• 891
 • More

தமிழ்பூங்கா இணையதளத்தில் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இடுகைகளை பதிவேற்றவும். புள்ளிகளை உருவாக்கி பரிசு பெறுங்கள்.

All gift are for Ontarian only

தமிழ்பூங்கா இணையதளத்தில் இணையுங்கள். உங்கள் பூத் தோட்டங்கள், காய்கறிகள், உங்கள் சுற்றுலா போன்றவற்றின் புகைப்படங்களை நீங்கள் பதிவு செய்யலாம் . தயவு செய்து புகைப்படங்கள் உங்களது சொந்தமாக இருக்க வேண்டும், மற்ற இணையதளங்களில் இருந்து பதிவு செய்ய வேண்டாம்.  (அதற்கான புள்ளிகளைப் பெற முடியாது.).

நீங்கள் பரிசு பெற முடியும்.

Tim Horton's gift cards $10.00 for 1000 points you need.

Car wash Cards from ESSO or Shell gas station - Full was card  $15.00 Dollars valuable.   1500 points you need.

Sarees-  $50.00 dollars Valuable for 2000 points you need. 

Join now,  we gift 200 points free now.  

All gift are for Ontarian only  - not others Province or Countries. Sorry for that. 

Every time you post anything. You can see the points on your points table- click on money bar to see. Top right side of the website.

Only one gift per person.  (sample: if you get Tom Card then you can get car wash or Saree. Only one time. We will add more gift.)

If you have any question you can post here.  We wll answer this page only. not email please.

Attachments
Replies (4)
Added a post  
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.6.2024.சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 07.44 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.இன்று மாலை 06.58 வரை கேட்டை. பின்னர் மூலம் .அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். ‍https://tamilpoonga.com/s/bx_posts_photos/2mepc8kafyyiapuwk4sss9jdueymrpgj.jpg
 • 54
Good Morning..
 • 56
Added a news  
 • 239
Added a news  
கள்ளக் குறிச்சியில் 38 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து 45 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறேன்.கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம், மதுராந்தகத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனினும் அது நடக்கவில்லை.தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.கள்ளச் சாரயம், கஞ்சா விற்பனையில் தமிழ்நாடு தள்ளாடுகின்றது. எனவே தி.மு.கவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 • 241
Added a news  
கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர்.இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. போலீசார் முன்னெடுத்த விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.இந்த இரட்டை கொலை மற்றும் தற்கொலை சம்பவங்களின் பின்னணி குறித்து கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி வாக்குமூலம் ஒன்றை அடித்துள்ளார். தமது கணவர் கொடிய மனிதர் அல்ல எனவும் ஏமாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட விரக்தியே இந்த கொலைகளுக்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.மிக நீண்ட காலமாக தமது கணவர் ஏமாற்றப்பட்டு வந்ததாகவும் இதனால் மன அழுத்தமடைந்து இவ்வாறு படுகொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களது குடும்பத்தினர் சேமித்து வைத்திருந்த பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.இந்த சம்பவத்தில் 54 வயதான ஆராஷ் மிஸாகி, 44 வயதான சமீரா யூசுப்பி ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். மேலும், 46 வயதான எலன் கார்ட்ஸ் என்பவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.யாருடைய உயிரையும் பறிப்பதற்கு உரிமை அற்றவர்கள் என்ற போதும் மிகவும் மன விரக்தி காரணமாக இந்த தீர்மானத்தை அவர் எடுத்திருப்பதாக எலனின் மனைவி தெரிவித்துள்ளார். அடகு கடன் தொடர்பில் இடம்பெற்ற 1.28 மில்லியன் டொலர் மோசடி சம்பவத்தின் பாதிக்கப்பட்டவர்களில் எலனின் குடும்பமும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது. 
 • 244
Added article  
முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.மும்பையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது.
 • 246
Added a news  
நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரை, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு ஜெய்சங்கரின் முதல் விஜயம் இதுவாகும்.
 • 246
Added a news  
இலங்கை - இந்திய இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து ஆராயும் முகமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் நாட்டை வந்தடைந்துள்ளார்..இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையின் அடிப்படையாக அவரின் முதல் விஜயம் அமைந்துள்ளது.கடல்மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக் கொண்ட இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டும் முகமாக இந்த விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.குறித்த விஜயத்தின் போது அவர், பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உள்ளிட்ட பல பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 109 வீடுகளையும் மெய்நிகர் ஊடாக உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது டில்லி விஜயத்தின் போது இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்டில் அவர் இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்து ஆராய்வது காலநிதி ஜெய்சங்கரின் விஜயத்தில் முக்கிய அம்சமென்பதும் குறிப்பிடத்தக்கது000
 • 417
Added a news  
இஇலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.சீன தலைநகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு சீனா எப்போதும் உதவுகின்றது.  அதேபோன்று இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு ஆதரவளிப்பதற்கான விடயத்துடன் தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.000
 • 420
Added a news  
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் நேற்று சட்டவிரோத மதுபானம் அருந்திய 32 பேர் இதுவரையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 103 பேர் வரை கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி - கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானத்தினை அருந்தியவர்கள் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சினைகளால் திடீரென பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் மதுபானம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் சட்டவிரோத மதுபானம் அருந்தியமை தெரியவந்துள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது000
 • 419
Added a news  
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விமர்சனங்களின் பின்னணியில், இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக அணித் தலைவர் வனிந்து ஹசரங்க குற்றம் சுமத்தியுள்ளார். இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறிய நிலையில், இலங்கை அணியினர் நேற்று (19) நாடு திரும்பினர். இந்த தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் திறன் வெளிப்பாடு மிக மோசமாக இருந்த நிலையில் அணியின் வீரர்கள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டிருந்த வனிந்து ஹசரங்க, சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் ஊடாக அணியின் வீரர்களையும் இரசிகர்களையும் பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.விமான நிலையத்தில் வைத்து இது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இவ்வாறான பதிவுகளின் பின்னணியில் செயற்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக தாம் அறிந்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.000
 • 421
Added a news  
 மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னர் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்வதற்கு உரிய பரிந்துரைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இந்த பரிந்துரை மற்றும் நடைமுறைகளை உரிய வகையில் தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.000
 • 421
Added a news  
கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர்களுக்கு செவிசாய்த்ததன் காரணமாகவே நாட்டில் கொவிட் தொற்று அனர்த்தமாக பரவியதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டுகிறார்.ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவில் பரவி வரும் உடலை அரிக்கும் கொடிய பாக்டீரியாக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான வீதிகளான விமான நிலையம் மற்றும் துறைமுக நுழைவாயில்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறும், சில அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதிப்பதற்கு தேவையான பரிசோதனை நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.எக்காரணம் கொண்டும் இந்த கொடிய பக்டீரியா இலங்கைக்கு வருமாயின் அரசாங்கம் நிபந்தனையின்றி சுகாதார துறைக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க வேண்டும் எனவும் மருந்துகள் தேவைப்படின் அவசர கொள்வனவு முறையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எவ்வாறாயினும், இதுவரை எமது நாட்டில் இந்த பக்டீரியா தொற்றினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வீதி ஆலோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் வைத்தியர் சமில் விஜேசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.000
 • 423
Added a news  
எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவ கலாநிதி துசானி டபரேரா இது தொடர்பில் தகவல்களை பகிர்ந்துள்ளார்.நெற் பயிர்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் சுரங்கம் தோண்டுதல் போன்ற அதிக ஆபத்துள்ள தொழில்களில் ஈடுபடும் ஆண்கள் மத்தியிலேயே இந்த நோயின் தாக்கம் முன்பு இருந்து வந்ததுஎனினும் பல ஆண்டுகளாக, பெண்கள் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 9,000 நோய்த்தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டில் இதுவரை 5,000 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.இந்த தொற்றுக்களில் பெரும்பாலானவை இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் போன்ற பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளன.இந்நிலையில், கடுமையான மழையைத் தொடர்ந்து தொற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கிறதுஇந்த நோய் தசை வலி, மஞ்சள் காமாலை, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது.இறுதியாக, கடுமையான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம், இதயம் அல்லது சுவாச செயலிழப்புக்கு இந்த நோய் வழிவகுக்கும் என்றும் தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவ கலாநிதி துசானி டபரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 • 421
Added a news  
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 நேற்று ஆரம்பமானது.இந்த கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்.சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.000
 • 424
Added a news  
நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு (07) ஏழாம் வட்டார பகுதியில் இன்று அதிகாலை கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுஇருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே கொலை செய்யப்பட்டவரின் வீட்டிலே வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் கொலை செய்யப்பட்டவர் நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் தேவராஜ் அருள்ராஜ் வயது 23 என்பவராவரார்கொலை செய்யப்பட்டவர்அடி காயங்களுடன் நெடுந்தீவு 07ம் வட்டார பகுதியில் அடிகாயங்களுடன் சடலமாக. இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு அதன் பின்னர் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனகொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்000
 • 423
Added a news  
இலங்கை எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் மீளப் போவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக எதிர்நோக்கி வரும் இந்த நிலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.அதற்கமைய, இலங்கையை திவால் நிலையில் இருந்து விடுவிப்பதாக எதிர்வரும் 28 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியன்று, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதமையால் திவால் அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 000
 • 425
Added a news  
டி20 2024 உலக கிண்ண தொடருக்கான சூப்பர் 8 சுற்று மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.20 அணிகள் பங்குகொண்ட முதல் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் 2ஆம் சுற்றுக்கு தெரிவான 8 அணிகள் தற்போது பலப்பரீட்சை நடத்துகின்றன.இதன் அடிப்படையில் இன்று இடம்பெற்ற சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது போட்டியில் நடப்பு சம்பியனான இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளை 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 20ஓவர் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.மேற்கிந்தியதீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக ஜோர்சன் சார்லஸ் 38 ஓட்டங்களையும், ரௌமன் பவல் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இதனை தொடர்ந்து 181 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சால்ட், மற்றும் பட்லரின் இணைப்பாட்டம் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.22 பந்துகளை சந்தித்த பட்லர் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அதன் பின்னர் சால்ட் மற்றும் ப்ரஸ்ட்ரோ ஜோடி அணிய வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றது.17.3 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து இங்கிலாந்து அணி வெற்றியிலக்கை கடந்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் ரசல் மற்றும், ரோஸ்ட்ரான் சார்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.000
 • 424
Added a news  
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை ஒன்றை எட்டவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்களை வழங்கும் போது ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று நடைபெற்ற சர்வதேச தொழில் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.இதன்படி, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பசுமைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளன.000
 • 422
Added a news  
Twenty20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளதுஅதன்படி, நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.அதன்படி, முதலில் தென்னாபிரிக்க அணி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.இதனையடுத்து, 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.000
 • 428
Added a news  
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் கடந்த 17ஆம் திகதியில் இருந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்போது பணயக்கைதிகளை விடுதலை செய்யுமாறும், தேர்தலை விரைவாக நடத்துமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதேவேளை இப்போராட்டத்தின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெடித்த வன்முறையில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் வன்முறையில் 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”போரைக் காரணம் காட்டி பொதுத் தேர்தலை 2026 ஆம் ஆண்டு நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 000 
 • 428
Added a post  
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆனி மாதம் 6 ஆம் தேதி மேஷம் -ராசி: எதிலும் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில்நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். அலுவலகங்களில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் ரிஷபம் ராசி: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மிதுனம் -ராசி: கனிவான பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்கடகம் -ராசி: உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு படுத்துவது தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பூர்வீகம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். திறமை வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்சிம்மம் -ராசி:நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் சேர்ப்பது குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் கன்னி -ராசி: பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். எழுத்து துறைகளில் அனுகூலம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். தேர்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் துலாம் -ராசி: குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புவிருச்சிகம்- ராசி: சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கேலிப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். இனம்புரியாத பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபார முயற்சிகளில் பொறுமை காக்கவும். அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை தனுசு -ராசி: நண்பர்களுக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களால் விரயங்கள் ஏற்படும். சாட்சி கையெழுத்து தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் உழைப்புக்கான உயர்வு உண்டாகும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறதி விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மகரம் -ராசி:குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதாகும்பம் –ராசி:உணர்வுபூர்வமாக செயல்படுவதை குறைக்கவும். திடீர் முடிவுகளால் மனதில் மாற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த விஷயங்களை பகிராமல் இருக்கவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்மீனம் -ராசி: குடும்ப உறுப்பினர்களிடத்தில் புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழல் அமையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
 • 480
Added a post  
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 6 ஆம் தேதி வியாழக்கிழமை 20.6.2024.சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 07.40 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று மாலை 06.25 வரை அனுஷம். பின்னர் கேட்டை.ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.‍‍https://tamilpoonga.com/s/bx_posts_photos/2qn3fcijravag3lqhxalzlfptcev2klp.jpg
 • 490
Good Morning..
 • 492
Added a news  
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வெப்ப நிலை காரணமாக மாணவர்கள் பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாகாணத்தில் வெப்ப அலை நிலவி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய சுற்றாடல் திணைக்களம் வெப்ப அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டொரன்டோ உள்ளிட்ட ஒன்றாரியோ மாகாணத்தின் அனேக பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றது.வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் வயோதிபர்களும், பாதிப்புகளை எதிர் நோக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வகுப்பறைகளில் கற்கும் மாணவர்கள் அதிக அளவில் வெப்பநிலையினால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. மின்விசிறிகள் மூலம் இந்த வெப்பநிலையினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கட்டுப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சில பாடசாலைகளில் காற்று சீராக்கிகள் காணப்பட்ட போதிலும் பல பாடசாலைகளில் மின்விசிறிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரம் வெப்பநிலை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 • 612
Added a news  
ஜப்பானில் பரவி வரும் அரிய பாக்டீரியா தொற்று தொடர்பில் இலங்கையர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.அரிய பாக்டீரியா தொற்று பரவல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்."இது பொதுமக்களிடையே உள்ள பாக்டீரியா பரவல் நிலை. அரிதாக, இது ஒரு சிக்கலாக அபாயகரமான நிலையை ஏற்படுத்தலாம். ஜப்பான் சமீபத்தில் பாக்டீரியா பரவல் அதிகரிப்பதைக் கவனித்ததாகத் தெரிவித்துள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் இதை மாற்றவும் முடியும். ஆனால் அரிதாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்களும் உள்ளன. இருப்பினும் நம் நாட்டில் பாக்டீரியா பரவிவிடுமோ அல்லது பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற தேவையற்ற அச்சத்தை யாரும் கொள்ள தேவையில்லை'' எனவும் டொக்டர் சமித்த கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.
 • 644
Added a news  
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கமைய நடிகையும், மொடல் அழகியுமான பியூமி ஹன்சமாலியின் 19 கணக்குகளின் பதிவுகளை பெறுவதற்கு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அனுமதி வழங்கியுள்ளார். பியூமி ஹன்சமாலியின் இந்த வங்கி கணக்குகள் எட்டு முன்னணி வங்கிகளில் உள்ளன.80 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் மற்றும் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொழும்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், பியூமி ஹன்சமாலியின் பல வங்கி கணக்குகளில் குறுகிய காலத்தில் வைப்பிலிப்பட்ட நிதியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • 666
Added article  
நடிகன் என்ற ஸ்டார் அந்தஸ்து வந்த பின்னர், எனக்கு இந்த அந்தஸ்து எல்லாம் தேவையற்றது என்று விலகி செல்ல முடியுமா? சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து என்பது அரசியல்வாதிகளின் நாற்காலி ஆசை போன்றது. அது ஒரு போதை, அதை அனுபவித்தால் மேலும், மேலும் வேண்டுமென்ற ஆசை ஏற்படும் அளவிற்கு புகழ் போதை ஒரு மனிதனை ஆட்கொண்டுவிடும். இவ்வளவும் கிடைத்த போதிலும் அதை தூக்கி எறிந்துவிட்டு, தன் தந்தையின் நிறுவனத்தை இயக்க சென்றவர்தான் தற்போதைய ஈவில் நடிகர், அப்போதைய சாக்லேட் பாய் அரவிந்த் சாமி.இவர் நடிகனாக எவ்வளவு பெயர்களை சம்பாதித்தாரோ அதேபோல தொழிலும் சம்பாதித்துள்ளார் என்றே சொல்லலாம். அரவிந்த் சாமியின் அப்பா வி.டி. சாமி என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மெலட்டூர் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தொழில் தொடங்குவதற்காக சென்னைக்கு வந்தார். வி.டி. நிறுவனம் இரும்பு ஏற்றுமதியில் பிரசித்தி பெற்று விளங்கியது. மேலும் பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து தொழில் செய்தது. இதுபோன்ற குடும்பத்திலிருந்து வந்தவர் அரவிந்த் சாமி. என்னதான் அப்பா பணக்காரராக இருந்தாலும் கால்லூரி காலங்களில் பாக்கெட் மணி குறைவாகாதான் தருவாராம். காசு பற்றாக்குறையின் காரணமாகவே லயலோ கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலமாகவேதான் மணிரத்தனத்திற்கு அறிமுகமாகி தளபதி படத்தில் கலெக்டராக நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோஜா படத்தில் நடித்தார். அதிலும் நல்ல பெயரை பெற்றார், மக்கள் மத்தியிலும் நன்கு பிரபலமாகத் தொடங்கினார். அதன்பின் மலையாளம், தெலுங்கிலும் கால்பதித்தார்.லயோலா கல்லூரியில் பி.காம் படித்தவர். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வேக் பாரஸ்ட் பல்கலைக்கழத்தில் சர்வதேச பிசினஸ் படித்து மாஸ்டர் பட்டம் பெற்றார். இதனைத்தொடர்ந்தும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் 2000 ஆம் ஆண்டில் அலைபாயுதே படத்தில் கெஸ்ட் கதைப்பாத்திரம் நடித்துவிட்டு வெள்ளித்திரைக்கு விடைகொடுத்தார். எங்கே சென்றார் என்று தமிழகமே வலைவீசி தேடிக்கொண்டிருக்கையில், அவரது அப்பா நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். இதுமட்டுமல்லாமல், பன்னாட்டு வர்த்தகத்திலும், கட்டடக்கலை சார்ந்த வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார். ப்ரோ ரிலீஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனராகவும், இன்டெர்ப்ரோ என்ற நிறுவனத்தில் தலைவராகவும் செயல்பட்டுள்ளளார். பின்னர் தானே சொந்தமாக டேலண்ட் மக்சிமஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு கீழ் 5000 பேர் வேலை பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இப்படி தொழிலிலும் பிரசித்தி பெற்று வந்தவருக்கு ஒரு விபத்தினால் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது. இதனால் நான்கு வருடங்களை படுக்கையிலே கழித்தார். இதனால் அவரின் தோற்றமே மாறியது. கட்டுமஸ்தான அழகிய தோற்றத்தில் எல்லோரையும் கவர்ந்தவரின் உடல் குண்டானது. நிலைகுலைந்த தனிமையில் இருந்தவரை மீண்டும் நீ நடிக்க வா என்று கடல் படத்திற்காக அழைப்புவிடுத்தார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து வந்த தனி ஒருவன், அரவிந்த் சாமிக்கான அந்த பழைய ஸ்டார் அந்தஸ்தை கொண்டுவந்துவிட்டது. அரவிந்த் சாமி எவ்வளவு சிறந்தவரோ, அதை விட வணிகத்தில் சிறந்தவர் என்ற பெயரை சம்பாதித்துவிட்டார்.
 • 671