Ads
Empty
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 23 ஆம் தேதி மேஷம் -ராசி: சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் பொறுமை வேண்டும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையாட்கள் மத்தியில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். பதற்றமான சூழல் மறையும். பள்ளிப் பருவ நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம் ராசி: சக ஊழியர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலைச்சல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்மிதுனம் -ராசி: உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அசதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்கடகம் -ராசி: அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். விவசாய செயல்களில் பொறுமை வேண்டும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெண்மைசிம்மம் -ராசி:புதிய முயற்சியால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். மனதில் சுபகாரிய எண்ணங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் அன்பாக இருப்பார்கள். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் கன்னி -ராசி: நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். உணவுகளில் சற்று கவனம் வேண்டும். மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புதுலாம் -ராசி: எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புவிருச்சிகம்- ராசி: வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வேள்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் தனுசு -ராசி: இணையம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமகரம் -ராசி:உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்கும்பம் –ராசி:குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைப்பீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமீனம் -ராசி: புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் மேம்படும். வேகத்தை விட அமைதியை கடைபிடிக்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 296
ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.9.2024.சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 05.15 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி .இன்று பிற்பகல் 01.58 வரை சுவாதி. பின்னர் விசாகம்.உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 323
ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்."தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டாதான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. இதை எப்பவும் மறந்துடாதே!"அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. "நெய் சாப்பிட்டா பலமாயிட முடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை" என்று நினைத்தான்.ஆனாலும் பாட்டி மனம் கோணக் கூடாதே என்பதற்காக வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்க தான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். 'சிவப்புக் கலரில்' ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாது, அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில் என்று. டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். "யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?""நான் தான்ங்க. ஏன்?" அப்பாவியாக விசாரித்தான் இவன்."யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!"அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது."எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!" என்று நெகிழ்ந்தான்.
- 629
கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும் போது ,பெரும் புயலில் சிக்கி மூழ்கியது... அதில் இருந்த ஒருவன் மட்டும் எப்படியோ தப்பினான்... !அருகிலுள்ள தீவில் அவன் கரையேறினான்...!!இறைவா…இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்து விடு....!!என வேண்டினான்.ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பேன்...?என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா...??” என்று கண்ணீர் விட்டு பிரார்த்தனையும் செய்தான்...!!எந்த உதவியும் அவனுக்கு கிடைக்கவில்லை...!!இப்படியே சில நாட்கள் ஓடின...!!தன்னை காத்துக் கொள்ள,தீவில் கிடைத்த பொருட்கள்,மற்றும் கப்பலின் உடைந்த பாகங்களை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டினான்....!!அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள்,மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி தங்கியும் வந்தான்.....!!இப்படியே நாட்கள் ஓடின...!!.இவன் பிரார்த்தனையை மட்டும் விடவே இல்லை.கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை நம்பிக்கையோடு தேற்றிக் கொண்டான். ஒருநாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்று விட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.பட்ட காலிலே படும் என்பது போல…எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது. இவன் தங்குவதற் கென்று இருந்த ஒரே ஒரு குடிசையும் ,வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன.அதை பார்த்த இவன் அலறித் துடித்தான்.எல்லாமும் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய் விட்டது.“இறைவா… !என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே…!!இது தான் உன் நீதியோ…?”என்று கதறி அழுகிறான்.அப்போது ஒரு கப்பலின் பெரும் ஹாரன் சப்தம் இவனை எழுப்பியது.இவன் இருந்த தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது.“அப்பாடா…நல்ல வேளை…ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.”என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் அவனை,லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள்.தான் இங்கே தனியாக தீவில் மாட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்டான்...!!“தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. !யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி,சிக்னல் கொடுக் கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்......!!அப்போது இவனுக்கு குடிசை எரிந்ததற்கான காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.அந்த வழியில் கப்பல்கள் பெரும்பாலும் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் , தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு அப்போது புரிந்தது அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு விடுகிறோம். ஒரு சில நேரங்களில் நம்மை காக்கவே இறைவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும், நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே ...!!" சோதனை மேல் சோதனை என்றால்"..… இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்து விட்டது என்றே அர்த்தம் !!!வெகு விரைவிலே நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.
- 637
ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்து போனவர்களுக்கு, இந்த கார தோசை அசத்தலான மாற்றமான ஒரு நல்ல சுவையை நிச்சயம் கொடுக்கும். ரொம்பவே எளிதான சட்னி தேவையில்லாத கார தோசை சுடச்சுட மொறுமொறுன்னு இப்படி சுட்டு கொடுத்து பார்த்தால் பத்து தோசை இருந்தா கூட இன்னும் வேண்டுமென்று கேட்பார்கள்.பூண்டு கார தோசை செய்வதற்கு முதலில் வரமிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப எடுத்து சுத்தமான தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அதே போல சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்து விதைகள் நீக்கி கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு ஊற வையுங்கள். 10 பல் பூண்டு எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து ரெண்டு நிமிடம் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள மிளகாய்களை தண்ணீரை வடிகட்டி விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சுற்று சுற்றி எடுத்துவிட்டு பின் ஊற வைத்துள்ள புளியை சேர்த்து அரையுங்கள். இப்போது ஆறவிட்டு எடுத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து கொஞ்சம் போல கல் உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து எடுத்த இந்த விழுதினை கெட்டியாக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். தோசை கல்லில் வழக்கம் போல ஒன்றரை கரண்டி தோசை மாவை எடுத்து நன்கு பெரிதாக பரப்பிக் கொள்ளுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் வேக விட்டு அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள கார விழுதை அப்படியே தோசையின் மீது தடவ வேண்டும். அடிப்பகுதி நன்கு பொன்னிறமாக சிவந்தவுடன் அப்படியே முறுவலாக ஹோட்டலில் கொடுப்பது போல சுருட்டி எடுத்து தட்டில் வைத்து சட்னி கூட தேவையில்லை அப்படியே சாப்பிட்டு விடலாம், அவ்வளவு அருமையாக காரசாரமாக, ருசியாக இருக்கக்கூடிய இந்த கார தோசை ரெசிபியை இதே அளவுகளில் நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
- 653
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் தான் அந்த குடும்ப வாழ்க்கை என்பது சிறப்பாக அமையும். அப்படி குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்தால் தான் அவர்களுடைய பிள்ளைகள் சிறப்பாக வளருவார்கள். ஒரு குடும்பமே சிறப்பாக இருப்பதற்கு கணவனும் மனைவியும் தான் முக்கியமான காரணமாக திகழ்கிறார்கள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து ஒருமைப்பாடு இல்லாத பட்சத்தில் அந்த குடும்பம் நிம்மதியற்ற சூழ்நிலைக்கு போய்விடும். விநாயகர் சதுர்த்தி நாளன்று கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம். விநாயக பெருமானுக்கு பலவிதமான வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்வோம். விநாயகருக்கு 21 மலர்களை வைத்து அர்ச்சனை செய்வது, 21 இலைகளை வைத்து அர்ச்சனை செய்வது, 21 வகையான பழங்களை வைப்பது, என்று வழிபாடு செய்யும் பழக்கம் என்பது பலருக்கும் இருக்கும். அதே சமயம் விநாயகப் பெருமானை அலங்கரிப்பதற்காக பல வண்ண பூக்களை வாங்கி வந்து அலங்கரிப்பார்கள். அந்த மாதிரி பூக்களை வாங்கும் பொழுது வெள்ளெருக்கு பூவையும் வாங்கி விநாயகப் பெருமானுக்கு சூட்ட வேண்டும். இந்த மலரை பொறுமையாக பிரித்துப் பார்த்தோம் என்றால் அதற்கு நடுவே இரண்டு காம்புகள் ஒன்றாக சேர்ந்து இருக்கும். அந்த இரண்டு காம்புகள் தான் கணவனும் மனைவியும். அப்படி கணவனும் மனைவியும் சேர்ந்து இருக்கக்கூடிய அந்த பூவை மாலையாக தொடுத்து விநாயகப் பெருமானுக்கு சூட்டி வழிபாடு செய்தோம் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் என்றென்றும் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் பூக்களை பறித்து மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். இதை விநாயக சதுர்த்தி அன்று புதிதாக வாங்கி வரும் விநாயகருக்கும் போடலாம். வீட்டில் ஏற்கனவே இருக்கும் விநாயகர் சிலைக்கும் போடலாம். வீட்டில் இருக்கக் கூடிய விநாயகரின் படத்திற்கும் போடலாம். இப்படி இந்த மாலையை போட்டு முடித்து அவருக்குரிய பிரசாதங்களை நெய்வேத்தியமாக வைத்து மனதார கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும், குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் அவர்கள் நினைத்தது போலவே கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். இந்த பூக்களை பறித்து தங்களால் தொடுக்க முடியாது என்னும் பட்சத்தில் விநாயக சதுர்த்தி அன்று கடைகளிலும் விற்கும் அந்தப் பூ மாலையும் வாங்கி சூட்டலாம். விநாயகப் பெருமானுக்கு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கிறது.
- 658
திருமணத்திற்கு முன்அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…அவள் : என்னை அடிப்பீர்களா?அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!அவள் : நான் உங்களை நம்பலாமா?அவன் : ம்ம்ம்.அவள் : அன்பே…!திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்.குறிப்பு( இது சொந்த ஆக்கம் கிடையாது.ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் )
- 968
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 22 ஆம் தேதி மேஷம் -ராசி: தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம் ராசி: ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். திறமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைமிதுனம் -ராசி: பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சிரமம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கடகம் -ராசி: உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். நஷ்டம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்சிம்மம் -ராசி:திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்கால முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். திடீர் அனுபவம் மூலம் மனதில் சில பக்குவம் உண்டாகும். கவலை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வாடிக்கையாளர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்துலாம் -ராசி: தொழில் நிமித்தமான திட்டங்கள் கைகூடும். குழந்தைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்விருச்சிகம்- ராசி: வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பணி நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். எண்ணியது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். பாசம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் தனுசு -ராசி: பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனை விற்பனையில் லாபம் மேம்படும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமகரம் -ராசி:உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுகும்பம் –ராசி:குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைப்பீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமீனம் -ராசி: புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் மேம்படும். வேகத்தை விட அமைதியை கடைபிடிக்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 1287
ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 7.9.2024சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 06.38 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி . இன்று காலை 11.44 வரை சித்திரை. பின்னர் சுவாதி. பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 1300
மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM‘ நேற்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம் கொண்ட இந்தக் கப்பலானது, 20 அடி கொள்கலன்களை சுமக்கக் கூடியது எனவும், இதனை ஆசியாவின் நங்கூரமிட ஒரு சில துறைமுகங்களால் மட்டுமே முடியும் என்றும் அந்த வரிசையில் கொழும்பு துறைமுகமும் ஒன்றாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆழ்கடல் முனையமாக கொழும்பு துறைமுக, கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்பட்டு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதனாலேயே தற்போது இந்தப் பெரிய கப்பலை நங்கூரமிட முடிந்துள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.இதன் பயனாக சீனா - ஐரோப்பா - மத்திய தரைக்கடல் சார்ந்த வர்த்தக பாதையில் இலங்கையின் முக்கியத்துவம் நிரூபிக்கப்படுவதால் புதிய சந்தைவாய்ப்பு, முதலீடுகள், தொழில்வாய்ப்பு போன்றன இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்000
- 1349
சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபாலவினால், மாகாண சுகாதார செயலாளர்கள், கொழும்பு, கண்டி மற்றும் காலி தேசிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகங்கள், அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள், அனைத்து தர வைத்திய அதிகாரிகள், விசேட பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இதனை திருத்துமாறு 01-07-2024 அன்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால விடுத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.000
- 1348
1961ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனா தனது வெப்பமான ஆகஸ்ட் மாதத்தை இவ்வாண்டு பதிவு செய்ததாக அந்நாட்டுத் தேசிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.இவ்வாண்டு சீனாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையான வானிலை, வெப்ப அலைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டன.கரியமில வாயுவை வெளியேற்றுவதில் சீனா முன்னணியில் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால், உலகளாவிய பருவநிலை மாற்றம், தீவிர வானிலை நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.கரிம வாயு வெளியேற்றத்தை 2030ஆம் ஆண்டுக்குள் உச்சத்திற்குக் கொண்டுவந்து, பின்னர் 2060ஆம் ஆண்டுக்குள் அதை நிகரப் பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவரவும் சீனா உறுதிபூண்டுள்ளது.இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீனா நீடித்த, அதிக வெப்பநிலையை அனுபவித்தது என அந்நாட்டு வானிலைத் துறை நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்தது.ஆகஸ்ட் மாதத்தில் தேசியச் சராசரி வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இது சராசரியாக ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகும் வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகம் எனச் சீனாவின் தேசியப் பருவநிலை மையத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஜியா சியாலாங் கூறினார்.000
- 1352
நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 11,12,13, மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட தினமாக நாளைய தினத்தை அறிவித்து அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி, நாளைக் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையில் இந்தப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்படும்.குறித்த தினங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்குப் பொறுப்பான அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.000
- 1354
ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும், ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். கடந்த காலங்களில், சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாகக் காணப்பட்டது. இந்தச் சுகாதார முறைமைகள் இலங்கையிலும் தெற்காசிய நாடுகள் முழுவதிலும் பல ஆண்டுகள் பரலாகக் காணப்பட்டது.இப்போது இந்தியா உள்நாட்டு மருத்துவம் குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இலங்கையில் அது நடக்கவில்லை தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள பிரபலமான உணவகங்களுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம்.இந்தத் திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும். எனவே, சுற்றுலாத்துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.000
- 1355
நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரசார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் இன்று (07) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது09 மாகாணங்கள், 160 தேர்தல் தொகுதிகள், 341 உள்ளுராட்சி மன்றங்கள், 4984 வட்டாரங்கள், 14026 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 53,896 கிராம வீதிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை மக்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதன் கீழ் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்தை எதிர்கொள்ளாத வகையில் பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் இந்தப் பிரச்சாரத்தில் இணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது0000
- 1358
ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் இதற்காக ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் டபிள்யூ.ஜே.பெர்னாண்டோ தலைமையில் சுதேச மருத்துவம் தொடர்பான முதலாவது குழு அறிக்கை தயாரிக்கப்பட்டது.அதன் பின்னர் அவ்வாறான அறிக்கைகள் எவையும் வரவில்லை. உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும், ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர்.கடந்த காலங்களில், சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. அதற்கான மதிப்பும் கிடைத்தது. இப்போது இந்தியா உள்நாட்டு மருத்துவம் குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.இலங்கையில் அது நடக்கவில்லை. எனவே உள்நாட்டு மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளும், அதன் வரலாறுகள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த துறையை மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்வோம். இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும். இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தையும் அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சட்டமொன்றை கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை நிறுவுவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம்.ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- 1753