொரு மூலையில் இந்த வீட்டின் பழைய ஓனர் ஜாங் இருந்திருக்கிறார்.இரண்டு பேரும் ஒருவரை பார்த்து ஒருவர் கத்த.. அந்த தெருவே அமர்க்களமாகியிருக்கிறது. லீ உடனடியாக ஜாங்கை வெளியே போக சொல்லியிருக்கிறார். ஆனால், வீட்டை விற்ற பத்திரத்தில் இந்த பேஸ்மென்ட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும், எனவே இது எனக்கு சொந்தமானது என்றும் ஜாங் வெளியே போக மறுத்திருக்கறார். விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.அங்கு நீதிபதி, லீ-க்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ஜாங் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், இத்தனை நாள் இங்கு தங்கியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
- 489
Added a post
ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் வசித்து வந்த தம்பதியர்களுக்கு பத்து வருடம் கழித்து குழந்தை பிறந்தது.மிகவும் மகிழ்ச்சியில் தாய் அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்கள். ஒரு சமயம் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற போது ! தோட்டத்தில் இருந்து ஒரு பாம்பு வந்து உறங்கி கொண்டிருந்த குழந்தையை தீண்டி விட்டது!குழந்தையும் விஷத்தின் வலிமையால் உடனே நுரை தள்ளி இறந்தது! எமன் அந்த குழந்தையின் உயிரை எடுத்து சென்றான்!அப்பொழுது பூ பறித்து உள்ளே வந்த தாய் குழந்தை இருக்கும் நிலையை பார்த்து சத்தம் போட்டு கதறி அழ! அப்ப பக்கத்து வீட்டு அம்மா அங்கே வந்து! உன் குழந்தையின் உயிரை இப்பொழுது தான் காலன் எடுத்து கொண்டு செல்கிறான்! சீக்கிரம் போனால் அவனிடம் கேட்டு உன் குழந்தையின் உயிரை திரும்பி வாங்கி வரலாம் என்று சொன்னாள்.உடனே தாய் எமனை தேடி வெளியே தெருவில் ஓடினாள்!ஓடினாள்! ஊருக்கு வெளியே வந்தாள்!அப்பொழுது அங்கிருந்த ஒரு கள்ளி செடி பேசியது அம்மா எனக்கு தெரியும் உனக்கு என்ன நடந்தது என்று! உன் குழந்தையின் உயிர் வேண்டும் என்றால் நீ என்னை உன் குழந்தையாக நினைத்து கட்டி பிடித்து கொஞ்சி என்னை உன் குருதியால் நனைக்க வேண்டும்! என்று சொல்ல அந்த தாயும் அது போல் அந்த கள்ளி செடியை கட்டி பிடித்து குழந்தை போல் கொஞ்ச! அவள் உடம்பில் இருந்து குருதி வெளியேறி செடியை சிகப்பாக மாற்றியது. செடி சொல்லியது இன்னும் ஒரு மைல் தூரத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் உன் குழந்தையின் உயிர் இருக்கு போ! என்று சொல்லி அனுப்பியது.தாயும், உடனே அந்த கிணறு இருக்கும் இடத்திற்கு ஓடினாள், இப்பொழுது கிணறு பேசியது, அம்மா நான் நீர் நிறைந்து இருக்கும் போது என்னிடம் எல்லாரும் வந்தார்கள், இப்பொழுது நீர் இல்லாததால் என்னிடம் யாரும் வருவது இல்லை! உனக்கு உன் குழந்தையின் உயிர் வேண்டும் என்றால்! உன் கண்ணீரால் இந்த கிணற்றை நிரப்பு என்று சொல்ல அந்த தாய் கிணறு சொன்ன மாதிரி தன் குழந்தையை நினைத்து கதறி அழ கிணறு கண்ணீரால் நிரம்பியது. இப்பொழுது கிணறு சொல்லியது இங்கே இருந்து ஒரு மைல் தூரத்தில் கழுகு மலை இருக்கு அங்கே செல் உன் குழந்தை உயிர் கிடைக்கும் என்று சொல்லியது!தாயும் வேக வேகமாக அந்த மலையை நோக்கி ஓடினாள்!அங்கே இருந்த கழுகு அம்மா உனக்கு உன் குழந்தை உயிர் வேண்டும் என்றால் உன் இரு விழி திரையும் எனக்கு கொடு! வயதாகி விட்டதால் என் பார்வை சரியாக இல்லை! நான் உனக்கு உன் குழந்தையின் உயிர் இருக்கும் இடத்தை சொல்வேன் என்றது!மகிழ்ச்சியுடன் தாய் தான் ஒரு விழி திரையை கொடுத்தார்! இப்ப கழுகு சொல்லியது அருகில் இருக்கும் தோட்டத்தில் காலன் இருக்கிறான். போய் உன் குழந்தையின் உயிரை மீட்டு கொள் என்றது.கண் பார்வை இழந்தும் தட்டு தடுமாறி அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்ற தாயை காலன் வரவேற்றான். தாய் காலனிடம் தன் ஒரே குழந்தையின் உயிரை திருப்பி கொடுக்க மன்றாடி கேட்க, அதற்கு காலன் தாராளமாக தருகிறேன்! இங்கே மொத்தம் ஆயிரம் பூக்கள் இருக்கிறது அதில் ஆயிரம் குழந்தைகளின் உயிர் இருக்கு! உனக்கு கண் பார்வை வேறு இல்லை முடிந்தால் கண்டு பிடித்து எடுத்து கொள் என்றான்.தாய் உடனே ஒவ்வொரு பூவாக நுகர ஆரம்பித்த செல்ல ! முன்னூறு பூக்களை நுகர்ந்த பின் 301 பூவிடம் வந்தவள் , இதோ என் குழந்தை என்று அந்த பூவை கட்டி கொண்டு அழ! அந்த பூவில் இருந்த குழந்தை அம்மா என்று அழைத்தது.இப்போ காலன் தாயிடம் எப்படி அது உன் குழந்தையின் உயிர் தான் என்று தெரிந்து கொண்டாய் என்று கேட்க அதற்கு அந்த தாய் பத்து மாதம் தவமிருந்து பெற்ற குழந்தையின் வாசம் தெரியாமல் எந்த தாய் இருப்பாள் என்று சொல்லி குழந்தையின் உயிரை பெற்று சென்றது.
- 496
Added a post
தமிழ்நாட்டில் - சென்னை பூந்தமல்லியிலுள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவிலின் மஹிமை பலரும் அறியாதது. நூற்றுக்கணக்கான சித்தர்கள் இக்கோயிலின் தூண்களிலும், மாடங்களிலும், மேற்கூரைகளிலும் ஜீவ சமாதி பூண்டுள்ளனர். ஸ்ரீஆதிசங்கரர் இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்து அண்ட சராசரங்களிலும் காண இயலாத இரண்டு யந்திரங்களைத் (சக்கர வடிவில்) தம் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ளார்.தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகிலுள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோயிலின் பூரண அம்சங்களைத் தாங்கி அதற்கு ஈடான முத்துக்குமார ஸ்வாமியாகத் திருமுருகன் அருள் பாலிக்கும் தலம் இது. அது மூல ஸ்தலம் என்றும் சென்னையில் உள்ளது பிம்ப ஸ்தலம் என்றும் சித்தர்கள் கூறுவார்கள். இங்குள்ள மூர்த்திகள் மூல வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ளவை போன்றே அமைந்து "இரண்டும் ஒன்றே" என்று சித்தர்களால் பெருமை பாடும் அற்புதச் சிறப்பைத் பெற்றுள்ளன.இத்திருக்கோயிலில் பல ஆன்மீக ரகசியங்கள் பொதிந்துள்ளன. ஸ்ரீதையல் நாயகி அன்னையின் சன்னதிக்கெதிரில், ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி தரிசனம் தரும் தூணின் பின்புறன் "ஸ்ரீ அவதூது ரோக நிவர்த்தீஸ்வரர்" என்ற சித்தர் பெருமான் ஜீவ சமாதி கொண்டு அருள் பாலிக்கின்றார்.இவருடைய விசேடத் தன்மை என்னவெனில் இவர் எந்த நோயிலிருந்தும் ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள அருள் புரியும் அற்புத சித்தர். உதாரணமாக ஒருவருக்கு அம்மை நோய் பற்றும் அறிகுறி தென்படின் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரரைத் தரிசித்து, இயன்ற அளவு நீர்மோர், இளநீர், குளிர்பானம், மிளகு சாதம் போன்றவற்றைத் தானமாக ஏழைகளுக்கு வழங்கி தன்னை அந்நோயினின்று தற்காத்துக் கொள்ளலாம்.ஒரு குழந்தைக்குப் போலியோ தாக்கும் அறிகுறி ஏற்படின், இச்சித்தரைத் தரிசனம் செய்து இயன்ற அளவு ஊனமுற்றோர்க்குச் சக்கரப் பலகை, ஊன்று கோல், சக்கரவண்டி jaipur leg எனப்படும் செயற்கை கால் போன்றவற்றைத் தானமாக வழங்கி அக்குழந்தையைப் போலியோ நோயினின்று காத்துக் கொள்ளலாம்.இவ்வாறாக எந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டாலும் அதற்குரிய தான் முறைகளுடன் கூடிய இந்தச் சித்தர் பெருமானின் தரிசனம் அந்த நோயினின்று எவரையும் தற்காக்கும். நோய் கண்டபின் அருள் பாலிக்கும் தெய்வங்கள், தெய்வ சன்னதிகள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் நோய் வரும்முன் காக்கும் ஸ்ரீரோக நிவர்த்தீஸ்வரரின் அருள் தன்மை மருத்துவத் துறைக்கே ஒரு சவாலாகும்.அம்மகானுக்கு இப்படிப்பட்ட சக்தி எப்படி வந்தது ?பல்லாயிரம் வருடங்களுக்கு முன் "நோய்களைத் தீர்ப்பதற்கு ஈசனுடைய பல லிங்க வடிவங்கள் இருப்பினும் நோய்கள் வரும்முன் காக்கும் லிங்க வடிவைக் கண்டு அருள் பெற்று, பிறவிப்பிணி நீக்க உதவ வேண்டும்" என்று விருப்பம் கொண்டார் ஓர் உத்தமர். அவர் அத்தகைய லிங்கேஸ்வரரைத் தேடி பல யுகங்கள் அலைந்தவராய் முடிவில் இறையருளால் இமயமலைச் சாரலிலே "ரோகேஸ்வரர்" லிங்கத்தைக் கண்டார். அன்னாரே தாம் தேடிய பொக்கிஷம் என்பதை ஈசனுடைய அசரீரி ஒலியால் உணர்ந்தார். பிறகு அவ்விடத்தில் இருந்து கொண்டு பல திருப்பணிகள் இயற்றி நோய் தடுக்கும் ரகசியங்களை ஈசனருளால் உணர்ந்து கொண்டார். இறைவனிடம், "ஐயனே! அடியேன் எங்கிருந்து கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும்?" என்று கேட்க ஈசனும், "நீ எந்தத் தலத்தில் அவதூதாக மாறுகின்றனையோ அங்கு குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிப்பாயாக!" என்று அருளினான்.அவ்வாக்கின்படியே அந்த உத்தமர் அனைத்து உத்தமத் தலங்களையும் தரிசித்தவராக முடிவில் பூவிருந்த வல்லியை அடைந்து வைதீஸ்வரனைத் தரிசித்த வேளையிலேயே அவதூதாக மாறினார் .... பின் ஈசனுடைய விருப்பப்படி அங்கேயே சமாதி கொண்டு விட்டார் . அந்த உத்தமர் தாம் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரர்."Prophylactic (prevention) is better than Cure" என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப வரு முன் காப்பது மருந்துகளை விடச் சாலச் சிறந்ததாகும். இம்முறையில் PROPHYLACTIC PROPHET ஆக விளங்கும் ஸ்ரீரோக நிவர்த்தீஸ்வரர் பூலோகத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத, நோய் வராது காத்து அருளும் வரசித்த புருஷ்ராவார்.லோக க்ஷேமத்திற்காக நற்செயல்கள் செய்து உண்மையாகப் பாடுபடும் சத்சங்கங்களில் நம்மைப் பிணைத்துக் கொண்டாலன்றோ, சத்சங்கத்தை மௌனமாக இயக்கும் சித்த புருஷர்களிடமிருந்து மேற்கண்ட ஆன்மீகப் பொக்கிஷங்களைப் பெற இயலும்...!!
- 509
நாம் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு இந்த திரைப்படம்.
- 512
Added a news
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்ட அரச பணியாளர்களுக்கான வேதன திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதற்கமைய, மாற்றியமைக்கப்பட்ட புதிய வேதன அளவுத்திட்டங்கள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள்குறித்த விபரங்கள் சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.000
- 718
Added a news
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களை தெரிவு செய்வார்கள் என ஈ.பி.டி.பி.கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம்(25) மன்னார் தேர்தல் அலுவலகத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்த நேற்றைதினம் மன்னார் தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்தேன்.இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு, சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.அந்த வகையில் கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்களுடன் சென்று மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளேன்.இம்முறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட உள்ளோம். எதிர்வரும் காலங்களில் கடந்த காலத்தை போல மன்னார் மாவட்டத்தில் அனைத்து சபைகளிலும் போட்டியிட்டு அனைத்து சபைகளிலும் அதிகளவான உறுப்பினர்களை கைப்பற்றுவோம்.யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். என அவர் மேலும் தெரிவித்தார்.000
- 721
Added a news
கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலங்கை - இந்தியா இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்கு நேற்றையதினம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் வகையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராகவே இந்த வழக்குத் தொடரப்பட்டது. கச்சத்தீவை மீட்கக் கோரி அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக இருந்த மறைந்த ஜெயலலிதா, ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் சார்பிலும் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதியரசர் சஞ்சீவ் கன்னா, நீதியரசர்கள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பி.வில்சன் முன்னிலையானார்."கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும்,1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தமும் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் இந்த ஒப்பந்தங்கள் கேள்விக்குரியவை என சட்டத்தரணி நீதிமன்றில் தமது தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தார். மேலும், மனுதாரரான மறைந்த மு.கருணாநிதிக்குப் பதிலாக தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலுவை வழக்கில் இணைக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதியரசர்கள் ஆயம், இந்த வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு திகதியிட்டது.000
- 728