·   ·  1183 posts
  •  ·  0 friends

சில எளிய வீட்டுக்குறிப்புகள்

* சோளமாவும், அரிசி மாவும் சம அளவில் கலந்து பஜ்ஜி சுட்டால் கடலை மாவில் செய்ததை விட சுவையாகஇருக்கும்.

* பித்தளைப் பாத்திரங்களை முட்டை வேகவைத்த நீரில் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சிடும்.

* பகோடா செய்யும்போது வேர்க்கடலையை பொடி செய்து கலந்தால் பகோடா மொறு, மொறுவென இருக்கும்.

* காய்ந்த மிளகாய்களை வறுக்கும் போது கொஞ்சம் உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

* கட்லெட் செய்ய ரொட்டித் துண்டு இல்லை என்றால் அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

* வாழைஇலையை அனலில் காட்டி பின் பார்சலுக்கு பயன்படுத்தினால் உடையாது. கிழியாது.

* தோசைக்கல்லில் மோர் மிளகாய் வறுத்தால் அதிக எண்ணெய் செலவு ஆகாது.

* மணத்தக்காளி இலை மிகச் சிறந்த கிருமி நாசினி. காயம் பட்ட இடத்தில் இதன் சாறை பிழிந்து விட்டால் புண் விரைவில் ஆறும்.

* மழை நாட்களில் சீக்கிரமாக பொரிந்த அப்பளம் நமத்து போய்விடும். எனவே ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்கும்.

* கறியை வேகவிடும்போது ஒரு துண்டு இஞ்சியை போட்டால் கறி நன்றாக வெந்து மிருதுவாக இருக்கும்.

* வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் அதன் வாசனை ஊரையே கூட்டும்.

* தேங்காய்ச்சட்னி அரைக்கும்போது பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை எண்ணெயில் வதக்கி பின் அரைத்தால் சுவையாக இருக்கும்.

  • 22
  • More
Comments (0)
Login or Join to comment.