- · 1 friends
-
யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்
இங்கிலாந்தில் சில வீடுகளில் அப்பிள் பழங்களின் அறுவடையின் பின்னர் வீட்டுக்கு வேண்டுமான பழங்களை எடுத்து கொண்டு மீதமானவற்றை வெளியே வைத்துவிடுவார்கள். வழியி்ல் செல்லும் வழிபோக்கர்கள் இலவசமாக எடுத்து செல்ல வைத்து விடுவார்கள்.
இயற்கையாக விளைந்த இந்த பழத்துக்கும், மருந்துகள் பூச்சி நாசினிகள் பாவித்து விளைவிக்கபட்டு குளிரூட்டிகளில் பதனிடப்பட்ட கடை அப்பிள்களுக்கும் சுவையில் பெரும் வித்தியாசம் உள்ளது என அப்பிள் பழங்களை சுவைத்த ஒரு வழிபோக்கர் குறிப்பிட்டுள்ளார்.
கல்லீரல் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் இரவு தூக்கம் தான் .
கண்டிப்பாக இரவு தூங்கக் கூடிய உயிரினமாக மனித இனம் படைக்கப்பட்டிருப்பதால் இரவு 10 மணிக்கு முன்பாக உறங்கச் செல்ல வேண்டும்.
10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஆழ்ந்து உறங்க வேண்டும்.
எவர் தன் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணம் மீது மோகம் கொள்ளாமல் தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் இரவு உறங்க செல்கிறார்களோ அவர்களின் கல்லீரல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும்.
ஒரு செல்போனை எப்படி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்திவிட்டு அதற்கு சார்ஜ் செய்கிறோமோ அதே போல இந்த மனித உடலின் கல்லீரலை சார்ஜ் செய்யக்கூடிய நேரம் என்பது இரவு 10 மணி முதல் 4 மணி வரை ஆகும்.
அடுத்ததாக இரவு ரசாயனம் அதிகம் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் மாமிச உணவுகளை உட்கொள்ளாமல் இரவு உணவான எளிமையான உணவுகளை உட்கொண்டால் கல்லீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.
மருந்து மாத்திரைகள் தான் கல்லீரலை அதிகமாக சேதப்படுத்தக்கூடிய ஒன்று ஆகையால் ரசாயன மருந்து மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் கல்லீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.
உடலின் ஆரோக்கியத்திற்கு கல்லீரல் எந்த அளவு உதவி செய்கிறது அந்த கல்லீரலுக்கு இரவு தூக்கத்தின் மூலம் நாம் உதவி செய்ய வேண்டும் அப்படி உதவி செய்யும்பொழுது நீண்ட ஆரோக்கியத்தோடு வாழலாம்.
ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.
போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.
தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.
தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.
வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.
"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் . ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.
நண்பர்களே.. நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்...
ஒரு நாள் நள்ளிரவு எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டு டெலிபோன் மணி அடிக்கிறது. எதிரே பேசிய குரல் "அண்ணா... கண்ணதாசன் நம்மளையெல்லாம் தவிக்க விட்டுட்டு போயிட்டாருண்ணா" என்கிறது. "அய்யோ என் தெய்வமே..." என்று கதறியபடி தலையிலும், முகத்திலும் அடித்தபடியே காரில் கண்ணதாசன் வீட்டுக்கு செல்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். அழுது வடிந்த கண்ணீருடன் அவிழ்ந்த வேட்டியை பிடித்துக் கொண்டு அவர் வந்த காட்சியை வீட்டு ஹாலின் ஷோபாவில் அமர்ந்தபடி ரசித்துக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.
ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்து அழுது மாறி மாறி முத்தமிட்டு "எவனோ ஒருத்தன் நீ..." என்றபடி மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தார். "விஸ்வநாதா பதறாத. நான் தான் அப்படி போன் பண்ணச் சொன்னேன். நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேன்னு பார்க்கணும்போல இருந்திச்சு. அதான் அப்படிச் செய்ததேன்" என்றாராம்.
கோபத்துடன் எழுந்து செல்ல இருந்த விஸ்வநாதனை பிடித்து இழுத்து உட்கார வைத்த கண்ணதாசன். "விச்சு கோவிச்சுக்காத நான் செத்தா நீ தான் என் இறுதி சடங்கை நடத்தணும்" என்றாராம். குழந்தை மனசு கொண்ட விஸ்வநாதன் மீண்டும் அழத் தொடங்கிவிட்டார். பின்னாளில் கண்ணதாசன் மறைந்தபோது அவரது இறுதி சடங்கை முன்னின்று நடத்தினார் விஸ்வநாதன்.
"கண்ணதாசன் எனக்கு கிடைத்திருக்காவிட்டால் நான் ஆர்மோனிய பெட்டியை தூக்கிக் கொண்டு கேரளாவுக்கு பாட்டு வாத்தியாராக போயிருப்பேன்" என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
"அடுத்த பிறவியில் நானும், விஸ்வநாதனும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்" என்பார் கண்ணதாசன். இருவருக்கும் அப்படி ஒரு நட்பு இருந்தது.
ஒரு சிறிய நிகழ்வு...
நான் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்" எகிப்திய இசையை கேட்டேன். "தென்றல் வந்து வீசாதோ" பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாசனையை கண்டேன். "அபூர்வ ராகத்தில்" நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ"வில் மெக்ஸிகன் இசையை கேட்டேன். உலகத்தில் உள்ள அனைத்து இசையும் அறிந்தவர் எம்எஸ் விஸ்வநாதன் என்று கண்ணதாசன் பெருமையாக கூறியிருந்தார்.
எம்எஸ் விஸ்வநாதன் பயன்படுத்தாத இசைக் கருவி இல்லை, இசையை தவமாக நினைத்து பணியாற்றியவர். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, வட்டார வழக்கு என அத்தனை பரிமாணங்களிலும் முத்திரையை தனித்தன்மையுடன் பதித்து வெற்றி கண்டவர்.
கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் வரும். எல்லாம் பாடலுக்கானதாக இருக்கும். பல மாதங்கள் வரை இருவரும் பேசாமல் இருந்திருக்கிறார்கள். இருவரையும் இறுதியில் சேர்த்து வைத்துவிடுவார் எம்.ஜி.ஆர்.
"தெய்வத்தாய்" திரைப்படத்தில் வரும் "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்" என்ற பாடலில் ஆப்பிரிக்கன் இசைக் கருவியான 'பாங்கோஸ்" எனும் இசைக்கருவியைக் கொண்டே பாடலை ஆரம்பித்திருக்கும் அழகே அலாதி. அதே போல் "புதிய பறவை" திரைப்படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ", "பணத்தோட்டம்" திரைப்படத்தில் வரும் "பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா" என்று பல பாடல்களை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம்.
இருவருமே தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலம் இசை ஆட்சி செய்தவர்கள். இருவருமே தங்கள் காலத்தில் பணத்தை பெரிய விஷயமாக கருதவில்லை. பாடல், சுயமரியாதை, புகழ் இதுவே போதும் என்றிருந்தார்கள். இருவரின் உழைப்புக்குரிய அங்கீகாரத்தை திரையுலகமும் சரி, வெளியுலகமும் சரி தரவே இல்லை. இன்று காமெடியன்கள் வாங்கும் தேசிய விருதுகூட எம்.எஸ்.விக்கு கிடைக்கவில்லை.
புகைப்படத்தை நல்லா உற்றுப்பாருங்கள்...பின்னர் முடிக்கு வாங்க....
இந்த புகைப்படத்தில், அந்தப் பெண் தனது பிளவு முழுவதையும் காட்டும் ஒரு ஆடையைத் தேர்ந்தெடுத்தது போல் முதலில் தோன்றலாம், ஆனால் இரண்டாவது பார்வையில் அது உண்மையில் ஒரு மாயை என்பதை வெளிப்படுத்துகிறது, புகைப்படம் எடுக்கப்பட்டபோது முன்னால் இருக்கும் பெண் சரியான (அல்லது தவறான) இடத்தில் இருப்பதுதான் காரணம்.
ஒருவர் செய்த சமூக சேவைக்காக, அவர் இறந்த பிறகு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் வேறில்லை. இருக்கும்போது கொடுத்திருந்தால் அவர் ஏற்றிருக்கமாட்டார் என்பதுதான்.பெருமிதத்துக்குரிய இந்த அறிமுகத்துக்குச் சொந்தக்காரர், சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்பிரமணியம். கடந்த டிச.,11 அன்று அவர் மறைந்த பின்புதான், அவர் செய்த சமூகசேவை, ஊர், உலகமெல்லாம் பேசப்பட்டது.
பொறியியல் தொழில்நுட்பத்தில் கோவைவாசிகள், விற்பன்னர்கள் என்றால் சுப்பிரமணியம் வித்தகர். பி.எஸ்.ஜி.,தொழில் நுட்பக் கல்லுாரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே, சிறிய அளவில் லேத் அமைத்து, படிப்படியாக முன்னேறி, சாந்தி கியர்ஸ் என்ற கியர் நிறுவனத்தை உருவாக்கி, உலகின் முதல் தரமான கியர் நிறுவனமாக உச்சம் தொட வைத்தவர். கோவையின் 'கியர்மேன்' என்று தொழிலாளர்களால் கொண்டாடப்பட்டவர்.
பல கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த நிலையில், தனக்குக் கிடைத்த செல்வத்தை பகிர்ந்து வாழ நினைத்து சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சுப்ரமணியம்.சாந்தி கியர்ஸ் பங்க்கில் பெட்ரோல், டீசல் போட்டால், வண்டிக்கு எந்தப் பிரச்சினையும் வராது; ஒரு துளி அளவு குறையாது என்பது கோவை மக்களின் நம்பிக்கை மட்டுமில்லை; என்றும் மாறாத உண்மை.பத்து ரூபாய் இருந்தால் காலையில் பசியாறிவிடலாம்.
ஒரு ரூபாய்தான் ஒரு இட்லி.மதியம் வயிற்றையும் மனதையும் நிறைக்கும் சாப்பாடு, வெறும் 18 ரூபாய்தான். ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்தபோது, எல்லோரும் விலையை ஏற்றியபோது, அந்த வரியையும் தன் பங்கில் ஏற்று, சாப்பாட்டின் விலையைக் குறைத்தவர்.வாங்கிச் சாப்பிடும் வசதியே இல்லாதவர்கள் பல நுாறு பேருக்கும் தினமும் இரண்டு வேளை அன்னமிட்ட அண்ணல்.
அதிகாலையில் சாய்பாபா காலனியில் மகனிடம் 20 ரூபாய் வாங்கிக்கொண்டு, அங்கிருந்து பஸ் ஏறி, சாந்தி கியர்ஸ் வந்து, காலையும், மதியமும் இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, இரவில் தங்குவதற்கு மட்டும் வீட்டுக்குப் போகும் ஒரு மூதாட்டி அவர். கடந்த ஆண்டில் சுப்பிரமணியம் இறந்தபோது, அவர் கதறிய கதறல் தான், சுப்பிரமணியம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம்.
மருந்துகளுக்கு 20 சதவீதம் சலுகை, மூன்றில் ஒரு பங்கு கட்டணத்தில் ஸ்கேன், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா என்று வெளியுலகிற்குத் தெரிந்து, அவர் செய்த சேவைகளை விட, பறவைகளுக்கான பழத்தோட்டம், கிராமங்களுக்கு தரமான தார்ச்சாலை என்று யாருமறியாத சேவைகளின் பட்டியல் வெகுநீளம். அதனால் சுப்ரமணியத்துக்கு விருது கொடுத்ததை கொண்டாடுகிறது கோவை.
பத்மஸ்ரீ விருது சுப்பிரமணியம் போன்ற மாமனிதர்களுக்குத் தரப்படுவதன் மூலமாக, பத்மஸ்ரீ விருது மேலும் கௌரவம் பெற்றிருக்கிறது.இப்போதும் கூட இந்த விருதை அவரது குடும்பத்தினர் வாங்கியிருந்தாலும் அதைப் பற்றி பெருமையாக ஒரு வார்த்தை சொல்லவும் தயாராக இல்லை. சாந்தி கியர்ஸ் குடும்பம்...என்றைக்கும் ததும்பாத நிறைகுடம்...
யார், யாரையோ பார்த்து பின்பற்றும் அரசியல்வாதிகள் இவரைப் பார்த்து பின்பற்றலாமே-?!!
உங்களுடையது
நீங்களோ
ஏவுகணை விடுத்தீர்கள்
வடலூர் வள்ளலாரும்
நீங்களும் ஏற்றிய
அக்கினி மட்டும்
அணைவதே இல்லை
எங்களுக்கு வாய்த்த
இஸ்லாமிய காந்தி நீங்கள்
ஜனாதிபதி மாளிகையில்
கைப்பெட்டியோடு நுழைந்து
கைப்பெட்டியோடு வெளிவந்த
கர்ம வீரரே!
மீண்டு வரும்போது
அந்தப் பெட்டிக்குள்
ஒன்றும் இல்லை என்பதில்
உண்மை இல்லை
130 கோடி
இந்திய இதயங்களை
அந்தச் சின்னப் பெட்டிக்குள்
சிறைகொண்டு வந்தீரே
அப்துல் கலாம் அய்யா
அழியாது உமது புகழ்;
அது இந்திய வானத்தில்
எழுதப் பட்டிருக்கிறது
மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவர், டாக்டர் நீங்கள் தான் என்னை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்றார்.
உங்களுக்கு என்ன நோய்? விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டார் டாக்டர்.
இரவில் நான் கட்டிலின் மேல் படுத்தவுடன் கட்டிலின் கீழ் யாரோ இருப்பதைப் போலத் தோன்றுகிறது. கட்டிலை விட்டுக் கீழே இறங்கிப் பார்க்கிறேன். அங்கு யாருமே இல்லை. பயம் போவதற்காக நான் கட்டிலின் கீழேயே படுத்துக் கொள்கிறேன். இப்பொழுது கட்டிலின் மேல் யாரோ படுத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. இப்படியே இரவு முழுவதும் கட்டிலின் மேலும் கீழும் மாறிப் மாறிப் படுத்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது, என்றான்.
உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் என்னை இரண்டாண்டுகள் பார்க்க வேண்டும். என்னை ஒவ்வொரு முறை சந்திப்பதற்கும் ரூ. 100 கட்டணம் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார் டாக்டர்.
நிறைய செலவாகும் போல இருக்கிறதே? என்னால் இவ்வளவு தொகையைப் புரட்ட முடியுமா என்று தெரியவில்லை. எதற்கும் என் மனைவியைக் கேட்டு அடுத்த வாரம் சொல்கிறேன், என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் அவர்.
ஒரு வாரம் கழித்து டாக்டருக்குப் போன் வந்தது. அதில் அவர், டாக்டர் என் மனைவி என் நோயைக் குணப்படுத்தி விட்டாள், என்றார்.
டாக்டரால் இதை நம்ப முடியவில்லை, எப்படி? என்று கேட்டார்.
நான் படுக்கும் கட்டிலின் கால்களை என் மனைவி வெட்டி விட்டாள், என்று பதில் வந்தது.
எம்ஜிஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார்.
அதுபற்றி அவரே எழுதுகிறார்:
பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!
பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு, என் மனைவியின், முகத்தில் மலர்ச்சி.
ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது! சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
புது கார் வாங்க எம்.ஜி.ஆர்., தயங்குவதா...' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான், இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, பழைய காரிடம், பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.
என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ! என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.
பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா! என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.
என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
— 'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரை.
ஒரு நாட்டின் மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அறிவாளிகள் கூட சில சமயம் ஏமாந்து போய்விடுகிறார்களே, எதனால்?- ங்கிறது தான் அந்த சந்தேகம்.
இந்த சந்தேகத்தை தீர்ப்பவர்களுக்கு தன்னோட நாட்டுல பாதியை பரிசளிப்பதா மன்னன் அறிவிச்சான்.
அவனுடைய சந்தேகத்தை தீர்க்க யாரும் முன்வரவில்லை. ரொம்ப நாள் கழிச்சு, ஒரு நாள் வாலிபன் ஒருத்தன், மன்னர்கிட்ட வந்து தனியா பேச விரும்பினான்.
அரசனும் அவனை தனிமையில சந்திச்சாரு..
அப்போ வாலிபன் அரசே... நான் உங்கள் அண்டை நாட்டு மன்னனின் அந்தரங்கச் செயலாளன். இது வரை நீங்கள் அவரை வெல்ல பல முறை முயன்றும், முடியாமல் போயிற்று. நாளை எங்கள் மன்னர் மாறுவேடத்தில் உங்கள் நாட்டு பக்கம் உள்ள காட்டின் மத்தியில் இருக்கும் ஆலயத்திற்கு பூஜை செய்ய வருகிறார். நீங்களும் மாறுவேடமிட்டு, ஒரு நான்கைந்து மெய்க்காவலர்களுடன் வந்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கைது செய்யலாம். நான் இப்படி துரோகியாக மாறியதற்கு காரணமே, எங்கள் மன்னர் என் உடன் பிறந்த சகோதரனை செய்யாத குற்றத்திற்காக அநியாயமாக மரண தண்டனை கொடுத்து விட்டார். இதனால் என் குடும்பம் சிதறிப் போய் விட்டது. அதற்கு பழி வாங்கவே இப்படி செய்கிறேன்னு சொல்ல,
மறு நாள் அரசன் அந்த வாலிபனுடன் மாறுவேடத்தில் சில மெய்க்காப்பாளர்களோட காட்டுக்குள்ள போனான்.
காட்டில் மத்திய பகுதிக்கு போன பிறகு எதிர்பாராம மெய்க்காவலர்களை விட்டு மன்னரும் வாலிபனும் மட்டுமே வழி மாறி வந்துட்டாங்க.
அப்ப திடீர்னு நாலஞ்சு பேர் ஆயுதங்களோட மன்னரை சூழ்ந்துட்டாங்க.
வாலிபனை பார்த்து மன்னன் இது என்ன துரோகம்? னு கத்த..
வாலிபன் சிரிச்சுக்கிட்டே மன்னரே... நான் உங்கள் குடிமகன்.. மாபெரும் மேதைகளும் கூட இப்படித்தான் ஆசையிலும் அவசரத்திலும் எதிர்பாராமல் ஏமாந்து போனார்கள்னு சொல்ல...
மன்னருக்கு தான் அறிவிச்ச போட்டி ஞாபகத்துக்கு வந்தது. வாலிபனுக்கு போட்டியில் அறிவித்த படி பாதி நாட்டை பரிசளிச்சாராம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் நலனில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். பொது காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
திட்டமிட்ட காரியம் நிறைவேறும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தோல்வி மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபங்களை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
அவசரமான முடிவுகளை தவிர்க்கவும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விருச்சிகம்
மனதில் நினைத்த காரியம் கைக்கூடிவரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் கௌரவம் உயரும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
தனுசு
சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். ஆராய்ச்சி பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. நினைத்து ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வரவைவிடச் செலவுகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். உழைப்புக்குண்டான பலன் கால தாமதமாகும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்த பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.10.2025
இன்று மாலை 03.34 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று இரவு 07.37 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
இன்று அதிகாலை 04.00 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
இன்று அதிகாலை 02.44 வரை கரசை. பின்னர் மாலை 03.04 வரை வரை வனிசை. பின்பு பத்தரை.
இன்று மாலை 06.01 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ (Prince Andrew), ‘யோர்க் கோமகன்’ (Duke of York) என்ற பட்டம் உட்பட தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பட்டங்களையும், கௌரவங்களையும் இனி பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) விவகாரத்தில் தன் மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், அவரது அண்ணன் மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும், தனது கடமையை குடும்பத்திற்கும் நாட்டிற்கும் முதன்மைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் குற்றங்களுக்கு ஆளான வெர்ஜீனிய கியூஃப்ரே (Virginia Giuffre) என்பவரின் புதிய நினைவுக் குறிப்பு குறித்த பகுதிகள் சமீபத்தில் வெளியானது. அதில், இளவரசர் ஆண்ட்ரூ மீது அவர் முன்வைத்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மீண்டும் பேசுபொருளாகி இருந்தது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
ஆன்மீக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த மந்தத்தன்மை விலகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிலுவை சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
சிம்மம்
தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். ஜாமின் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. சிறு சிறு சஞ்சலமான பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரம் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிப்புகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருள்களில் விழிப்புணர்வு வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கும்பம்
குழந்தைகள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில விஷயங்கள் குறையும். பழக்க வழக்கங்கள் மூலம் மேன்மை அடைவீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்