·   ·  259 news
  •  ·  0 friends

ஈரான் தளபதி கொல்லப்பட்டதாக தகவல்

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான 'பாசிஜ்' தன்னார்வப் படைத் தளபதி குலாம்ரேசா சுலைமானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி சுலைமானியின் மரணம் ஈரானின் 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு' கட்டமைப்பிற்கு விழுந்த பாரிய பலத்த அடி என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஈரானிய இராணுவத் தளபதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து இராணுவ ரீதியான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

இந்தச் செய்தி குறித்து ஈரான் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கருத்துக்களையும் அல்லது உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை என அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

  • 24
  • More
Comments (0)
Login or Join to comment.