Holiday Gift

Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

பழமொழி

"உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை"

Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
Added a news  
ஹைதராபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்த ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணிக்கு ஷர்துல் தாக்கூரின் நான்கு விக்கெட்டுகள் ஹைதராபாத் அணியை ஒன்பது விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த உதவியது.சன்ரைசர்ஸ் அணிக்காக டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 28 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தார், அதே நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டி (32), ஹென்ரிச் கிளாசென் (26), மற்றும் அனிகேத் வர்மா (36) ஆகியோர் அணிக்காக பயனுள்ள பங்களிப்பை வழங்கினர்.லக்னோ அணிக்காக, ஷர்துல் தாகூர் (4/34) சிறப்பான பந்து வீச்சாளராக இருந்தார், அவேஷ் கான் (1/45), திக்வேஷ் ரதி (1/40), பிரின்ஸ் யாதவ் (1/29), மற்றும் ரவி பிஷ்னோய் (1/42) ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.190 ஓட்ட சேஸிங்காக துடுப்பெடுத்தாடிய லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தார்.இவர் தவிர தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்து, 16.1 ஓவர்களில் 193/5 என்ற ஓட்டங்களை எடுத்தது 2025 ஐ.பி.எல். சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பேட் கம்மின்ஸ் (2/29), மொஹமட் ஷமி (1/37), அடம் ஜாம்பா (1/46) மற்றும் ஹர்ஷல் படேல் (1/28) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூர் தெரிவானார்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அடுத்த போட்டி ஏப்ரல் 1 அன்று பஞ்சாப் கிங்ஸுடன் லன்னோவில் நடைபெறவுள்ளது.000
  • 202
Added a news  
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்பதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இந்த விஜயத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்தில் உள்ள ஜெயகிரக மகா போதிக்கு வழிபாடு நடத்துவார் என்றும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்தியப் பிரதமருடன் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.000
  • 202
Added a news  
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அந்த சேவைகளை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.கடந்த 24 ஆம் திகதி காலி - மாத்தறை பஸ் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.தாக்குதலை நடத்திய மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த லொறி சாரதி மற்றும் முச்சக்கரவண்டி சாரதிக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.000
  • 204
Added a news  
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடைபெற உள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • 203
Added a news  
பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம், விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண் வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார்.அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான விடைகள் எழுதப்பட்ட போதிலும் சரியானதாக குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை போட்டுள்ளார்.இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டியதுடன் கண்டிக்கும் வகையில் மெதுவாக அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முந்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றையதினம் கைது செய்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்றுகூடியிருந்தனர்.பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.000
  • 207
Added a news  
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியில் நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து, குறித்த பதவிக்காக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான லலித் பதிநாயக்க, சஞ்வீவ மெதவத்த, ரன்மல் கொடிதுவக்கு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிரி ஜயலத் மற்றும் எம்ஜீஆர் எஸ் தமிந்த ஆகிய அதிகாரிகள் பொலிஸ் மா அதிபர் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.அடுத்ததாக இலங்கையின் 37 ஆவது பொலிஸ் மா அதிபர் ஆவார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி நிச்சயமாக அவரை பதவியில் இருந்து நீக்குவார்.நியமிக்கப்படும் அடுத்த பொலிஸ் மா அதிபர் பின்னர் ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படுவார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட்ட, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியை நியமிக்க எதிர்ப்பார்ப்பதாக அறியப்படுகிறது000
  • 210
Added a news  
நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.  சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 9.1 சதவீதமான பாடசாலை மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தற்போது மாணவர்கள் மத்தியில் உளநலப்பிரச்சினைகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.  கடந்த 12 மாதங்களில் 22 சதவீதமானவர்கள் தனிமைப்பட்டுள்ளனர். 12 சதவீதமானவர்கள் பிரச்சினைகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர். 18 சதவீதமானவர்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  13 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.  7.5 சதவீதமானவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்பது பிரச்சினையாகக் காணப்படுவதாகவும் சிரந்திகா விதான குறிப்பிட்டுள்ளார். கையடக்க தொலைபேசி, சமூக ஊடக பாவனை, தனிமைப்படல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.000
  • 208
Added a news  
புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.  அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வரிகள் அமையும் என கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டாவாவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அமெரிக்காவுடனான கனடாவின் பழைய உறவுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனவும் மார்க் கார்னி கூறியுள்ளார்.கனடாவின் பொருளாதாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.000 
  • 213
Added a post  
மேஷம்ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். வர்த்தக செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்ரிஷபம்இழுபறியான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். காப்பீட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மிதுனம்குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். திடீர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார ரீதியான செயல்பாடுகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புகடகம்எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்சிம்மம்மனதில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புகன்னிபுதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனை பணிகளில் இலாபம் மேம்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுதுலாம்உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில புரிதல்கள் உண்டாகும். மருத்துவத் துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புவிருச்சிகம்நண்பர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் புது விதமான சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்தனுசுபுதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகளால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெண்மைகும்பம்திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். புதிய பொருட்ச்சேர்க்கை உண்டாகும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சைமீனம்அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயணம் தொடர்பான செயல்களில் புதுமையான அனுபவம் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
  • 385
Added a post  
குரோதி வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.3.2025. சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 07.24 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று இரவு 09.44 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 348
Good Morning...
  • 347
Added a post  
அமர்நீதி நாயனார் சோழ ராஜ்ஜியத்தில் உள்ள பழையாறையில் பிறந்தார்.அவர் ஒரு செழிப்பான தொழிலைக் கொண்டிருந்தார், மேலும் அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அனைத்து செல்வச் செழிப்பு இருந்தபோதிலும், அவரது மனம் எப்போதும் அவை அனைத்தையும் விட ஒப்பற்ற ரத்தினமான சிவபெருமான் பாதங்களில் மூழ்கியிருந்தது. அமர்நீதியர் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர், சிவ பக்தர்களுக்கு சேவை செய்ய தனது பணத்தை நல்ல முறையில் பயன்படுத்தினார். சிவ பக்தர்களுக்கு துண்டுகள் மற்றும் இடுப்புத் துணிகளை பரிசாக வழங்கி சேவை செய்து வந்தார்.ஒரு முறை, சிவபெருமான் ஒரு பக்தரின் வடிவத்தில் அவரிடம் வந்து பாதுகாப்பாக வைக்குமாறு ஒரு இடுப்புத் துணியைக் கொடுத்தார். காவேரி நதியில் குளித்த பிறகு, பக்தர் நாயனாரிடம் தனது இடுப்புத் துணியைத் திருப்பித் தருமாறு கேட்டார். அமர்நீதி துணியைக் காணவில்லை என்பதைக் கண்டார். இழப்பை ஈடுசெய்ய அவர் முன்வந்தார், ஆதலால் ஒரு புதிய இடுப்புத் துணியைக் கொடுத்தார்.அதை சிவனடியாரோ ஏற்க மறுத்துவிட்டார்.அவருக்கு தனது இடுப்புத் துணியை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தார்.இப்போது சிவனடியாரின் கோபம் தீப்பிழம்புகளைப் போலத் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது, நாயனார் தனது விலைமதிப்பற்ற இடுப்புத் துணியைத் திருட முயற்சிப்பதாகவும், அவரது வணிகம் நேர்மையுடன் செய்யப்படுகிறதா என்றும் அவர் கூச்சலிட்டார். நடுங்கிய நாயனார் சிவனடியாரின் காலில் விழுந்து, இழந்த இடுப்புத் துணிக்குப் பதிலாக ரத்தினங்களையும் நகைகளையும் வழங்கினார். சிவனடியார் மறுத்துவிட்டார். மேலும் அவரிடம் மன்னிப்பு கோர சிவனடியார் தான் அணிந்திருந்த ஈரமான இடுப்புத் துணியின் எடைக்கு சமமான துணியை எடுத்துக்கொள்வதாகக் கூறினார், ஏனெனில் அது நாயனார் இழந்த இடுப்புத் துணியை போன்றது.அவரது குடும்ப நகைகளோ அல்லது அவரது அனைத்து உடைமைகளோ எடைத் தராசில் வைக்கப்பட்டபோது தராசை சாதகமாக சாய்க்க முடியவில்லை. இறுதியாக, அமர்நீதி தன்னையும், தனது முழு குடும்பத்தையும் தராசின் ஒரு தட்டில் அமர்ந்தினார், அவரது பக்தியின் காரணமாக இரண்டு தட்டுகளும் சமநிலைப்படுத்தப்பட்டன. சிவபெருமானின் அருளால், எடைத் தராசு பின்னர் பறக்கும் தேராக மாறி, நாயனாரையும் அவரது குடும்பத்தினரையும் சிவபெருமானின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது.நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை- நாம் இறைவனுக்காக பணி செய்வதில் தவறில்லை என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவனின் பாதங்களில் நாம் முழுமையாக சரணடைந்து, பக்தர்களின் அருளைப் பெற்று,நாம் நம்முடையது என்று அழைப்பதையும் சேர்த்து இறைவனுக்கு அர்ப்பணித்து அவரிடம் கரைவதே சிறந்த பக்தி ஆகும்.
  • 516
  • 517
Added a post  
ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பணம் முடிப்பை கையில் எடுத்துக்கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி! மனநிறைவு அவர் முகத்தில்! நிம்மதியாக தூங்கி எழும்பினார்.மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார்.மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு.அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார்.இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார்.மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்த கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் திருந்தி விட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார்.அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது.அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்தது..
  • 561
Added a news  
வர்த்தக மோதல்கள், மதிப்பிழந்த கனேடிய டாலர் மற்றும் அரசியல் விவாதங்கள் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு அமெரிக்கா செல்லும் கனேடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.இதனால் இரு நாடுகளின் சுற்றுலா துறைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கா செல்ல மக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே பிரபலமான தனது நியூயார்க் பயணங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒட்டாவாவில் செயல்படும் Travac Tours நிறுவனத்தின் உரிமையாளர் கார்ல் கிள்ட்னர் தெரிவித்துள்ளார்."மக்கள் தற்போது அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. இடது, வலது எங்கு பார்த்தாலும் ரத்து செய்துகொண்டே இருக்கிறார்கள்," என தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் முக்கியமான அமெரிக்க சுற்றுலா திட்டமான நியூயார்க் பயணம், கடந்த ஆண்டுகளில் வருடத்திற்கு 25 முதல் 30 பேருந்துகள் வரை இயக்கப்பட்டன.ஆனால் இந்த ஆண்டு ஒரு பயணமும் இல்லை. "இது மிகப்பெரிய இழப்பு. எங்கள் 53 வருட வரலாற்றில், கோவிட்-19 உடன் ஒப்பிடும் அளவுக்கு இது மிகப்பெரிய சரிவாக இருக்கிறது", என கிள்ட்னர் கூறினார்.பயணிகள் குறைந்தது அமெரிக்க சுற்றுலா நிறுவனங்களுக்கும் கடுமையாக தாக்கமளித்துள்ளது. நியூயார்க் Spread Love Tours நிறுவன உரிமையாளர் மேட் லேவி, கனேடிய சுற்றுலாப் பயணிகள் குறைந்திருப்பதை "பேரழிவு" என விபரித்துள்ளார்."நான் 20 ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டியாகவும் நிறுவன உரிமையாளராகவும் இருக்கிறேன். எங்கள் நிறுவனத்தின் மாணவர் குழு சுற்றுலாக்களின் 30% முதல் 50% வரை கனேடியர்களாக இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.கனேடியர்களின் அமெரிக்கப் பயணம் குறைவதால் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில அமெரிக்க விமான நிறுவனங்கள் கனேடிய நகரங்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான விமான சேவைகளை குறைத்து விட்டன.
  • 533
Added a news  
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் வரிகள் விதிக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்."அமெரிக்காவை பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் கனடாவுடன் சேர்ந்து செயல்பட்டால், தற்போது திட்டமிடப்பட்டதை விட மிகப்பெரிய வரிகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பா மற்றும் கனடாவிற்கு எப்போதும் நெருங்கிய நண்பனாக அமெரிக்கா இருந்துள்ளது என அவர் தனது Truth Social பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரி, விதிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவின் நேச நாடுகளின் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.  "இது தொழில் முனைவோருக்கு மோசமானது, நுகர்வோருக்கு இன்னும் மோசமானது" என ஐரோப்பியக் ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் விமர்சித்துள்ளார். "இந்த வரிகள் கனடிய தொழிலாளர்களுக்கான நேரடி தாக்குதலாகும்" என்று கூறியதோடு, பழிவாங்கும் நடவடிக்கைகள் பரிசீலனை செய்யப்படுகின்றன என கனடிய பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்துள்ளார். இந்த புதிய வரிகள் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 569
Added a news  
.......இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான ஒரு வழிமுறையே வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான முயற்சியும் இருக்கின்றது என தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளர் றுஷங்கன், மேலும் கூறுகையில் -வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு சிகரம் தரும் தீர்வுதொழில்மையமான கற்கைத்துறைகளாகக.பொ.த.(உ/த) கலைத்துறை பாடநெறிகள்வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை எமது நாட்டில் தொடர்ந்தும் எந்தவிதத் தீர்வும் இல்லாமல் நீடித்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் கணிசமான தொகையினர் இவ்வாறு தம்மை வேலையற்ற பட்டதாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு வீதிகளில் இறங்கிப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறை பட்டதாரிகள் என்பது தெரியவரும்.மேலும் பாடத்தெரிவுகளை மேற்கொள்ளும்போது, அந்தப் பாடச் சேர்மானங்கள் மூலம் கிடைக்கக்கூடிய எதிர்கால வாழ்க்கைத் தொழிலுக்கான வாய்ப்புக்கள் எவை என்பது குறித்தோ, பல்கலைக்கழக நுழைவுக்குத் தேவையான இசட் புள்ளிகளை பெறுவதற்கு இந்தப் பாடச் சேர்மானங்கள் எவ்வாறு துணை புரியும் என்பதுபற்றியோ மாணவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.அதுமட்டுமல்லாது பல்கலைக்கழக பட்டக்கல்வி மட்டத்திலும் தொழில்மையமான பாடத் தெரிவுகளுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவதில்லை.தாம் பட்டக்கல்வியைத் தொடரும் பாடங்களுக்கு தொழிற்சந்தையில் இருக்கும் கேள்வி என்ன? தமது பாடங்களில் தொழில்மையமான இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் எவை என்பதுபற்றியெல்லாம் தெரியாமலே மாணவர்கள் பட்டக்கல்வியையும் பூர்த்திசெய்கிறார்கள்.இதனாலேயே, பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னரும் தொழில்வாய்ப்பு பெற முடியாதவர்களாக இந்த மாணவர்கள் காணப்படுகின்றனர்.பட்டக்கல்வியை நிறைவுசெய்தவர்களின் நிலையே இதுவாயின், க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறைப் பாடங்களைக் கற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களின் நிலை இதைவிட மோசமானது.இந்தளவுக்கும், இலங்கையில் அதிகளவு மாணவர்கள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது கலைத்துறையிலேயே கல்வி கற்று வருகிறார்கள்.குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இது இன்னமும் அதிகமாகும். தொழில்வாய்ப்புக்களும், தொழில் கல்விக்கான வாய்ப்புக்களும் மிகக் குறைவாகவுள்ள இந்தப் பகுதிகளிலுள்ள இவ்வாறு கலைத்துறையைத் தெரிவுசெய்து கற்கும் மாணவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைமைக்கே ஒவ்வொரு வருடமும் தள்ளப்பட்டு வருகின்றனர். அதேநேரம் வடக்கு மாகாணத்தில் 15 வருடங்களுக்கு மேலாக கல்வி-தொழில் வழிகாட்டி சேவையை வழங்கி, கருத்தரங்குகள் மூலமாகவும், சிகரம் இளையோர் மாதாந்த சஞ்சிகை, பிரசுரங்கள், இலங்கையிலேயே முன்முதலாக தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட கல்வி-தொழில் வழிகாட்டி கையேடு என்பவற்றின் மூலமாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொழில்மையமான கல்விக்கான வழிகாட்டலை வழங்கி, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நேரடித் தொழிற்பயிற்சிகளின் மூலம் உள்நாட்டு – வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்து, ஒரு தனியார் தொழில் முயற்சியாக இந்தச் சேவையை வழங்கியைமையைக் கௌரவித்து இலங்கை வர்த்தக கைத்தொழில் மன்றங்களின் சம்மேளத்தினால் தொழில்முனைவோருக்கான விருதையும் பெற்ற அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனம், கலைத்துறை மாணவர்களின் இந்த வேலையில்லாப் பிரச்சினைக்கான புத்திபூர்வமான செயன்முறைத் தீர்வு ஒன்றை முன்வைக்கிறது. உயர்தரக் கலைத்துறைப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, தொடர்பாடல் ஊடகக் கற்கைகள் துறை, விருந்தோம்பல் மற்றும் வடிமைப்புத் துறை, அழகியல், கலை-இலக்கிய கற்கைகள் துறை, வர்த்தகம் சந்தைப்படுத்தல் கற்கைகள்துறை, சட்ட கற்கைகள் துறை, பொதுச்சேவை – அபிவிருத்தி கற்கைகள் துறை என்று 6 தொழில்மையமான கற்கைகள் துறைகளாக கலைத்துறை பாடங்களை வகைப்படுத்தி, இவற்றில் மாணவர்களுக்கு அதிகம் பொருத்தமான துறையை அவர்களது இயல்பான ஆற்றல், ஆர்வம், இயல்தகைமை என்பவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்வதற்குத் தேவையான வாழ்க்கைத்தொழில் உளவியல் மதிப்பீட்டையும் செய்து, அவரவருக்குப் பொருத்தமான துறைகளில் மாணவர்கள் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் தொடர்பாடலுக்கான ஆங்கில பாடநெறியை கட்டாய பாடமாக வழங்குவதுடன், அவர்கள் தெரிவுசெய்யும் துறைகளுக்குத் தேவையான தொழில்சார் திறன்விருத்திப் பயிற்சிகளையும் மேலதிகமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதுமே தொழில் ஒன்றில் இணைந்துகொள்வதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்வதுடன், பல்கலைக்கழக அனுமதி கிடைத்தால் பகுதிநேரமாக தொழில்செய்துகொண்டு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவும், கிடைக்காவிட்டால் முழுநேரமாகத் தொழில்செய்துகொண்டு பகுதிநேரமாக வெளிவாரிப் பட்டக்கல்வியைத் தொடர்வதற்கும் மாணவர்களால் இயலுமாக இருக்கும். அத்துடன் ஏப்ரல் மாத பிற்பகுதியில் இந்தக் கற்கைநெறிகளையும் நாம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவிருப்பதால், ஏற்கனவே க.பொ.த. உயர்தரத்துக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி அல்லது தொழில்வாய்ப்புக்களைப் பெற முடியாதவர்களும், சாதாரணதரத்துக்கு மேல் கல்வியைத் தொடர முடியாதவர்களும் உரிய தயார்ப்படுத்தல் கற்கைநெறிகளைக் கற்றுத்தேறி, இந்தத் தொழில்வாண்மையான கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்து தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இவ்வாறு, பல்கலைக்கழக அல்லது பட்டக்கல்வி நுழைவுக்கு முன்னரோ, அன்றி, அவற்றை நிறைவுசெய்தவுடனேயோ மாணவர்கள் தொழில்திறன்களை விருத்திசெய்து, வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக தயார்ப்படுத்தப்படுவதால், பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னர் வேலையற்ற பட்டதாரிகள் என்று தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டு வீதிகளில் நின்று போராடவேண்டிய இழிநிலையும் அவர்களுக்கு ஏற்படாது. அதுமட்டுமல்லாது வழி மாறி செல்லும் நிலையும் தடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
  • 655
Added a post  
1) ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மஹாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.2) கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.3) வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பின் போய்விடும்.இதையே தர்ம சாஸ்திரம்... "சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ... ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது.சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.4) நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.5) வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.6) செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.7) அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம் அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16 வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.8) சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.9) ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.10) பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.11) பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.
  • 751
Added a post  
இலங்கையில் “லத்தி” என்று அழைக்கப்படும் யானையின் சாணம் பற்றி என்ன அறிந்திருக்கிறீர்கள்? இதோ சற்றே விந்தையான தகவல்கள்.......ஆப்பிரிக்க யானைகள் கிரகத்தின் மிகப்பெரிய நிலப்பரப்பு விலங்குகள். இவை நிறையச் சாப்பிடுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒரு யானை 450 கிலோகிராம் தாவரங்கள் வரை உண்ணலாம். இருப்பினும், 40% மட்டுமே முழுமையாக ஜீரணிக்கப்படுகிறது, இதன் விளைவாக கணிசமான அளவு, (சுமாராக 50 கிலோ அளவு) நார்ச்சத்து(ஃபைபர்) -நிரப்பப்பட்ட droppings கழிவாகப் போடப்படுகின்றன.யானையின் சாணி ஒரு சிறந்த கொசு விரட்டியாக செயற்படுகிறது. வறட்டி ஆக்கப்பட்ட யானைச் சாணியை, அது நன்கு காய்ந்ததும் ,ஒரு சிறு துண்டை எடுத்து, அதை நெருப்பால் பற்ற வைத்து சிறிது நேரம் விட்டு வைத்தால் போதும். நுளம்புகள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போய் விடும். மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இதைப் பற்ற வைத்து எரியும் போது இதில் இருந்து எந்த ஒரு நாற்றமும் வராது. இதனால் இவை மற்ற செயற்கை நுளம்பு விரட்டிகள் போல நமது நாசிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.யானையின் சாணியில் செய்த வரட்டியில் சிறிது துண்டை எடுத்துக் கொண்டு அதைத் தீயிலிட்டு, அந்தப் புகையை நுகர்வதால் கடுமையான தலைவலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம். தலைவலியைக் குணப்படுத்தவும், பல்வலி மற்றும் பல்வகை நோய்களை கட்டுப்படுத்தவும் யானையின் சாணம் மிகவும் உதவுகிறது
  • 776
Added article  
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்குடி அவரது தந்தை செல்வந்தர், சுதந்திர வீரன் என்ற நாளிதழை அவர் நடத்தினார். சுதந்திர காலத்தில் அந்த நாளிதழ் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் குடும்பத்தை இலங்கை கொழும்புக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் தந்தை மற்றொரு செய்தித்தாளில் பணிபுரிந்தார். பள்ளிப்படிப்பை இலங்கையில் படித்த சந்திரபாபு 1943ல் சென்னை தனது குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணி வந்தார்.1947ல் தன அமராவதி என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார்.சாப்ளின் ஸ்டைலில் உடல் மேனரிசங்கள் செய்ததும், மேற்கத்திய நடனங்களை லாவகமாக ஆடியதும், சென்னை பாஷையில் மிகுந்த நிபுணத்துவம் இருந்ததும் சந்திரபாபுவின் ப்ளஸ்.இவர் எல்லோரிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். இவரின் பாணி கொஞ்சம் திமிர் பிடித்தவரோ என சொல்லவைக்கும். இவரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாகவும் அதே நேரம் அவரிடம் இருந்த நற்குணங்களையும் இயக்குனர் தயாரிப்பாளர் காரைக்குடி நாராயணன் ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.எம்.ஜி.ஆரில் இருந்து சிவாஜி வரை தன்னை விட இளையோர் மூத்தோர் அனைவரையும் மிஸ்டர் சேர்த்து பெயர் சொல்லி அழைப்பதுதான் இவரது பாணி.திருமணம் முடிந்த அன்றே மனைவியின் காதல் அறிந்து அவருடனே சேர்த்து வைத்த நல்ல மனதுக்காரர் என்றாலும், இவரின் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாத வெளிப்படையான செய்முறைகள் நடவடிக்கைகள், ஆங்கிலத்திலேயே பேசி திரிவது, அடுத்தவர்களிடம் மரியாதை இல்லாதது போல் நடந்துகொண்டது போல் தெரிந்தது. இதுவும் இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இப்படி எண்ணற்ற காரணம் உண்டு.எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரிக்க இருந்தார் , அந்த படத்தில் நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் விலகினார், இதற்கு சந்திரபாபுவின் நடவடிக்கைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணியிடம் தவறாக நடந்துகொண்ட காரணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இந்த படத்துக்கு வாங்கிய கடன்கள் கொஞ்சம் இவரை பதம் பார்த்தது. அதற்கு பின்பு எம்.ஜி.ஆர் தனது அடிமைப்பெண் படத்தில் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தை வழங்கி இருக்கிறார் அதில் கொஞ்சம் தேறி வந்த சந்திரபாபு, தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை தயாரித்து தோல்வியடைந்தார் இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டது.மேலும் சந்திரபாபுவின் தனிப்பட்ட செயல்பாடுகளும் அவரை அதல பாதாளத்தில் தள்ளி பொருளாதாரம் எதுவும் இல்லாமல் ஆக்கியது. இயக்குனர் ஏபி நாகராஜனின் கட்டுப்பாட்டில் சின்ன சின்ன உதவிகளுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார் . 1974ல் தனது 46வயதில் இவர் மரணமடைந்தார்.இவர் இறந்தபோது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தான் இவரின் இறுதி சடங்குக்கு உதவி செய்துள்ளார். சென்னையில் உள்ள குய்பில் தீவில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
  • 796
Added a post  
மேஷம்சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம் கைகூடும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாமதம் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு ரிஷபம்சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மிதுனம்எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வாழ்க்கையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப திருப்பங்கள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு வித்தியாசமான முறையில் தீர்வு காண்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சிம்மம்மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னிபொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம்விளையாட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத்துறைகளில் ரசனை திறன் மாற்றமடையும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சாதுரியமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கிக் கொள்வீர்கள். சாஸ்திரம் தொடர்பான குழப்பங்கள் நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்  விருச்சிகம்உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறையும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடுவதற்கான சூழல்கள் அமையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் தனுசுபுதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான உத்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை மகரம்குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறியும் மனப்பக்குவம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் கும்பம்விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கவலை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் மீனம்எந்த ஒரு செயலிலும் ஆர்வமின்மையுடன் செயல்படுவீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • 801
Added a post  
குரோதி வருடம் பங்குனி மாதம் 13 ஆம் தேதி வியாழக்கிழமை 27.3.2025.சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 09.23 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று அதிகாலை 12.02 வரை அவிட்டம். பின்னர் இரவு 11.01 வரை சதயம். பிறகு பூரட்டாதி.புனர்பூசம், பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 801
  • 804
  • 832
  • 1071
Added article  
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆகிய சூப்பர் ஹிட் படங்களும் அடக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் பெரிய ஹிட்கள் எதுவும் கொடுக்கவில்லை.தெலுங்கு சினிமா ஹீரோக்கள் எல்லாம் பேன் இந்தியா ஹீரோக்களாக மாறி வருகின்றனர். இன்னும் மகேஷ் பாபு அந்த கட்டத்தை எட்டவில்லை. ஆனால் தற்போது அவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வரும் படம் இந்தியாவின் பிரம்மாண்டமானப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.மகேஷ் பாபு நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அதடு’ என்ற படம் தொலைக்காட்சியில் ஒரு புதிய சாதனைப் படைத்துள்ளது. இதுவரை அந்த படம் 1500 முறைக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. எந்தவொரு இந்திய படமும் படைக்காத சாதனை இது என சொல்லப்படுகிறது.
  • 1083
Added a news  
கனடாவில் ஒரு பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்பைன் பகுதியில் குறித்த வீரர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் குழுவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ​​விமானி ஒரு பனிச்சரிவைக் கவனித்து சைரனை ஒலித்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த வீரர்களை மீட்பதற்கான துரித நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.பலியானவர்கள் விஸ்லர் BC-யைச் சேர்ந்த 44 வயது நபர், இடாஹோ USA-வைச் சேர்ந்த 45 வயது நபர் மற்றும் காஸ்லோ BC-யைச் சேர்ந்த 53 வயது வழிகாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
  • 1089