beesiva

 • 193
Relationships
Empty
வாழ்த்துகள்....
 • 98
Added a post 
விந்துவைக் கெட்டியாய் ஆக்கிவிடும் வெண்டைக்காய்,கூட்டி விடும்வெண்டைப் பிஞ்சு.அதிமதுரம் சேர்த்தால் பெருகும் புதுஉதிரம்,சர்வமும் சீராகும் ஆம்.கருத்தரிக்க வைக்கும் அணுக்கள் அதிகரிக்க,கத்தரியை உன்உணவில் கூட்டு.முருங்கை சுரைக்காய் விதைஆக்கும், ஆணின்விருப்பைப் பெருங்கவிதை யாய்.சருமத்தைக் காப்பதற்கும் ஆணின் விருப்பத்தைச்தீர்ப்பதற்கும் கோரைக் கிழங்கு.பூரித்து எழவைக்கும் , ஆண்பெண் குறைத்தீர்க்கும்ஓரிதழ் தாமரைச் சாறு.சாதிக்காய் உண்பவர் வீழாமல் சாதிப்பார்,தாழும் தளர்ச்சியை வென்றுஎச்சரிக்கை :விந்தளவு மங்கி, எலும்புஉருகும் விந்தையை,கூடிவிடும் உப்புஉருவாக் கும்.பூண்டும் மிளகாயும் வெப்பத்தைத் தூண்டும் ,கெடுமாம் கருவோடு விந்து
 • 133
Good morning.....
 • 134
good morning...
 • 215
Added news 
தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதல் பெரும்பாலான ஆலோசனைக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், உச்சிமாநாடுகள் காணொளி வாயிலாகவே நடத்தப்படுகின்றன. அவரவர் இருக்குமிடத்தில இருந்தே காணொளி வாயிலாக கூட்டத்தில் கலந்துக் கொள்ளலாம். காணொளி வாயிலாக நடைபெற்ற கனடா பாராளுமன்ற கூட்டத்தில் எம்பி வில்லியம் ஆமோஸ் கலந்துகொண்டார். அப்போது, அவர் கையில் செல்போனுடன், கியூபெக்-கனடா தேசியக்கொடிகளுக்கு மத்தியில் நிர்வாண நிலையில் தோன்றினார். காணொளியில் இணைந்திருந்த மற்ற உறுப்பினர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த செயலால் வெட்கித் தலைகுனிந்த எம்.பி. வில்லியம் ஆமோஸ், நடந்த தவறுக்காக சக உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டார். ‘நான் இன்று மிகவும் மோசமான தவறைச் செய்துவிட்டேன். இதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஜாகிங் சென்று திரும்பியதும் உடை மாற்றியபோது, கேமரா தற்செயலாக ஆன் ஆனதை கவனிக்கவில்லை. இதற்காக சபையில் உள்ள சக உறுப்பினர்கள் அனைவரிடமும்  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது’ என்று வில்லியம் கூறியுள்ளார். 
 • 255
புத்தாண்டு வாழ்த்துகள்......
 • 122
good morning
 • 180
Added a post 
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..இதற்கான விளக்கம்மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாருமந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்மருந்துதான் பொய்யானால் வாணம் பாருவாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து. அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாருஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.சாமிதான் பொய்யானால் சாணம் பாரு இது ரொம்ப சுவாரசியமான விஷயம்.  கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள்.  அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி,  அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின் கருத்து.
 • 235
Good morning....
 • 220
Good Morning...
 • 291
Added news 
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் இருவரும் நேற்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.இருவரிடமும் இன்று அதிகாலை 2 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் நேற்று முன்தினமிரவு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டது.காவல் படைக்கு வழங்கப்பட்ட சீருடைகளும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டதுடன், கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
 • 295
Added a post 
ஒருமுறை அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர சிவ பார்வதியின் முன் கால்நீட்டி அமர்ந்தாள்.சிவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வதி கோபித்தாள். “சுவாமி! அகில உலகிற்கும் தலைவரான தங்களை நோக்கி இந்த பாட்டி கால் நீட்டுகிறாளே” என்றாள்.“நீயே கேள்” என சிவன் சொல்ல, “அவ்வையே! நீ செய்வது சரிதானா? கயிலைநாதரை நோக்கி கால் நீட்டலாமா” எனக் கேட்டாள்.அவ்வையோ, “தாயே! என் அப்பன் ஈசன் எத்திசையில் இல்லை என்று சொன்னால் அத்திசையில் நீட்டுகிறேன்” என பதிலளித்தாள்.பார்வதியும் நாலா புறமும் திரும்பி பார்க்க எங்கும் சிவனின் அருள் வடிவம் இருப்பது தெரிந்தது.எங்கும் சிவமயமாக இருப்பதை உணர்த்த சிவன் நிகழ்த்திய திருவிளையாடல் இது...
 • 169
good morning
 • 53
வணக்கம்
 • 89
சிந்திப்போம்......
 • 56
Achievements

VIP

Total points: 2582

Info
Full Name:
beesiva
Friends count:
Followers count:
Membership
Premium
beesiva Videos
beesiva Photos
My Posts
beesiva Polls

கொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு கற்றுக் கொடுத்தது எது?

ரஜினி அரசியலில் இறங்காதது....

beesiva Poetry
My News