·   ·  260 news
  •  ·  0 friends

இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு

இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்​ரெசா சுலை​மானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.

செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

போர் பதற்றச் சூழல் சற்றும் குறையாத சூழலில், ஈரானின் கடற்கரை பகுதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரான் ஏவுகணைக் கப்பல்களை அழித்து ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை 3% உயர்ந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்தே எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

  • 23
  • More
Comments (0)
Login or Join to comment.