Ads
கார்த்தி நடிக்கும் ‘விருமன்
கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
Empty
Added a news
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் 2025 ஆம் ஆண்டு வைசாகி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கல்சா நாள் ஊர்வலத்தில் 5,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகின் மிகப்பெரிய சீக்கிய சமூகத்தினரின் வைசாகி விழாவாக இது மீண்டும் மாறியுள்ளது. சர்ரே நகரின் 128-வது வீதியில் அமைந்த குருத்வாரா டாஷ்மேஷ் தர்பார் கோவிலில் இருந்து ஆரம்பித்த ஊர்வலத்தில், இருபதிற்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பங்கேற்றன."இன்றைய நிகழ்வில் நாம் கண்டது, ஒற்றுமை, பல்வகை தன்மை மற்றும் பொது மகிழ்ச்சி ஆகியவற்றின் அழகான வெளிப்பாடு" என்று ஊர்வல பேச்சாளர் மோனிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்."சர்ரே நகர் கீர்த்தன் என்பது, சீக்கிய சமுகத்தின் வரலாறு, பழக்கவழக்கங்கள், மனித உரிமைகளுக்கான உறுதி மற்றும் அரசியல் சுயாதீனத்திற்கான நம்பிக்கையை பகிரும் வாய்ப்பாகும்.இந்த நிகழ்வு, சர்ரே மற்றும் கனடாவில் வாழும் அனைத்து மக்களுடனும் உறவுகளை இணைக்கும் நிகழ்வாகவும் உருவாகி வருகிறது.இந்த பாரம்பரியம் தொடர்ந்து வளரும் விதமாக காண்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.வைசாகி, 1699ஆம் ஆண்டு கல்சாவின் உருவாக்கத்தையும், பஞ்சாபில் விவசாயிகளின் விளைச்சலையும் நினைவுபடுத்தும் வகையில் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
- 75
Added a post
அப்பா..அம்மா ஊர்ல இருந்து வராங்க..இந்த மாசம் கொஞ்சம் பட்ஜெட் எல்லாம் சேர்த்துப்போட்டு கூட வாங்கிக்கணும்..வேணாம்..அவங்க வரட்டும்.. அப்புறம் வாங்கிக்கலாம்..வந்தார்கள்..ஒரு ரெண்டு மாசம்போல இருந்துவிட்டுப்போனார்கள்..இவர்கள் வழக்கம்போல மாச செலவு பட்ஜட் போட உட்கார்ந்தார்கள்..வழக்கத்தை விடவும் எந்த செலவுமே கூடியிருக்கவில்லை..EB..பில் குறைந்திருந்தது..மளிகை..பால்..காய்கறி எல்லாமே இவர்கள் இருவருக்காவதைவிட நால்வருக்கும் சேர்த்து குறைவாகவே ஆகியிருந்தது..சாயங்காலம் வழக்கமாகப்போகும் ஓட்டலுக்குப் போனார்கள்..வாங்க சார் எங்க ரெண்டுமாசமா ஆளையே காணல..இருவருக்குமே பொட்டிலடித்தது.. உண்மைதான்..அம்மா..அப்பா இருந்த ரெண்டுமாசமும் அம்மா பாத்துப்பாத்து எல்லாருக்கும் பிடிச்சமாதிரி..சமைத்துக்கொடுத்தாள். எதையும் அளவோடு செய்ததால் எல்லாம் சாப்பிட்டபிறகும் எதுவும் மீந்துபோய் தொட்டியில் கொட்டவில்லை..அப்பா பார்த்துப்பார்த்து ஆளில்லாத இடத்தில் லைட்டையும் பேனையும் டிவியையும் அணைத்துக்கொண்டே இருந்தார்..பழங்கதை எங்களோடு பேச குழந்தை உடன் கொஞ்சி விளையாட என்று அவர்கள் இருந்ததில் பொழுதை கழிக்க சினிமா பூங்கா மால் போன்ற விசயங்கள் தேவைப்படாமல் போனதில் பெரிய தொகை சேமிப்பு ஆனதுதக்காளி 140ஐத்தொட்டபோது எலுமிச்சை ரசம் சாப்பிட்டார்கள்..காய்கறிகளை அளவோடு தேவைக்கு அப்பா வாங்கியதில் அழுகல் வேஸ்ட் தவிர்க்கப்பட்டதுகுழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர அலுவலகத்தில் இருந்து பைக்கில் வந்து போகும் வேலை இல்லாமல் பெட்ரோல் மற்றும் நேரம் இரண்டும் மிச்சமானதுகூட்டிக்கழித்து பார்க்க கணக்கு சரியாக தான் வந்தது.. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எப்போதுமே வரம். அவர்களின் அனுபவங்கள் நமக்கு பாடங்கள்.
- 83
Added a post
சிவாஜி மராட்டியத்தை ஒளரங்கசீப்பிடமிருந்து கைபற்ற முயற்சி செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியாகவே முடிந்தது.அப்படி ஒருமுறை தோல்வியடைந்தபோது சிவாஜி காட்டின் வழியே தனிமையில் மிகவும் சோர்வாகச் சென்றார். அப்போது அவருக்கு மிகவும் பசித்தது. ஆனாலும் தனது பயணத்தை அக்காட்டுப் பகுதியில் தொடர்ந்தார்.அங்கு அவருக்கு ஒரு குடிசைப்பகுதி தென்பட்டது. பசி மற்றும் போர் தோல்வியால் மிகவும் களைப்புற்று இருந்த சிவாஜி குடிசையின் வாயிலைத் தட்டினார்.குடிசையினுள் இருந்து மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் சிவாஜி “அம்மா பயணக் களைப்பால் மிகவும் பசியாக உள்ளேன். தாங்கள் எனக்கு உண்பதற்கு ஏதாவது தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்” என்றார்.அதற்கு மூதாட்டியும் “மகனே உண்ண சூடான களியைத் தருகிறேன். அதனை உண்டு உன் பசியை நீக்கு” என்றார்.சிவாஜியும் “மிக்க நன்றி தாயே. அவ்வாறே செய்யுங்கள்” என்று கூறினார்.மூதாட்டியும் ஒரு தட்டில் சூடான களியை எடுத்து வந்து சிவாஜியிடம் கொடுத்தார். களியை வாங்கிய சிவாஜி களியின் மையப்பகுதியை எடுத்து உண்ண முயற்சி செய்தார். மிகவும் சூடாக இருந்ததால் அவரால் களியை கைகளில் எடுக்க முடியவில்லை.அதனைக் கண்ட மூதாட்டி “நீ சிவாஜியைப் போல் அவசரப்படுகிறாய்” என்றார்.அதற்கு சிவாஜி மூதாட்டியிடம் “சிவாஜியைப் போல் அவசரப்படுகிறேனா?. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று விளக்கமாக் கூறுங்கள்” என்றார்.அதற்கு மூதாட்டி “தட்டில் உள்ள சூடான களியின் ஓரங்களை முதலில் உண்டு விட்டு மையத்திற்கு சென்றால் களியின் சூடு குறைந்து உண்ண முடியும்” என்று கூறினார்.“அதேபோல் சிவாஜி முதலில் எல்லையில் உள்ள கிராமங்களை கைபற்றி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு பின் கோட்டைகளை முற்றுகையிட வேண்டும்.” என்றார்.இதனைக் கேட்ட சிவாஜி மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கி “வெற்றி பெற வீரம் மட்டும் இருந்தால் போதாது. விவேகத்துடன் கூடிய மதிநுட்பம் வேண்டும் என்று நல்ல வழியைக் காட்டினீர்கள். நான்தான் நீங்கள் கூறும் சிவாஜி. என்னை ஆசீர்வதியுங்கள்” என்றார்.பின் மூதாட்டி கூறியபடி சூடான களியினை உண்டதுடன் முதலில் எல்லையில் இருந்த கிராமங்களைக் கைபற்றி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு கோட்டைகளைப் பிடித்து மராட்டிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.இக்கதையிலிருந்து நாம் எந்த ஒரு பிரச்சினையையும் அணுகும்போதும் முதலில் பிரச்சினையின் தன்மையை ஆராய்ந்து அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் திட்டமிட்டு பின் வெற்றி பெற செயல்பட வேண்டும்.
- 86
Added a post
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே.. 'ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை...பெரியவரை நெருங்கினான்.“ஐயா…!”“என்ன தம்பி?”“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”“ஆமாம்”“அதில் என்ன தெரிகிறது?”“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்”.“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”“ஆமாம்..”“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”பெரியவர் புன்னகைத்தார்.“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய”“பாடமா…? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”“அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்”“எனக்கு ஒன்றும் புரியவில்லை”.“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்துகிறது.”“எப்படி?”“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?"“ஆமாம்”“அதே போல் உன் சகோதரனிடம் - நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்”."அடுத்து…?”“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”“ஆமாம்”“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்..”“அப்புறம்?”“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”“இல்லையே… மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்”.“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்”.“ஐயா… அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா… அப்பப்பா..! யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்” என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்..
- 92
Added article
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார்.தம்பி டி.ஆர்.ராமண்ணாவுடன் சேர்ந்து "ஆர்.ஆர். பிக்சர்ஸ்" என்ற படக் கம்பெனியை ராஜகுமாரி தொடங்கினார். இந்த கம்பெனியின் முதல் படம் "வாழப்பிறந்தவள்". அதில் ராஜகுமாரி நடித்தார். ராமண்ணா டைரக்ட் செய்தார். படம் சுமார் ரகம்.1954 ல் எம்.ஜி.ஆரையும், சிவாஜி கணேசனையும் ஒன்றாக நடிக்கச் செய்து, "கூண்டுக்கிளி" என்ற படத்தைத் தயாரித்தார். இதில் தனக்குப் பொருத்தமான வேடம் இல்லை என்ற காரணத்தால் பி.எஸ்.சரோஜாவையும், குசல குமாரியையும் நடிக்க வைத்தார். ராமண்ணா டைரக்ட் செய்தார்.இரு மாபெரும் நடிகர்கள் நடித்த இப்படம் படுதோல்வி அடைந்தது. தோல்வியைக் கண்டு துவண்டு விடாது ராஜகுமாரி, அடுத்த படத்தை வெற்றிகரமாகத் தயாரிக்க, தம்பியுடன் தீவிரமாக ஆலோசித்தார்."குலேபகாவலி" கதையை மசாலாப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். எம்.ஜி.ஆர். கதாநாயகன். அவருக்கு மூன்று ஜோடிகள். அவர்களில் ஒருவராக ராஜகுமாரி நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது.பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம்.ஜி.ஆர். என்ற நான்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ராஜகுமாரி, சிவாஜி கணேசனுடன் "தங்கப்பதுமை"யில் சேர்ந்து நடித்தார்.ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமை முதன் முதலாக ராஜகுமாரிக்குக் கிடைத்தது. பின்னர் இந்த பெருமையை பி.பானுமதி பெற்றார்.1963 ல் "வானம்பாடி" படத்தில் ராஜகுமாரி நடித்தார். அதுவே அவருடைய கடைசி படம். அதன்பின் படங்களில் நடிக்கவில்லை.தி.நகரில் உள்ள தன் வீட்டில் ராஜகுமாரி தன் வாழ்க்கையின் பின்பகுதியை அமைதியாகக் கழித்தார். விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை.காலப்போக்கில், தன்னுடைய "ராஜகுமாரி" தியேட்டரை விலைக்கு விற்று விட்டார். அது பலருடைய கை மாறி, பின்னர் இடிக்கப்பட்டு, இப்போது வணிக வளாகமாகக் காட்சி அளிக்கிறது.திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ராஜகுமாரி 20.9.1999ல் தமது 77வது வயதில் காலமானார்.
- 94
Added a post
1965 இல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின்போது, அன்றைய பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவ வீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். அவர் பல காயமடைந்த ராணுவ வீரர்களை பார்த்தார் ... இறுதியில் எழுந்திருக்க முடியாமல் படுத்தே இருந்த ராணுவவீரரிடம் அருகில் சென்றார். அருகில் இருந்த டாக்டர், இந்த ராணுவ வீரரின் பல உறுப்புகள் சேதம் அடைத்துள்ளது அதனால் அவர் மிகுந்த கண்காணிப்பில் உள்ளார், அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக்கூறினார். சாஸ்திரி அவர்கள் மிகவும் அருகில் சென்று அவருடைய தலைக்கு அடியில் தன்னுடைய கைகளை கொடுத்து தாங்கினார். அந்த ராணுவ வீரனின் கண்களிலிருந்து கண்னீர் பெருக்கெடுத்தது. சாஸ்திரி அவர்கள் அவரோடு கீழ்வருமாறு உரையாடினார்.சாஸ்திரி : மேஜர், நீங்கள் உலக புகழ் பெற்ற இந்திய ராணுவத்தின் மேஜர். இந்திய ராணுவம் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்றது. தயவுசெய்து உறுதியாக இருங்கள் அழாதீரகள் !. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.மேஜர்: சார், இந்த கண்ணீர் என்னுடைய வலியினாலோ காயத்தினாலோ அல்ல. இந்த கண்ணீருக்கு காரணம் நான் ஒருநாள் என்னுடைய பிரதமமந்திரியை பார்ப்பேன் அப்போது அவருக்கு ராணுவ வணக்கம் தெரிவிப்பேன் என்ற கனவுதான். இன்று உங்களை நேரில் பார்த்துவிட்டேன் ஆனால் என்னால் எழுந்து உங்களுக்கு ராணுவ வணக்கம் தெரிவிக்க முடியவில்லையே என்றவருத்தம்தான் என்னை வாட்டுகிறது.சாஸ்திரி கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளங்கள் வாழ்ந்த நாடு இந்தியா.
- 96
Added a post
தொண்டை வலி – ஒரு மேசை கரண்டி மிளகு தூள் + ஒரு மேசை கரண்டி தேன் கலந்து சாப்பிடலாம். இது தொண்டை அழற்சி, இருமலுக்கு நல்லது.வயிற்று வலி – சிறிது இஞ்சி சாறு + சிறிது எள் எண்ணெய் கலந்து சாப்பிடலாம். இது வாயு தொல்லைக்கு நல்லது.தலைவலி – இஞ்சி தைந்து நன்கு விழுது செய்து நெற்றியில் பூசலாம். குளிர்ச்சி தரும்.இருமல் – முருங்கை இலைக் கஷாயம் (இலைகளை கொதிக்க வைத்து குடி) சாப்பிடலாம். மூச்சுத் திணறலுக்கும் இது நன்மை தரும்.காய்ச்சல் – பசலைக்கீரை சாறு அல்லது துளசி இலை சாறு குடிப்பது உடல் வெப்பத்தை குறைக்கும்.வயிற்றுப்போக்கு – சிக்கனசேரி இலை சாறு அல்லது சீரகம் + வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம்.மூளை சோர்வு / மன அழுத்தம் – வத்தலக்கேணி அல்லது பிராமி கீரை கஞ்சி அல்லது சாறு உட்கொள்ளலாம்.சரும உபாதைகள் – மணத்தக்காளி இலைகளை அரைத்து பூசலாம். காயங்கள், தோலில் கூட்டு, கருமை ஆகியவற்றுக்கு நன்மை.மலச்சிக்கல் – வாழைப்பழம் + வெதுவெதுப்பான பால் அல்லது சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து குடிக்கலாம்.உடல் வலி / மூட்டு வலி – வெந்தயம் எண்ணெயில் வறுத்து பொடியாக்கி தேனுடன் சாப்பிடலாம் அல்லது அந்த எண்ணெயை பூசலாம்.
- 98
Added article
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை கூறினாலும் இவரின் காமெடி ரசித்துக் கூறினாலும் கமெண்ட் பாக்ஸில் வந்து திட்டி வைப்பவர்கள் ஏராளம்.உண்மையில் வடிவேல் ஒரு நல்ல கலைஞர் நல்ல நகைச்சுவை திறன் உள்ளவர். ஆரம்ப காலத்தில் அவரின் கிழக்கு சீமையிலே, செல்லக்கண்ணு சக்தி, தேவர் மகன், சிங்காரவேலன் இதுபோல படங்களில் அவரின் பாடி லேங்குவேஜ் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும்.அப்படிப்பட்ட கலைஞர் ஆன வடிவேல் அரசியல் ரீதியான காரணங்களாலேயே பலரால் புறக்கணிக்கப்படுகிறார் இதை அவர் புரிந்து கொள்ளவே இல்லை.இதைப் போல அடிப்படையை புரிந்து கொள்ளாமல் எனக்கு கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கன்னிவெடி வைக்கிறார்கள் என புலம்புவதே வடிவேல் வேலையாக இருக்கிறது.வடிவேல் போன்ற மிகப்பெரிய கலைஞனாக இருந்தாலும் சரி, பழைய ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம் விற்கும் தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி நல்ல புகழையும் லாபத்தையும் சம்பாதிக்கும் நேரத்தில் அரசியல் ரீதியாக உள்ளே புகுந்தால், அது அவரை கண்டிப்பாக வீழ்த்தி விடும்.ஏனென்றால் ஒருவர் ஆதரிக்கும் கட்சிக்கு எதிராக எண்ணற்றவர்கள் இருப்பார்கள். அந்த குறிப்பிட்ட நபருக்கு ஆதரவு கொடுத்தவர்கள், ஓ இவர் இந்த கட்சியா என அவர் மீது வெறுப்பை கக்க ஆரம்பிப்பார்கள், இது போன்ற விஷயங்களை நடிகர் வடிவேல் கடைசிவரை புரிந்து கொண்டதாய் தெரியவே இல்லை. இன்னும் அவர் தன் மேல் தவறு இல்லை என்பது போலவே பேசிக் கொண்டிருக்கிறார்.முக்கியமாக கேப்டன் விஜயகாந்த், குறித்து பேசியதெல்லாம் மிக மிக தவறான ஒரு விஷயம், அவர் இறந்த பிறகு கூட நான் பேசியது தவறுதான் என ஒப்புக்காக கூட சிறிய வருத்தம் தெரிவிக்காமல், இரங்கல் தெரிவிக்காமல்தன் மீது தவறு இல்லாதது மாதிரி எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது தான் வருத்தமான விஷயம். இதனால்தான் வடிவேல் பெயரைச் சொன்னாலே அவரைப் பற்றி கட்டுரை எழுதினாலே நெகட்டிவ் கருத்துகள் அதிகம் வருகிறது. இனி வடிவேல் எவ்வளவு பெரிய நல்ல காமெடிகள் நடித்தாலும் காமெடிகள் உண்மையில் நன்றாகவே இருந்தாலும் பழைய அளவுக்கு, அதெல்லாம் எடுபடுமா என தெரியவில்லை.
- 94
Added a news
.....எம்மை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த, யுனானி, என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது. இந்த கற்கை நெறியை நிதைவுசெய்து தமிழ் சிங்களம் முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர்.இதேநேரம் மருத்துவப் பயிற்சி நெறியை முடித்தும் தம்மை பயன்படுத்தாத நிலையில் அல்லது போக்கில் இலங்கையின் சுதேச மருத்துவம் இருப்பது கவலையானது.மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் ஆனல் அரசு மௌனமாக இருக்கின்றது.அதைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமநத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர்.ஆனால் எம்மை கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும்.இந்த போக்கால் இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலையே உருவாகின்றது.நாட்டில் இருக்கும் எமது வளங்களை கொண்டே மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதை அரசு முன்னெடுப்பதில்லை.இவ்வாறன நிலையில் மேலதிக தகைமை என்று கூறி வேறு வேலைகளுக்கு கூட எம்மை இணைத்துக் கொள்கின்றார்கள் இல்லை என்றும் கூறிய அவர் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 166
Added a news
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலானதேசிய மக்கள் முனைகின்றது என சுட்டிக்காட்டிய யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளர்கள்உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட முறைமைகள் தொடர்பில் கூட தெரியாதவர்களாக இன்றைய அரசு இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -தனது கட்சியிடம் அதிகாரம் கிடைக்கும் பட்சத்திலே உள்ளூர் அதிகர சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற தொனிப்பொருளில் வடக்கின் தேர்தல் பிரசார மேடைகளில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.இது ஒரு மிகப்பெரிய ஊழல் மோசடியாகும்.தேர்தல் ஆணைக் குழுவுக்கு இரண்டாவது கடிதமும் அனுபப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் கருத்து ஒரு மக்கள் கூட்டத்தின் ஜனநயகத்தை கேள்விக் குறியாக்குகின்றது.அதுமட்டுமல்லாது இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதை காட்டுகின்றது.இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறைஇந்த அரசு செய்ய முயல்கின்றது.இவர்களது மிரட்டல் அதிகார இலஞ்சத்தை எவரும் ஏற்காது தேசிய மக்கள் சக்திதை தமிழர் தாயக பகுதிகளில் இருந்து மக்கள் தூக்கி எறிவது அவசியமாகும்.எமக்கு மத்தியின் எந்த நிதியும் வேண்டாம்.எமக்கு கேள்வி கேட்க அதிகாரம் இல்லை என்றால் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எம்மிடம் எமது மக்களிடம் வந்து வாக்கு கேட்பதற்கு.அந்தவகையில் தமிழரையும் தமிழர் இருப்பையும் இல்லாதொழித்த தேசிய மக்கள் சக்தியை தமிழ் அரசியல் பரப்பில் காலூன்ற விடாது அனைவரும் ஒருமித்து எதிர்கொள்வது அவசியம்.இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கட்சிகளுக்குள் இருக்கும் முரண்படுகளே தேசிய மக்கள் கட்சியின் வடக்கின் வருகைக்கான வாய்ப்பை வழங்கியது. இதை உணர்ந்து தமிழ் மக்கள் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.000
- 171
Added a news
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலானதேசிய மக்கள் முனைகின்றது என சுட்டிக்காட்டிய யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளர்கள்உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட முறைமைகள் தொடர்பில் கூட தெரியாதவர்களாக இன்றைய அரசு இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -தனது கட்சியிடம் அதிகாரம் கிடைக்கும் பட்சத்திலே உள்ளூர் அதிகர சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற தொனிப்பொருளில் வடக்கின் தேர்தல் பிரசார மேடைகளில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.இது ஒரு மிகப்பெரிய ஊழல் மோசடியாகும்.தேர்தல் ஆணைக் குழுவுக்கு இரண்டாவது கடிதமும் அனுபப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் கருத்து ஒரு மக்கள் கூட்டத்தின் ஜனநயகத்தை கேள்விக் குறியாக்குகின்றது.அதுமட்டுமல்லாது இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதை காட்டுகின்றது.இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறைஇந்த அரசு செய்ய முயல்கின்றது.இவர்களது மிரட்டல் அதிகார இலஞ்சத்தை எவரும் ஏற்காது தேசிய மக்கள் சக்திதை தமிழர் தாயக பகுதிகளில் இருந்து மக்கள் தூக்கி எறிவது அவசியமாகும்.எமக்கு மத்தியின் எந்த நிதியும் வேண்டாம்.எமக்கு கேள்வி கேட்க அதிகாரம் இல்லை என்றால் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எம்மிடம் எமது மக்களிடம் வந்து வாக்கு கேட்பதற்கு.அந்தவகையில் தமிழரையும் தமிழர் இருப்பையும் இல்லாதொழித்த தேசிய மக்கள் சக்தியை தமிழ் அரசியல் பரப்பில் காலூன்ற விடாது அனைவரும் ஒருமித்து எதிர்கொள்வது அவசியம்.இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கட்சிகளுக்குள் இருக்கும் முரண்படுகளே தேசிய மக்கள் கட்சியின் வடக்கின் வருகைக்கான வாய்ப்பை வழங்கியது. இதை உணர்ந்து தமிழ் மக்கள் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.000
- 167
Added a post
ஒரு பெண் பிகாஸோவை அணுகி தன்னுடைய படத்தை வரைந்து கொடுக்கச் சொன்னாள். பிகாஸோவும் வரைந்து கொடுத்தார். அவளுக்கு மிகவும் திருப்தி. அவள் இது மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் ஒரு விஷயம். நீங்கள் என் கழுத்தை சுற்றி டைமண்ட் நெக்லஸ், விரலில் மிகப்பெரிய வைர மோதிரம், கைகளில் டைமண்ட் பிரஸ்லெட் ஆகியவற்றை வரைய மறந்து விட்டீர்கள். என்றாள்.பிகாஸோ, ஆனால் நீங்கள் போட்டிருக்கவில்லையே என்று கேட்டார்.அவள், அது விஷயமல்ல, எனக்கு கேன்சர், இன்னும் ஆறு மாதத்தில் நான் இறந்து விடுவேன். நான் இறந்தவுடன் என் கணவர் மறுமணம் செய்து கொள்வார் என்று எனக்குத் தெரியும். அவர், நீ இல்லாமல் என்னால் ஒரு நொடிகூட வாழ முடியாது என்று கூறினாலும்கூட அவர் நான் இறப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். பெண் இல்லாமல் அவரால் ஒரு கணம்கூட வாழ முடியாது என்று எனக்குத் தெரியும், ஆகவே உடனடியாக அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்றாள்.பிகாஸோ, நீ இப்போது கூறியதற்க்கும் டைமண்ட் நகைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை என்றார்.அவள், உங்களுக்கு பெண் மனது புரியாது. நான் இறந்தபின் எனது கணவர் மணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்னுடைய சித்திரத்தை பார்ப்பாள். பின் அவள் அவரை எங்கே அந்த வைரங்கள் என்று வதைப்பாள். நான் இறந்தபின்னும் கூட என்னால் அவரை விட்டு இருக்க முடியாது. அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். என்றாள்.செத்தாலும் விட மாட்டோம்ல !
- 170
Added a post
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சிறுதூர நடை பயிற்சிகளின் மூலம் மன அமைதி ஏற்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உணவு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு ரிஷபம்கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பயணம் மேற்கொள்வதற்கான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மிதுனம்செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பத்திர துறைகளில் சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவுகளிடம் இணங்கிச் செல்லவும். செயல்படும் விதத்தில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கடகம்தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் நலனில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். பாசம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை சிம்மம்சகோதரரின் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூரப் பயணங்கள் ஈடேறும். கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆசைகள் நிறைவேறுவதில் இருந்துவந்த தடைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னிபொழுதுபோக்கான செயல்களின் மூலம் விரயம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பிறமொழி மக்களிடம் கனிவுடன் செயல்படவும். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சோர்வு மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு துலாம்நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வரவுகளில் மந்தமான சூழல் இருக்கும். சுப காரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். சுப காரியம் தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கவலை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் விருச்சிகம்குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா தனுசுதடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் மகரம்மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். துணைவரின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கும்பம்தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் அமையும். வெளிவட்டாரத்தில் நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வகையில் ஆதாயம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாகும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம்கணவன், மனைவிக்குள் புரிதல் மேம்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
- 185
Added a post
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 20.4.2025. திதி : இன்று மாலை 03.02 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. நட்சத்திரம் : இன்று காலை 08.14 வரை பூராடம். பின்னர் உத்திராடம். நாமயோகம் : இன்று இரவு 08.18 வரை சித்தம். பின்னர் சாத்தியம். கரணம் : இன்று அதிகாலை 03.01 வரை பத்தரை. பின்னர் மாலை 03.02 வரை பவம். பிறகு பாலவம். அமிர்தாதியோகம்: இன்று காலை 08.14 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம். நல்ல நேரம்காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 03.00 முதல் 04.00 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- 187
Added a post
ஒரு சீடன், குருவைப் பார்த்துக் கேட்டான் ."குருவே.. நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளை மீறியவன் ஆவேனா..?""இல்லையே..தாராளமாகச் சாப்பிடலாம்" என்றார் குரு.உடன், சீடன் கேட்டான்."கூடவே, ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் தவறா குரு ?""அதிலொன்றும் தவறில்லை. சாப்பிடலாம்." என்றார் குரு.மறுபடியும் சீடன் கேட்டான்.."அவற்றுடன் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே?""ஒரு குறையும் இல்லை" என்றார் குரு. அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான்."இம்மூன்றையும் சேர்த்துதான் பேரிச்சம்பழ மது தயாரிக்கப்படுகிறது. அதை மட்டும் ஏன், நான் அருந்தக்கூடாது என்கிறீர்கள்" என்றான்.குரு கேட்டார்.."கைப்பிடி மண்ணை அள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?""வலிக்காது" குருவே என்றான்."அதன் மீது சிறிது நீரை ஊற்றினால். . ?" குரு கேட்டார்."அதுவும் வலிக்காது" என்றான். குரு அமைதியாகச் சொன்னார்.. "இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி, வேகமாக உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?""என் தலை பிளந்துவிடும் குருவே" என்றான்."உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டதா" என்றார் குரு."கிடைத்து விட்டது. மன்னித்து விடுங்கள் குருவே" என்றார் சீடன்.*நீதி* : அறிவை நல்ல விஷயங்களுக்காக மட்டும் உபயோகப்படுத்துவோர் , எளிதில் வெற்றி பெறுவர்..
- 197
Added article
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்களுக்கு ஒரு சந்தேகம் .டைரக்டர் ராமண்ணாவுக்கும் அந்த சந்தேககேம் வந்தது. நடிப்பு சிறப்பாக இருந்தாலும் அதில் ஓர் உறுத்தலாக அந்த வலிப்பு நடிப்பு. சிவாஜியிடம் எப்படி கேட்பது .ஒரு தயக்கம் ராமண்ணாவுக்கு. ராமண்ணாவின் புருவ வியப்பு கலந்த சந்தேகமும் கண்ணில் தெரிந்த உண்மையின்மையும் சிவாஜி அறியாமல் இருப்பாரா?சிவாஜி அன்று நடித்தது ஜுலியஸ் சீசர் வேடம்.ராமண்ணாவை அழைத்து ,சீசருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளதை தான் படித்திருப்பதாக கூறி ,அதைத்தான் நான் செய்தேன் என கூற ராமண்ணாவின் விழிகளில் இப்போது ஆச்சர்யம்.ஒரு நிமிடம் வந்து போன சந்தேகம் அது அதிசயமாய் ஆச்சர்யமாய் மாறிப் போனது.மேதைகளை புரிந்து கொள்வது சில சமயங்களில் கஷ்டம்.புரியாமல் வாழ்வது நம் துரதிருஷ்டம்.சொர்க்கம் படத்தில் ஜூலியஸ் சீசராக சிவாஜி நடித்த போது...
- 199
ஒரு சாதாரண புகைப்படம் எப்படி பார்ப்பவர்களைக் குழப்ப முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம்!!!கொஞ்சம் உற்று நோக்கினால் அல்லது zoom செய்து பார்த்தால் உண்மை தெரியும்!!!வெறும் துணி ஒருவரை மிதக்க வைக்கும் விந்தை!!! இப்படத்தை எடுத்த பெயர் தெரியாத போட்டோகிராபர் வாழ்க!சட்டென பார்க்கும்பொழுது அவர் மிதப்பது போல் தான் தெரிகிறது.
- 194
Added a post
சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. தமிழ்நாட்டில் - விருத்தாசலத்ததில் தான் இருக்கிறது...கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது. தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார். இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்.நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்த தமிழ்நூல் காப்பகம் தான்.
- 516
Added a post
திருவாரூர் அருகே கஞ்சனூரில் தேவ சர்மா என்ற அந்தணன் இருந்தான்.அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்..தெரியாமலும் ஒரு இளம் பசுங் கன்றின் மீது போட்டு விட, அதன் பாரம் தாங்காமல் அந்த இளம் கன்றுக்குட்டி துடிதுடித்து இறந்து போனது.அந்தக் கன்று, அந்த ஊரில் சிறந்த பக்தி மானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவ சர்மா.அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவ’ என்று கத்தினான்.குரல் கேட்டு வெளியே வந்த ஹர தத்தர், தேவ சர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார்.*பின்னர், ‘நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கி விட்டது.*இரண்டாவதாக சிவ என்று கூறிய தற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது’ என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.ஆனாலும் கூட ஊர் மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்க வில்லை. ஊரை விட்டு விலக்கியே வைத்திருந்தார்கள்.ஒரு நாள் ஹர தத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன் படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.அப்போது ஹர தத்தர், தேவசர்மா விடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, ‘நீ சிவ.. சிவ என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கி விட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்ப வில்லை.எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார்.அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ‘கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்’ என்பதால் வந்த நகைப்பு அது.ஆனால் ஹர தத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், ‘இறைவா! உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினார்.என்ன ஆச்சரியம்.. தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது.அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழி பட்டனர்.இந்த கல் நந்தி இன்றும் அதே கஞ்சனூர் அக்னீஸ் வரர் ஆலயத்தில் இருக்கிறது. நேரில் சென்று தரிசிக்க விரும்புவர்கள் *திருவாரூர் - கும்பகோணம் சாலையில் 40 km தூரத்தில் உள்ள அதே கஞ்சனூர் சிவன் கோவிலில் இன்றும் அந்த புல் சாப்பிட்ட நந்தியை காணலாம்.....*
- 537
Added a news
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த நிலநடுக்கமானது இன்று (19) நண்பகல் 12:17 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் பூமிக்கு 130 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு, வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் சில குலுங்கியுள்ள நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.000
- 544