Ads

'தளபதி 66' பூஜையில் விஜய், ராஷ்மிகா

தளபதி 66

  • 1139
  • More
  • 769
  • More
  • 732
  • More
  • 760
  • More
  • 744
  • More
  • 752
  • More
  • 768
  • More
Comments (0)
Login or Join to comment.
·
Added a news
ஈரான் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடியில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களின் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த முதலாம் திகதி இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் மீது 180 சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் ஆதரவுடன் வழிமறித்து தாக்கியதாக இஸ்ரேலும், 90 சதவிகித ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கியதாக ஈரானும் அறிவித்திருந்தது.ஈரானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்க வகையில், அந்நாட்டின் எண்ணெய் ஆலைகள், அணுசக்தி தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பை தாக்குவதற்கான திட்டத்தை இஸ்ரேல் வகுத்து வருகின்றது.இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதில் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா உதவாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம் என்று அறிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், பிற நாடுகளுக்கும் ஆயுதத் தடை விதிக்க கடந்த வாரம் அழைப்பு விடுத்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாமலேயே போரில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.000
  • 191
·
Added a news
கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.கிம் ஜாங் உன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய வடகொரிய ஜனாதிபதி கிம்,கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தினால் எந்தவித தயக்கங்களும் இன்றி எங்கள் எதிரிகளின் மீது எல்லா விதமான தாக்குதல்களையும் பயன்படுத்துவோம். அதில் அணு ஆயுதங்களுக்கும் விதிவிலக்கு இல்லை.தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு அணுசக்தி அடிப்படையில் தங்கள் இராணுவக் கூட்டணியை வலுப்படுத்த முயல்வதால் வட கொரியாவின் அணுசக்தி முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டும். இது கொரிய தீபகற்பத்தின் மீதான அதிகார சமநிலையை உடைக்கும் ஆபத்தை அதிகரிக்கும்.” என்றார்.ஏற்கெனவே பலமுறை அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக கிம் மிரட்டல்கள் விடுத்திருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த புதிய மிரட்டல் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது.வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் பொருட்டு அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் - தென் கொரியாவின் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஜூலையில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.தென் கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை. வட கொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சித்தால், அதுவே கிம் ஆட்சியின் முடிவாக இருக்கும் என அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்00
  • 193
·
Added a news
முல்தானில் இங்கிலாந்து கிரிக்கெட் நட்சரத்திரங்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் அசுரத் தனமான இணைப்பாட்டத்துடன் சில குறிப்பிடத்தக்க டெஸ்ட் சாதனைகளை தகர்த்தனர்.பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களை பதம் பார்த்த இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 454 ஓட்டங்களை குவித்தது.டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகடியான இணைப்பட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது மிக உயர்ந்த இணைப்பாட்டமாகவும் இது பதிவு செய்யப்பட்டது.முன்னதாக 1957 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான‍ போட்டியில் அப்‍போதைய இங்கிலாந்து வீரர்களான பிபிஹெச் மே, எம்சி கௌட்ரே ஆகியோர் 411 ஓட்டங்களை குவித்திருந்தனர்.பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், ஜோ ரூட் 375 பந்துகளில் 262 ஓட்டங்களை குவித்தார். அவரது இன்னிங்ஸில் 17 பவுண்டரிகள் அடங்கும்.மறுபுறம் ஹாரி புரூக், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 300 ஓட்டங்களை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஆறாவது இங்கிலாந்து துடுப்பாட்ட வீரராகவும் அவர் மாறினார்.புரூக்கின் 317 ஓட்டங்கள் வெறும் 322 பந்துகளில் வந்தது. அவரது இன்னிங்ஸில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 29 பவுண்டரிகளும் அடங்கும்.இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த இரண்டாவது வீரராக அவர் ஆனார்.2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய நட்சத்திரம் வீரேந்திர சேவாக், 278 பந்துகளில் முச்சதத்தை பூர்த்தி செய்திருந்தார்.ரூட் மற்றும் புரூக் இப்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் தலா 250 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது ஜோடி ஆனார்கள்1958 இல் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கான்ராட் ஹன்டே (260), கேரி சோபர்ஸ் (365) ஆகியோர் இந்த அரிய சாதனையை ஆரம்பத்தில் பதிவு செய்திருந்தனர்அதன் பின்னர், 2006 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை நட்சத்திரங்களான மஹேல ஜெயவர்த்தனே (374), குமார் சங்கக்கார (287) ஆகியோர் இந்த சாதனையை படைத்தனர்.ரூட் மற்றும் புரூக்கின் இந்த துடுப்பாட்டம் இங்கிலாந்துக்காக புதிய சாதனைகளை படைத்தது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த இணைப்பாட்டத்தில் அவர்களின் இடத்தையும் பிடித்தது.அவர்களின் சிறப்பான ஆட்டத்தால், முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானின் 556 ஓட்டங்களை விஞ்சி, இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 823 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.000
  • 194
·
Added a news
இனிவரும் நாள்களில் நிகழ்வுகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார். அரச நிதியைப் பெற்று முன்னெடுக்கப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும் போது, அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாகச் செயற்படுவது அவசியமானது எனவும் அரச நிறுவனங்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனச் சபைகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.00
  • 195
·
Added a news
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் (11) நிறைவடையவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்றையதினம் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.  இதுதவிர, பல கட்சிகள் நேற்றையதினம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்றைய தினம் கையளித்திருந்தது.அந்தக் கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இந்த வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேசிய மக்கள் சக்தி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தது. இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்பு மனு நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தறை மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு, கம்பஹா, மாத்தறை, மாத்தளை, ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திடும் செயற்பாடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இந்தநிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று காலை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது. அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் கம்பஹா, களுத்துறை, பதுளை, புத்தளம், அநுராதபுரம், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த கட்சியின் சார்பில் நேற்றைய தினம் மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஈ.பிடி.பி ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய வேட்புமனுக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எம்.பிரதீபனிடம் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 000
  • 205
·
Added a news
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வரை 10 அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பில் போட்டியிடுவதற்காகவே 19 வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இதேநேரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக 34 சுயேட்சை குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்.வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று வெள்ளிக்கிழமை இறுதித் தினம் என்பதனால் இன்று ஒரே நாளில் அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.000
  • 206
·
Added article
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடித்திருந்தார்.தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் பிரபலமானார். தனக்கென்று தனி இடத்தை தெலுங்கு சினிமாவில் வைத்திருக்கும் இவர், வேட்டையன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராணா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் படத்திற்காக ரூ. 5 கோடி சம்பளமாக ராணா வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.
  • 668
நடுத்தர மக்களும் காரில் பயணம் செய்ய வேண்டும் என நினைத்து 1 லட்சம் ரூபாய்க்கு நானோ கார் தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சேவை மனப்பான்மையுடைய மாமனிதர் ரத்தன் டாடா.....
  • 670
  • 680
ஒவ்வொரு மாதமும் ஒரே இடத்தில் (12 - மாதங்கள்) எடுக்கப்பட்ட புகைப்படம்.இயற்கை.. அருமையான படம்.
  • 687
·
Added a post
ஒரு நேர்முகத்தேர்வுக்காக ஐந்து பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டனர். அங்கு தங்களுக்குள் அரட்டை அடித்துச் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.இதைக் கண்ட அதிகாரி தனது பணியாளரை அழைத்து அவர்களைப் பேசாமல் இருக்கச் சொல் என்றார்.பணியாளர் போன சில நிமிடத்தில் அங்கு அமைதியாகி விட்டது.அதிகாரிக்கு ஆச்சர்யம். அவர் பணியாளரிடம் விசாரித்தார்.பணியாளர் சொன்னார். அந்தப் பெண்களிடம் "உங்களில் மூத்தவர் யார்?" என்றேன் அவ்வளவுதான். சத்தமே இல்லை..கப் ப் சிப் .
  • 695
·
Added a news
1937-ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் ரத்தன் டாடா. தனது கல்லூரி மேல்படிப்பை ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். எனினும் சில ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார். 1962 இல் தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1970களில் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட துணை நிறுவனமான நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சாதித்தார். பின்னர் அடுத்தடுத்து பல பொறுப்புகளில் வகித்த அவர் 1991ம் ஆண்டில் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் டாடா இண்டஸ்ட்ரீஸ் பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அவர் 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த காலத்தில், குழுமத்தின் வருவாய் கடுமையாக அதிகரித்து, 2011-12ல் $100 பில்லியனை எட்டியது. பின்னர் அவர் அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை தற்காலிக தலைவராக ஆனார். இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். இந்தியாவின் சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் வளர்ச்சியில் ரத்தன் டாடா முக்கிய பங்கு உண்டு. ரத்தன் டாடா இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வந்தார். ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு இப்போது 3800 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில் பெரும்பகுதி டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வருகிறது. ரத்தன் டாடாவிடம் பல சொத்துக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மும்பையின் கொலாபாவில் உள்ள ஆடம்பரமான பங்களா. சுமார் 13,350 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடி வீடு உள்ளது. ரத்தன் டாடாவின் இந்த ஆடம்பரமான வீட்டில் ஒரு தனியார் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், ஊடக அறை மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளன. அண்மையில் அப்ஸ்டாக்ஸ் பங்கு புரோக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தனது 5 சதவீத பங்குகளை விற்பனை செய்தார். அதன்பிறகு 2008 ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் உள்ளிட்டவற்றை ஃபோர்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. 2009ம் ஆண்டில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகவும் விலை குறைந்த காராக இந்த காரை ரத்தன் டாடா அறிமுகம் செய்து வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டு இருந்து வந்த அவர் கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெறும் வரை டாடா குழுமத்தை வழிநடத்தினார்.வயது மூப்பு காரணமாக ரத்தன் டாடா (86) அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே ரத்தன் டாடாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் 09.10.24 புதன் இரவு இயற்கை எய்தினார்.
  • 695
·
Added a post
இன்று சமையலறையில் முக்கிய இடம் வகிப்பது ப்ரிட்ஜ் தான். சிலரது வீட்டில் ப்ரிட்ஜை திறந்ததும் வரும் துர்நாற்றம் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும். இதற்கு ஒரே தீர்வு மாதம் ஒரு முறை ப்ரிட்ஜை சுத்தம் செய்வது தான்.இதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதும். ப்ரிட்ஜை சுத்தம் செய்ய சரியான நேரம் ப்ரிட்ஜில் குறைவாக பொருட்கள் இருக்கும்போது தான். அப்போது தான் சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.1.சுத்தம் செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக ப்ரிட்ஜ் மற்றும் ஸ்டெப்லேசரின் மின் இணைப்பை நிறுத்த வேண்டும். இதனால் ஃபீரீசர் மற்றும் ப்ரிட்ஜில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.2.இப்போது ப்ரிட்ஜில் உள்ள பொருட்களை அதன் தட்டில் உள்ளவாறே தனித்தனியாக வெளியேற்ற வேண்டும். இது மீண்டும் பொருட்களை அடுக்க வசதியாக இருக்கும்.3.ப்ரிட்ஜில் உள்ள தட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக கழட்டவும். அவ்வாறே ஸைடில் உள்ள கண்டெய்னர்களையும் கழட்டவும். இதனை சோப்பு அல்லது ஜெல் வைத்து நன்றாக கழுவி காய விட வேண்டும்.4.இப்போது ப்ரிட்ஜ் முழுவதும் வெற்றிடமாக இருக்கும். ஒரு கப்பில் விம் ஜெல் மற்றும் நீரை எடுத்து கொண்டு ஸ்பான்ச்யை அதில் நனைத்து ப்ரீசர் மற்றும் ப்ரிட்ஜ் உள்ளே நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.5.பிறகு காய்ந்த துணியால் உள்ளே ஈரம் இல்லாமல் நன்கு துடைக்க வேண்டும்.6.ப்ரிட்ஜின் வெளிப்புறம் நீரை ஸ்ப்ரே செய்து காட்டன் துணியால் துடைக்கவும்.7.ப்ரிட்ஜை ஒரு மணி நேரம் திறந்து வைத்து நன்கு உலர விட வேண்டும்.பிறகு தட்டு மற்றும் கண்ட்டெய்னர்களை இருந்தவாறே செட் செய்து பொருட்களை மீண்டும் அடுக்க வேண்டும்அவ்வளவு தான் உங்கள் ப்ரிட்ஜ் இப்போது பளீச்...
  • 703
·
Added a post
டேட்டா எண்டரி பண்ற வேலை, மொதல் மாசம் 1000 ரூபா கட்டி டேட்டா வாங்கிட்டா போதும், அப்பறம் லட்ச லட்சமா கொட்டும்....MLM,.ஆம்வே ஃபர்ஸ்ட் நீங்க சேரனும், உங்களுக்கு கீழ 5 பேர சேர்க்கனும், அவங்க அப்படியே சேத்திகிட்டு வந்தா 6 மாசத்துல நீங்க கோடீஸ்வரன்....அனுபவ் பிளான்டேஷன், நீங்க பணம் குடுத்தா தேக்கு மரமா வரவு வைப்போம், அதுல கொட்டும் பாருங்க கோடிகள்....சீட்டு கம்பெனிகள், நீங்க டெபாசிட் பண்ற பணத்துக்கு 40% வட்டி தருவோம், நீங்க சேர்த்து விடற ஒவ்வொருவருக்கும் உங்களுக்கு கமிசன் உண்டு, வட்டி வாங்கியே சில பல கோடிகள் பார்க்கலாம்....குலுக்கல்ல உங்களுக்கு பரிசு விழுந்து இருக்கு, வந்து வாங்கிட்டு போங்கன்னு, குடும்பத்தோட கூப்பிட்டு உக்கார வச்சு, எங்க ரிசார்ட் கிளப்ல சேர வருஷம் 2 லட்சம் மட்டும்தான், சேந்தா வருசத்துல 5 நாள் ஃப்ரீயா தங்கலாம்ன்னு உருட்டுன உருட்டுல...ஈமு கோழி, 10,000 பணம் கட்டிணா உடனே ஒரு ஈமு கோழி குடுப்போம், நீங்க வளத்தி எங்க கிட்டயே குடுத்தா கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிக்குவோம், முட்டை ஒவ்வொண்ணும் 500 ரூபா... சீக்கிரம் கோடீஸ்வரன் ஆக, ஈமு கோழிப்பண்ணை.ஹெர்பா லைஃப், இது வெறும் 2000 ரூபாதான், வாங்கி குடிச்சா ஒரு மாசத்துல 200 கிலோ குறையும், நீங்க யாரையாவது கூட்டிட்டு வந்து சேர்த்து விட்டா உங்களுக்கு டிஸ்கவுன்ட்....டப்பர்வேர் வித்த குரூப், ஆம்வே பேஸ்ட் வித்த குரூப், ஓரிபிளேம் பொருள் வித்தவன், கோல்ட் குவிஸ்ட்ல தங்கம் வாங்கின குரூப், சஹாரால இடம் வாங்கினவன், சீட்டு போட்டவன், கலைமகள் சபால இடம் வாங்க காசு குடுத்தவன், டேபிள் மேட் வித்தவன்னு எத்தனை பேர், எத்தனை கண்ணிவெடி, எத்தனை ப்ராடுக....இத்தனை பேரையும் தாண்டி வந்தவனுகதான் 80s & 90s கிட்ஸ், என்னமோ ஒரு V3 Ads க்கே இப்படி ஆடி போய் உக்காந்து இருக்கீங்க.போங்க தம்பி, இது எல்லாம் எங்க வீர வாழ்க்கை முன்னாடி ஒண்ணுமே இல்லை.
  • 707
·
Added a post
ஒரு எழை குடும்பத்து பையன் பல வருடங்களாக ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். அந்த பெண்ணிற்கும் இவனை நன்றாக தெரியும். கல்லூரி பருவ நட்பு...ஒரு நாள் தன் காதலையும் அப்பெண்ணிடம் சொல்கிறான்.காதல் ப்ரபோஸ்ஸை கேட்டுவிட்டு அந்த பணக்கார பெண் சொன்னால்: உன்னோட ஒரு மாச சம்பளம் நான் ஒரு நாள் செலவு செய்யுற பணம். என்ன காதலிக்கிறேன்னு சொல்றியே, உன்னோட தகுதி என்னன்னு உனக்கு முதல்ல தெரியுமா? உன்ன மாதிரியே எவளாவது ஏழை பொண்ணு கிடைப்பா அவளை போய் கல்யாணம் பண்ணி வாழ்ற வழியை பாரு. "வந்துட்டான் காதல் பிரபோஸ் பண்ண" என்று கத்தினாள். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் இவனை பார்க்க, அவமானத்தில் தலை குனிந்து அமைதியாய் அந்த இடத்தை விட்டு சென்றான்.காலங்கள் ஓடின.....10 வருடங்கள் கழித்து இருவரும் ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்தித்து கொண்டனர்.இவள் தாமாக முன்வந்து அவனிடம் பேசினால்: ஹேய், எப்படி இருக்க? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியுமா? என் கணவர் மாசம் 2 லட்சம் சம்பளம் வாங்கராரு. உன்னால நினச்சுகூட பார்க்க முடியலைல. அவர் செம டேலன்ட் ஆனா ஆளு தெரியுமா? என்றாள்!!!இதை கேட்ட இவன் கண்கள் கண்ணீரால் குளமாகின...ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் கணவர் அங்கு வந்து சேர்ந்தார்.சார்!! நீங்களா? மீட் மை ஒய்ஃப்... என்று சொல்லிவிட்டு தன் மனைவியிடம் சொன்னார்: சாரோட ப்ராஜெக்ட்ல தான் நெக்ஸ்ட் வீக் அவருக்கு அசிஸ்டென்டா ஜாயின் பண்ண போறேன். 200 கோடி ரூபா ப்ராஜெக்ட். சார் ரொம்ப நல்ல மனுஷன். அவரு உயிருக்கு உயிரா உண்மையா காதலிச்ச ஒரு பொண்ணு அவர விட்டுட்டு போயிட்டா. அதனால இப்ப வரைக்கும் சார் கல்யாணம் பண்ணிக்கவே இல்ல. எவ்வளவு துரதிஷ்டமான பொண்ணு அவ... என்று தன் மனைவியிடம் சொன்னார். இதை கேட்டு உறைந்து போய் நின்றால் அந்த பணக்கார பெண்...நீதி: நம்மள ஒரு பொண்ணு வேண்டாம் புடிக்கலைன்னு உதறி தள்ளிட்டு போயிட்டா....அவ மூஞ்சில ஆசிட் அடிக்கிறது....சமூக வலைத்தளத்தில் அவளை பத்தி கேவலமா பதிவு போடறது...வாட்ஸ்அப்ல காதல் பிரிவு ஸ்டேட்டஸ் வைக்கிறது... தாடி வைச்சிக்கட்டு அசிங்கமா அலையறது.....இன்னும் ஒருபடி மேலே போய் உயிரை மாய்த்துக் கொள்வது... உண்மையான வீரமான ஆண் மகனுக்கு அழகில்லை.வேண்டாம் என்று சொன்ன அந்த பொண்ணு முன்னாடியே நல்லா வாழ்ந்து வாழ்க்கையில முன்னேறி காட்டறவன்தான் உண்மையான ஆண்மகன்.
  • 708
  • 903
·
Added a news
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் புதன்கிழமை இரவு காலமானார்.
  • 964
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி  மேஷம் -ராசி: செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் உயர்கல்வி சார்த்த ஆலோசனைகள் கிடைக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை ரிஷபம் ராசி: மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் மிதுனம் -ராசி: வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பூர்வீகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கடகம் -ராசி: பயணம் தொடர்பான செயல்களில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனை வாங்குதல் மற்றும் விற்றல் பணிகளில் மேன்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நன்மை உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் சிம்மம் -ராசி:கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். திறமைக்கேற்ப வாய்ப்புகள் அமையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை கன்னி -ராசி: பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் பிறக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். பாசம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு துலாம் -ராசி: பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் விருச்சிகம்- ராசி: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு தனுசு -ராசி: சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சாப்பாடு விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். திடீர் செய்திகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத அலைச்சல் மூலம் சோர்வு உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை மகரம் -ராசி:பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கும்பம் –ராசி:வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகளும், ஒத்துழைப்பும் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை மீனம் -ராசி: உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : நீலம்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள். 
  • 979
ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 10.10.2024சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 08.06 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று அதிகாலை 02.06 வரை மூலம். பின்னர் பூராடம். கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 996
good morning...
  • 1004
·
Added a news
பிரபல இந்தியத் தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 86 வயதான ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவராக வலம் வந்தார்.  அவரது சேவைப் பணி மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக அனைவராலும் பரவலாக அறியப்பட்டவர். மிகவும் சேவை மனப்பாங்கு கொண்டவர்.  இவரைப் பிடிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்கமாட்டார்கள். இதன் காரணமாகவே மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை வளர்த்தியுள்ளார். ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு: நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937, டிசம்பர் 28இல் சூரத் நகரில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் படிப்பை முடித்த ரத்தன் டாடா ஐ.பி.எம்.இல் பணிக்குச் சேர்ந்தார். நாட்டின் மீதான பற்றால் இந்தியா திரும்பிய டாடா, தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் களம் இறங்கினார். டாடா நிறுவனத்தில் சிறு சிறு பொறுப்புகளை வகித்துத் தொழில் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார். டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதற்கும் ரத்தன் டாடா எடுத்துச் சென்றார். டாடா குழுமத்தில் பணியாற்றிய ரத்தன் டாடா பல ஆண்டு அயராத உழைப்பிற்கு பிறகே உயர் பதவியை ஏற்றார். சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடங்கி சூளைகளைக் கையாளும் பணிகள் வரை செய்தவர் ரத்தன் டாடா. 1991இல் டாடா குழுமத் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்ற பின் நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்தது. ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் 50 மடங்கு லாபத்தைப் பெருக்கியது டாடா குழுமம். டாடா குழுமத்தின் தலைவராக 1991ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார். கடந்த 2012ஆம் ஆண்டில் டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். வாகனம், தகவல் தொழில்நுட்பம், இரும்பு, தொழில்துறை எனப் பலவற்றிலும் டாடா நிறுவனம் முத்திரை பதிக்க ரத்தன் டாடா பங்காற்றினார். நடுத்தர மக்களின் வாகனக் கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்தவர் ரத்தன் டாடா. தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன் விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார். நாட்டின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா தன்னம்பிக்கையால் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர். தன்னம்பிக்கை, உழைப்பு, அறிவு, தொழில் திறன், அறச் சிந்தனைக்காக அறியப்பட்டவர் ரத்தன் டாடா.  கொரோனா நிவாரண பணிகளுக்காக ரத்தன் டாடா இந்திய மதிப்பில் ரூ.1,500 கோடி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.000
  • 1301
·
Added a news
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.இதன்படி, தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு பெற்றவர்களைத் தவிர, அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்,மேலும் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது மற்றும் குறைபாடுகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது ஒரு காரணமல்ல.இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணத்தை வைப்புச் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத் தவிர, அனைத்து சுயேச்சைக் குழுக்களும் பொதுத் தேர்தலுக்குப் கட்டுப்பணத்தை வைப்புச் செய்ய வேண்டும்.அதன்படி நேற்று (09) வரை 293 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதுவரையில் திகாமடுல்ல மாவட்டத்திற்காக அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதோடு அந்த எண்ணிக்கை 42 ஆகும்.இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 88 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.46 அரசியல் கட்சிகளும், 42 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாளை (11) நண்பகல் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலக அலுவலகங்களில் வேட்புமனுக்களை கையளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்பின், ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய, ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 1320
·
Added a news
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணலைக் கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் வைத்து அவர்களுக்கு எதிர்காலத்தில் மணல் விநியோக அனுமதிகளை வழங்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸார் இரண்டு விடயங்களை முன்வைத்தனர்.திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு வருவதாக அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுவிட்டு, கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் உள்ளூரிலிருந்து மணலை ஏற்றிவிட்டு அனுமதிப் பத்திரத்துக்கு அமைவான வீதியால் பயணிக்கும்போது தம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.அதைவிட, அனுமதிப்பத்திரம் பெறப்பட்ட ஒரு நாளில் அந்த அனுமதிப்பத்திரத்தை வைத்து பல தடவைகள் மணலை ஏற்றிப் பறிக்கின்றனர். இதன் காரணமாகவே மணலுடன் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன என்பதையும் பொலிஸார் குறிப்பிட்டனர். இதற்கு மேலதிகமாக, போலியான அனுமதிப்பத்திரங்களையும் தயாரிப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இதற்குத் தீர்வாக, மணல் அனுமதிப் பத்திரத்தில் 'க்யூஆர்' முறைமையைக் கொண்டு வந்து பொலிஸார் பரிசோதிப்பதற்கு ஏதுவாக அதனைச் செயற்படுத்தும் முறைமை பரிந்துரைக்கப்பட்டது.மேலும், நீதிமன்றங்களால் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது என்றும், அந்த வாகனங்களுக்கு ஒருபோதும் மணல் விநியோக அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் வடக்கு மாகாணத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றைய மாவட்டத்துக்கு மணல் கொண்டு செல்லப்படுவதானால் எதிர்காலத்தில் இரண்டு மாவட்ட செயலர்களுக்கும் அது தெரியப்படுத்த வேண்டும் என்றும், அவை என்ன நோக்கத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதும் அறிவிக்கப்படவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்000
  • 1322
·
Added a news
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 2024.10.13 - 2024.10.15 ஆம் திகதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,2024.10.13 கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்போடு கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொது மக்கள் குடியிருப்புக்களில் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.2024.10.14 அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.2024.10.15 அனைத்து பாடசாலைகள் (காலை), தனியார் கல்வி நிலையங்கள் (மாலை) டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதுடன் மேற்படி நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.000
  • 1311
·
Added a news
இந்தியா, சீனா, பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.பிரிக்ஸ் (BRICS) அமைப்பு 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன், இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளின் சனத்தொகையானது உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டதாகும். ஆரம்பத்தில் ஐந்து நாடுகளுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டாலும் பின்னர் பல நாடுகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.அமைப்பின் நாடுகள் தமக்கு இடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்தி வருவதுடன், இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன.பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய கோரிக்கையை இலங்கை முன்வைக்கவுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பில் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,”ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார். எனினும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு மாநாட்டில் பங்கேற்கும்.இதன்போது பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவத்தை பெறுவதற்குரிய விண்ணப்பத்தை இலங்கை முன்வைக்கும். இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஆதரவைக் கோரினோம். பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடமும் இந்த கோரிக்கை விடுக்கப்படும்.” என்றார்.000
  • 1336
·
Added a news
பாடசாலை சத்துணவு திட்டம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியதாகவும் அவை உண்மைக்கு புறம்பானதெனவும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.தொடர்ந்து உரையாற்றுகையில், ''தற்போது பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இந்த திட்டத்தை எந்த வகையிலும் நிறுத்த யாரும் கேட்கவில்லை.அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிதி அமைச்சின் மூலமாக, பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தேவையான 1200 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டைப் பெறுவது பற்றியும் கலந்தாலோசித்து வருகின்றோம்.ஒவ்வொரு மாகாணத்திற்கும் அமைச்சினால் இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது, எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அமைச்சர் அதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.அத்துடன் மேல் மாகாண சபைக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் அதனை பெற்றுக்கொள்வதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதனை நிதி ஆணையாளருடன் பேசி அந்நிதியை விடுவிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.''என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்’தக்கது
  • 1326