Ads
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!
Empty
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் சர்தார். அந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதே போல பாலிவுட்டில் விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த சீரிஸின் வெற்றியால் அவர் இந்தியா முழுவதும் அறிந்த நடிகையானார். இதையடுத்து சுந்தர் சி யின் பேய்வரிசை படமான அரண்மனை 4 ல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.சமூகவலைதளங்களில் தீவிரமாக பதிவுகள் போட்டுவரும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஜொலிக்கும் ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.
- 52
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு மீது மோதி, இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. லேசான காயங்களுடன் ஜீவாவும் அவரது குடும்பத்தினரும் உயிர் தப்பி இருக்கின்றனர். காருக்குள் இருந்தது ஜீவா எனத் தெரிந்ததும் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து மாற்று காரில் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு ஜீவா அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.
- 66
ஏழை சிறுவன் ஒருவன் , தனது விலை உயர்ந்த காரை வியப்புடன் பார்ப்பதை பார்த்த ஒருவர் , அந்த சிறுவனை உக்காரவைத்து கொஞ்சதூரம் ஓட்டினார். "உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை?" என சிறுவன் கேட்டான்." தெரியவில்லை.., இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது" என்றார் அந்த மனிதர். "அப்படியா.. அவர் மிகவும் நல்லவர்" என சிறுவன் சொல்ல,"நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா?" சிறுவன் சொன்னான்... "இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப் போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்''..
- 558
நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?"அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்....பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.அவனுக்கு அவமானமாகி விட்டது.அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.அவனிடம் சொன்னாள்..... "நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்"இளைஞன் உரக்ககச் சொன்னான்.என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.அவள் குறுகிப் போனாள்.அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...!நீதி :ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும்.
- 595
தம்மாதுண்டு பிளாஸ்டிக் இதெல்லாம் செய்யுமா? கார் கீ-க்கு இருக்கும் சீக்ரெட் பவர்கள்...ஆட்டோமொபைல் துறையில் தற்போது தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. இதன் காரணமாக கார் கீ ஃபாப்களும் (Key Fob) நவீனமயமாகி விட்டன. காரை அன்லாக் செய்வதற்கு மட்டும் கீ ஃபாப் பயன்படுகிறது என நினைத்து விட வேண்டாம். உருவத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் இந்த பிளாஸ்டிக் துண்டு, உங்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்யும்.கீ ஃபாப் என்பது சிறிய ரிமோட் டிவைஸ் ஆகும். கீலெஸ் சிஸ்டமை (Keyless System) கட்டுப்படுத்துவதற்கு இது உதவி செய்கிறது. கீ ஃபாப் இருப்பதால், நீங்கள் காருக்கு உள்ளே செல்வதற்கு உண்மையான சாவி தேவைப்படாது. உங்கள் காருடன் தொடர்பு கொள்வதற்கும், அதனை கட்டுப்படுத்துவதற்கும் ரேடியோ அலைவரிசைகளை (Radio Frequencies) கீ ஃபாப்கள் பயன்படுத்துகின்றன.ஜன்னல்களை திறந்து, மூட:தென்றல் உங்கள் மீது தவழ கார் கீ ஃபாப்பை பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? காரின் அனைத்து ஜன்னல்களையும் கீ ஃபாப்பை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இறக்க முடியும். பல்வேறு கார்களின் கீ ஃபாப்களில் தற்போது இந்த வசதி வழங்கப்படுகிறது. கீ ஃபாப் மூலம் ஜன்னல்களை திறப்பது மட்டுமின்றி, மூடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.வெளிப்புற சைடு வியூ மிரர்களை மடக்கி வைக்க:வெளிப்புற சைடு வியூ மிரர்களை மடக்கி வைப்பதற்கும், மீண்டும் விரித்து கொள்வதற்கும் கூட உங்கள் கார் கீ ஃபாப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். நெருக்கமான இடங்களில் காரை பார்க்கிங் செய்யும்போது சைடு வியூ மிரர்களை மடக்கி வைப்பது அவசியம். இல்லாவிட்டால் மற்றவர்கள் அதனை சேதப்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.ஒரு சில கார்கள் ஆட்டோமேட்டிக்காகவே இதனை செய்து கொள்ளும். அதாவது காரை லாக் செய்யும்போது ஆட்டோமேட்டிக்காகவே வெளிப்புற சைடு வியூ மிரர்கள் மடங்கி கொள்ளும். இந்த வசதி இல்லாத கார்களில், கீ ஃபாப் மூலமாக வெளிப்புற சைடு வியூ மிரர்களை மடக்கி வைத்து கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ள வசதி என்பதில் சந்தேகமில்லை.சன்ரூஃப்பை திறந்து, மூட:இன்று பெரும்பாலான கார்களில் சன்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. குறிப்பாக எஸ்யூவி கார்களில் அதிகளவில் சன்ரூஃப்களை காண முடிகிறது. வாடிக்கையாளர்களும் சன்ரூஃப் உள்ள கார்களை அதிகம் விரும்புகின்றனர். இந்த சன்ரூஃப்பை திறந்து, மூடுவதற்கும் கூட காரின் கீ ஃபாப்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.சீட் அட்ஜெஸ்மெண்ட் மெமரியை செட் செய்வதற்கு:ஒரு சில கார்கள் சீட் மெமரியை செட் செய்து கொள்வதற்கும் கூட உங்களை அனுமதிக்கின்றன. ஒவ்வொரு கீ ஃபாப்பிற்கும் பிரத்யேகமான எண்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே நீங்கள் காருக்கு உள்ளே நுழைந்ததும், யார் காரை ஓட்டுகிறார்? என்பதை அது ஆட்டோமேட்டிக்காகவே தெரிந்து கொள்ளும். சீட் இந்த பொஷிஷனில் இருந்தால் கார் ஓட்ட சௌகரியமாக இருக்கும் என்பதை நீங்கள் முன் கூட்டியே செட் செய்து கொள்ளலாம்.நீங்கள் காருக்கு உள்ளே நுழைந்தவுடன், காரின் ஓட்டுனர் இருக்கை நீங்கள் ஏற்கனவே செட் செய்து வைத்துள்ள பொஷிஷனுக்கு வந்து விடும். கீ ஃபாப் மூலமாக இதனை செய்வது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம். சீட் பொஷிஷன் சரியாக இருந்தால்தான், உங்களால் சௌகரியமாக கார் ஓட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே கூறியிருப்பது ஒரு சில வசதிகள் மட்டுமே. உங்கள் காரின் கீ ஃபாப் மூலமாக இன்னும் பல்வேறு வசதிகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் கீ ஃபாப்பில் என்னென்ன வசதிகளை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதும், அந்த வசதிகளை எப்படி பயன்படுத்துவது? என்பதும் கார் உற்பத்தி நிறுவனங்களை பொறுத்து மாறுபடும்.
- 607
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 26 ஆம் தேதி மேஷம் -ராசி: அரசு துறைகளில் அலைச்சல் அதிகரிக்கும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குழந்தைகளின் வழியில் பொறுமை காக்கவும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம் ராசி: கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சைமிதுனம் -ராசி: கலை துறைகளில் ஈடுபாடு உண்டாகும். இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மறதி மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைகடகம் -ராசி: வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி நிறைவேறும். அயல்நாட்டு பொருட்கள் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதாசிம்மம் -ராசி:உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை கன்னி -ராசி: உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்துலாம் -ராசி: வாத திறமையால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சேமிப்புக்கான வரவுகள் மேம்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்விருச்சிகம்- ராசி: மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் பகுத்தறிந்து செயல்படும் எண்ணம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எந்த ஒரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு தனுசு -ராசி: வேள்வி பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிர்வாகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வாழ்க்கை துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். நிதானம் வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்மகரம் -ராசி:மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சபை நிமித்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்கும்பம் –ராசி:வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை உண்டாகும். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் ஏற்படும். சாதனை வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: தந்தைவழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தனித்திறமைகளை புரிந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். நீண்டதூர பயணம் சார்ந்த எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 632
ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை 11.9.2024சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 07.22 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று மாலை 06.07 வரை கேட்டை. பின்னர் மூலம். பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 648
குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய இரு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியும்.தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.மேலும் இரண்டு நாட்களில் தபால் வாக்குகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், வேறு எந்த நாளையும் அதற்குப் பயன்படுத்த முடியாது என்றும், செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.தேர்தல் நடத்தப்படும் தினத்தில் அதே வாக்கைப் பயன்படுத்த முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 000
- 738
நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தமது அமைப்பு சிறப்பு ஆய்வொன்றினை நேற்று முதல் தொடங்கியுள்ளதாகவும், சிலர் கட்சி அலுவலகங்கனை கூட அமைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 38 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் தற்போது பத்து வேட்பாளர்கள் மாத்திரமே தமது கொள்கைகளை முன்வைத்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சில வேட்பாளர்களை கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.000
- 743
சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கிளிநொச்சியில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், அண்மைய பொருளாதார வீழ்ச்சியை அடுத்து மக்கள் படும் துன்பத்தைப் போக்க சஜித்தோ அல்லது அனுரவோ முன்வரவில்லை.உலகெங்கிலும் உள்ள அரச தலைவர்களை சந்தித்து உரம், எரிபொருள் கேட்ட போது சஜித்துக்கும் அநுரவுக்கும் தேர்தல் நடத்துமாறு கோரியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்களின் வலிக்கு மத்தியில் தேர்தல் நடத்துமாறு கோரியும் வேலைநிறுத்தம் நடத்தியும் நாட்டை சீர்குலைக்க முயன்ற தலைவர்களை நம்ப முடியாது எனவும் தெரிவித்தார். எனவே, சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்."இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு சாப்பிட உணவிருக்கவில்லை. கேஸ்.எரிபொருள், மருந்து, உரம் இருக்கவில்லை. பொருளாதாரம் சரிவடைந்திருந்தது. அப்படியொரு தருணத்திலேயே நாட்டை ஏற்றேன். மக்கள் கஷ்டப்படுவதை கண்டு வருந்தினேன். கஷ்டங்களில் இருந்து மீண்டு மக்கள் சுமூகமாக வாழ வழி செய்ய வேண்டுமென கருதியே ஆட்சியை ஏற்றுக்கொண்டேன். அனுரவோ சஜித்தோ அரசாங்கத்தை ஏற்க முன்வரவில்லை. மக்களின் வயிற்றுப்பசியை போக்கவோ, தட்டுப்பாடுகளை நிவர்த்திக்கவோ, பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்தவோ அவர்கள் முன்வரவில்லை. மக்கள் கஷ்டப்படுவதை வேடிக்கை பார்த்தனர். கஷ்டத்தை போக்க உதவி செய்ய வருமாறு கோரினேன். அதையும் மறுத்திவிட்டனர். மக்கள் தட்டுப்பாடுகளுடன் தவித்தபோது அவர்களுக்கு தேர்தல் தேவைப்பட்டது. தேர்தல் நடத்தியிருந்தால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமா? அவர்கள் தேர்தலுக்கு பணத்தை செலவிட சொன்னார்கள். அவர்களை என்னோடு இணையுமாறு அழைத்தேன் வரவில்லை. மக்கள் கஷ்டத்தில் அரசியல் இலாபம் தேடினார்கள். நான் தட்டுப்பாடுகளை நிவர்த்திக்க வழி செய்தேன். அதனால் தொழில்களை மீள ஆரம்பிக்க முடிந்தது. எந்த பிரச்சினைகள் இருந்தாலும் மக்களை வாழவைக்கும் முயற்சிகளை எடுத்தோம். அன்று பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. நான் ரூபாவை பலப்படுத்தி விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கினேன். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் பிரச்சினைகள் இன்னும் உள்ளன. மக்களுக்கு சுமைகள் உள்ளன. அவற்றை குறைக்க வழி செய்வோம். இன்று சுமூகமான சூழலை உருவாக்கியிருக்கிறோம். ஐஎம்எப் மற்றும் 18 நாடுகளின் கடன் உதவிகள் கிடைக்கவுள்ளன. அதனை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். அடுத்த ஐந்து வருடங்களில் அதற்கு வழி செய்வேன். அதற்காகவே மக்கள் ஆணை கேட்கிறேன். பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தாலும். அது முழுமையாக உறுதியாகவில்லை. அதற்காகவே இயலும் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறேன். ஐந்து அம்சங்களை உள்ளடக்கி அந்த திட்டத்தை தயாரித்திருக்கிறோம். ரூபாவை வலுவடையச் செய்வதே மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சிறந்த வழியாகும். மக்கள் தாங்கிக்கொள்ள கூடிய அளவு பொருட்களின் விலையை குறைக்கலாம். பணம் அச்சிட்டால் அது நடக்காது. அதிகளவில் கடன் பெற்றாலும் அதே நிலையே ஏற்படும். நாம் கடன் பெறுவதை நிறுத்தியுள்ளோம். அதனால்தான் வருமானத்தை மேம்படுத்த வற் வரியை அதிகரித்து ரூபாயை பலப்படுத்தினோம். இப்போது வௌிநாட்டு வருமானத்தை ஈட்ட வேண்டியுள்ளது. இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் இல்லாமையால் கடன் பெற வேண்டியுள்ளது. எனவே ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. நவீன விவசாய முறைமைகளுக்குச் செல்ல மக்களுக்கு உதவிகளை வழங்குவோம். மரக்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விநியோகிக்க தனியாருடன் இணைந்து சந்தைப்படுத்தல் திட்டங்களை அறிமுகப்படுத்துவோம். நெல் விளைச்சலையும் பலப்படுத்துவோம். உலக சனத்தொகை அதிகரித்து வரும் வேளையில் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தி நாமும் வலுடைய வேண்டும். இதனால் கிராமங்களில் வறுமை மறையும். இந்த பகுதிகளை இலங்கையின் மிகச்சிறந்த விவசாய மையமாக மாற்றுவோம். எமக்கு உதவ மக்கள் முன்வர வேண்டும். அதற்காகவே பலாலி சர்வதேச விமான நிலையை மேம்படுத்தினோம். பரந்தன், காங்கேசன்துறை, மாங்குளத்தில் முதலீட்டு வலயங்களை அமைப்போம். சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்வோம். இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யவும் முடியும். அதனால் பலருடைய வாழ்க்கை செழிப்படையும். டிஜிட்டல் பொருளாதார உருவாக்கப்படும். கிளிநொச்சி பொறியியல் பீடத்தை சுற்றிலும் அமைந்துள்ள பகுதிகளை மேம்படு்த்துவோம்.என்னுடைய எதிர்காலத்தைப் பற்றியோ சஜித்துடையதோ அனுரவுடையதோ எதிர்காலத்தை பற்றியோ சிந்திக்காமல் தத்தமது எதிர்காலத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்து தீர்மானியுங்கள்.அதைப்பற்றி சிந்தித்து சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் இருக்காது." என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.000
- 744
எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று பிற்பகல 3 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது.ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக் கூட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கினார்.இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,உணவு, டீசல், மருந்து இல்லாமல் நாடு முழுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. விவசாயத்துக்கு உரமும் இல்லை.அச்சந்தர்ப்பத்தில் நாட்டை நான் பொறுப்பெடுத்தேன். உணவு, மருந்து இல்லாமல் நீங்கள் துன்பப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதிலிருந்து மீட்க முன்வந்தேன். நாட்டை மீட்டேன்அனுர, சஜித் யாரும் நாட்டை மீட்க முன்வரவில்லை. உங்களை பட்டினியில் இருக்கவிட்டார்கள். உணவு, உரம், எரிபொருள், வர்த்தகத்தை முன்னெடுக்க நான் முன் வந்தேன். பாடசாலைகளை திறந்து உங்கள் பிள்ளைகளின் கல்வியை தொடர நடவடிக்கை எடுத்தேன்.நீங்கள் துன்பப்படும் போது யாரும் முன்வரவில்லை. எனது முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முன்வருமாறும், அரசாங்கத்துடன் இணையுமாறும் நான் கேட்டேன். அவர்கள் முன்வரவில்லை.அவர்கள் தேர்தல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். தேர்தல் நடத்துவதற்கு பணம் செலவாகும். அரசுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைத்தேன். அவர்கள் வரவில்லை.ஆனால், வேலை நிறுத்தம், தொழிற்சங்க நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுத்தனர். அதனால் எதுவும் நடக்கவில்லை.உரம், காஸ், உணவு என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் வகையில் செய்தேன். மண்ணெண்ணை கிடைக்கச் செய்தேன். கடலுக்குச் சென்று மீன்பிடிக்க உங்களுக்கு உதவினேன்.எமது பணம் வீழ்ச்சியடைந்திருந்தது. டொலரின் பெறுமதி அதிகமாக இருந்த நிலையில் அதனை குறைத்தேன். அதனால், பொருட்களின் விலை படிப்படியாக குறைந்தது.நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய தொடங்கியது. வாழ்க்கை செலவு அதிகமாக உள்ளது. அதனை இலகுபடுத்த பல திட்டங்களை வைத்துள்ளேன். அதனை முன்னெடுத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதே அடுத்த 5 ஆண்டு திட்டம்.ஆனாலும், இப்போது சுமுகமாக வாழ முடிகிறது. இந்த நாட்டிற்கு IMF மற்றும் 18 நாடுகள் உதவின. மேலும் கடன்கள் வழங்கி இன்னும் உதவிகளை செய்ய அந்த நாடுகள் முன்வந்துள்ளன.5 வருடத்தில் இந்த வேலையை நான் முன்னெடுப்பேன். இயலும் சிறிலங்கா எனும் திட்டத்தால் நாட்டை முன்னேற்றுவேன்.வாழ்க்கை சுமை இலகுபடுத்தல், தொழில் வாய்ப்பு, வரிச்சுமையை இலகுபடுத்துவது உள்ளிட்ட திட்டங்களே அடுத்த 5 வருடங்களில் முன்னெடுக்கப்படும்.வீழ்ந்திருந்த நாட்டின் வருமானத்தை எட்டுவதற்கு வரி அதிகரிக்கப்பட வேண்டி ஏற்பட்டது. ரூபாவின் பெறுமதி அதிகரித்தது.இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் எமது பணம் இழக்கின்றது. நாம் எமது உற்பத்தி பொருட்களை ஏற்றமதி செய்ய வேண்டும்.நவீன விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதனால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.இப்போது உலகத்தில் சனத்தொகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு நாமும் உணவு கொடுக்கலாம். உணவு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்வதை அதிகரிக்கலாம்.அதனால் கிராமத்தில் வறுமை குறையும். நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும். அவற்றையே நான் முன்னெடுக்கவுள்ளேன்.சூரியசக்தி உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறோம். 365 நாளும் சூரிய சக்தி எமக்கு கிடைக்கிறது. சூரிய மின்சக்தியை நாங்கள் இந்தியாவிற்கு விற்க முடியும்.10 ,15 வருடத்தில் இங்குள்ள பலர் பணக்காரர் ஆகிவிடுவார்கள். பூநகரியில் அவ்வாறான மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.000
- 745
மட்டக்களப்பை 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார்.காவ்யஸ்ரீ , மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். இச்சாதனை நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. காவ்யஸ்ரீ, மட்டக்களப்பு பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகளாவார்.இந் நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங், பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தது.
- 1080
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ஜெயம் ரவி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- 1088
யாகி சூறாவளியால் வியட்நாமில் 64 பேர் பலியானதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸில் உருவான யாகி சூறாவளி சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது.வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி சூறாவளி வீசியது.மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி சூறாவளி கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது. இந்நிலையில் அங்குள்ள மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.ஆற்றின் குறுங்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு தூண்டுகளாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. இதன்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புத்துறையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் வியட்நாமில் சூறாவளி பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
- 1075
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர்.90களில் வெளியான லயன் கிங் படங்களில் முபாசா கதாபாத்திரத்திற்கும் ஜேம்ஸ் குரல் கொடுத்திருக்கிறார். பீல்ட் ஆப் ட்ரீம்ஸ், கோனன் தி பார்பேரியன், கம்மிங் டு அமெரிக்கா மற்றும் பல படங்களில் நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.இதனையடுத்து இவரைக் கௌரவிக்கும் விதமாக கடந்த 2011ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆஸ்கர் அகாடமி வழங்கியது.ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்சின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- 1100
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 25 ஆம் தேதி மேஷம் -ராசி: எதிலும் கோபமின்றி செயல்படவும். வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். புதிய கண்ணோட்டம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். முக்கியமான வேலைகளை மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை ரிஷபம் ராசி: சுபகாரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்மிதுனம் -ராசி: கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்கடகம் -ராசி: புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்சிம்மம் -ராசி:எதிர்பாராத பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். சுப முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு செயல்பாடுகளில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு கன்னி -ராசி: விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். அடிப்படை கல்வியில் முனேற்றமான வாய்ப்புகள் அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்துலாம் -ராசி: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்விருச்சிகம்- ராசி: முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். எண்ணியதை வித்தியாசமான முறையில் நிறைவேற்றுவீர்கள். விற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை தனுசு -ராசி: பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பணிகளில் இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுமகரம் -ராசி:சிகை அலங்கார பணிகளில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடும். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுகும்பம் –ராசி:பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். சவாலான வாதங்களையும் சமாளிப்பீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேளாண்மை துறைகளில் ஆலோசனைகள் மூலம் தெளிவு பிறக்கும். உழைப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: செல்வச் சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விவேகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 1551
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டமைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் செப்டெம்பர் 20 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டு செப்டெம்பர் 23 அன்று மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச் சாவடி நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர் 19ஆம் திகதியன்று கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்குத் தேவையான மேசைகள், கதிரைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.000
- 1674
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தேசிய நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்தும் என இந்தியா நம்புவதாக ஜெனிவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் கௌரவ் குமார் தாக்கூர் தெரிவித்தார்.அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது.எவ்வாறாயினும், தனது வாக்குறுதிகளை விரைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் செயல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது.இலங்கை விடயங்களை கையாளும் போது இந்தியா இரண்டு அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றுகிறது. இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அவர்கள் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சமாதானத்துடன் நடத்தப்படுதல் என்பது ஒன்று.அடுத்ததாக இலங்கையின் ஐக்கியம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றுக்கும் இந்தியா முக்கியத்துவம் வழங்குகிறது என ஜெனிவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் கௌரவ் குமார் தாக்கூர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.000
- 1671
வியட்நாமில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய வியட்நாமின் காவ் பாங் மாகாணத்தில் பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பேருந்தில் 20 பயணிகள் வரையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து காவ் பாங் மாகாணத்தில் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மண்சரிவுகள் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.000
- 1678
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்கப்படவுள்ளன.பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் மற்றும் முகமாலை பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளே அகற்றப்பட்டுள்ளன.இதன்படி, 11 இலட்சத்து 42 ஆயிரத்து 563 சதுரமீற்றர் பகுதியிலுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பகுதிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 1676
2024ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.அத்துடன், புலமைப்பரீட்சைக்கான ஊகத்தின் அடிப்படையிலான வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும் வெளியிடுவதற்கும் தடைவிதித்துள்ளதுபரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களைத் தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளிப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 15ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமையினால் மேற்படித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 1680
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் ஒல்லி பொப் 154 ஓட்டங்களைக் குவித்தார். இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 263 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதற்கமைய 62 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 156 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தநிலையில் 219 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கித் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் பெத்தும் நிசங்க 127 ஓட்டங்களைக் குவித்தார். இதன்படி 10 ஆண்டுகளின் பின் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்துள்ளது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அத்துடன் போட்டியின் நாயகனாக பெத்தும் நிசங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகர்களாக ஜோ ரூட் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.000
- 1698
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, எதிர்வரும் 14 ஆம் திகதியும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்000
- 1680
காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்குமிடையில் இடம்பெறுகின்ற பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை என்ற இந்தக் கப்பல் சேவை, போதிய பயணிகளின் எண்ணிக்கையின்மை காரணமாக வாராந்தம் 3 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாட்கள் இந்த கப்பல் சேவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15ஆம் திகதி வரையில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும் இந்தக் கப்பல் சேவை, 21ஆம் திகதி முதல் சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.000
- 1696
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்ற Open Mic Night இளைஞர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.எதிர்பாராதவிதமாக அந்த இடத்துக்குச் சென்ற ஜனாதிபதியை இளைஞர்கள் அன்புடன் வரவேற்றனர்.இளைஞர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்குச் சாதகமான பதில்களை வழங்கினார்.நீங்கள் அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் ஜனாதிபதி கேட்டதற்கு அந்த இளைஞர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார்.நாட்டின் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்க நல்ல அரசு அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் இளைஞர்களுக்கு நல்லதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்மீண்டும் வரிசையில் நிற்க முடியாது என்று இளைஞர் ஒருவர் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தனது ஆட்சியில் இந்த நாட்டின் இளைஞர்கள் சினிமா வரிசையில் மாத்திரமே நிற்க வேண்டி ஏற்படும் என்றார்.இளைஞர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தனது கடந்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சராக தாம் வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்த போது, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, தன்னை அழைத்து வெள்ளை அறிக்கை நல்லதுதான், ஆனால் மறுசீரமைப்புகளை முன்னெடுக்கச் சென்று அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார்.மேலும், அந்த மறுசீரமைப்புகளைச் செய்து தொழிலை இழக்க வேண்டாம் என்று ஜே.ஆர். ஜயவர்தன தமக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய தான் இதுவரை செயற்பட்டதாகவும், ஆனால் இம்முறை நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவற்றுக்கு முரணாக நடக்க நேரிட்டதாகவும் தெரிவித்தார்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் நாட்டைப் பொறுப்பேற்ற போது பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடன் சுமையுடன் தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.அதன் பிரகாரம், உள்நாட்டு வங்கிகள் ஊடாக கடன் பெற வேண்டாம் என்றும் பணத்தை அச்சிட வேண்டாம் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியதாகவும், அந்த நிலையைக் கருத்தில்கொண்டு அரச வருமானத்தை ஈட்டுவதற்கு வட் வரியை அதிகரிக்க வேண்டியேற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிட்டால் நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டு வர முடியாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.இந்த இடத்துக்கு எதிர்பாராத விதமாக வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இளைஞர்கள், தமது தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாட முடிந்தமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர் என்று ஜனாதிபதி ரணிலின் தேர்தல் பிரசார ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.000
- 1686