·   ·  1183 posts
  •  ·  0 friends

முருங்கைக்கீரை சூப்பை தினமும் காலையில் குடித்தால்....

முருங்கை மரம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது. முருங்கை மரத்தின் எல்லா பாகங்களும் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடியது. அதிலும் முருங்கை இலைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது. முருங்கை இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கூடிய முருங்கை இலை சூப் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. முருங்கை இலைகளில் வைட்டமின் பி, வைட்டமின் சி, புரோவிட்டமின் ஏ, வைட்டமின் கே, மாங்கனீசு, புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

தொடர்ந்து நீங்கள் முருங்கை இலைச் சாற்றை குடித்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். முருங்கை இலைச்சாற்றை தினமும் அதிகாலையில் காலை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது அரை மணி நேரத்திற்கு பிறகோ நீங்கள் குடிப்பது உங்களுடைய மலச்சிக்கல் பிரச்சனையை விரைவில் போக்கும். முருங்கை இலைகள் உடலில் இருந்து வெளிவரக்கூடிய கழிவை இளக்கி வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் இது குடலை ஆரோக்கியப்படுத்தி குடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது.

முருங்கை இலைச்சாறு உங்கள் உடலில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. முருங்கை இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் ஏற்படக்கூடிய காயங்கள், வலிகள், வீக்கத்தை போக்க உதவுகிறது. மேலும் உடலில் ஏற்படக்கூடிய புண்களை விரைவில் குணமாக்கும் தன்மையும் கொண்டது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் முருங்கை இலைச்சாற்றை குடித்து வரும் பொழுது இந்த ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது முருங்கை இலை. முருங்கை இலை சாறை மூன்று மாதங்கள் தொடர்ந்து தவறாமல் தினமும் மூன்று வேளை நீங்கள் குடித்து வந்தால் உங்கள் இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிக அளவு சர்க்கரையை கட்டுப்படுத்தும். மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதால் எந்தவித பக்கவிளைவுகளும் உங்களுக்கு இருக்காது.

தொடர்ந்து முருங்கை இலை சாற்றை குடித்து வரும் பொழுது அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் இதய நோய்கள், பக்கவாதம், மார்புவலி, கால்களில் வலி மற்றும் கணுக்காலில் அதிக வலியை ஏற்படுத்துகிறது.

முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. முருங்கை இலைச் சாற்றில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் இது பாக்டீரிசைடு, பாக்டீரியோஸ்டேடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இந்த முருங்கை இலை ஜூஸை தொடர்ந்து நீங்கள் தினமும் குடித்து வரும் பொழுது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. இதனால் நோய்கள் வராமல் இருக்கும். மேலும் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.

முருங்கை இலைச்சாறு வேகமாக முதுமை அடைவதை தடுக்கிறது. முருங்கை இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை அதிகம் உள்ளது. தினமும் முருங்கை இலைச்சாற்றை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய சருமத்தின் செல் சேதத்தை தாமதப்படுத்தும். மேலும் செல் சேதத்தை தடுக்கவும் செய்யும். சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை குறைத்து சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் உங்களுடைய சருமம் பொலிவாகும். இளமையாகவும் இருக்கும்.

முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து கொடுத்து வரும் பொழுது அது இரைப்பை பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. முருங்கை இலையில் வைட்டமின் பி நிறைந்து காணப்படுகிறது. இது இரைப்பை அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் செரிமானத்தை சீராக்கும் குணமும் கொண்டது. முருங்கை இலைச்சாற்றை தினமும் நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய இரைப்பை பிரச்சனைகள் நீங்கும்.

முருங்கை இலைச் சாற்றை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய முடி ஆரோக்கியமாக வளர உதவிசெய்கிறது. முருங்கை இலைச்சாறு உங்களுடைய தலை முடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஏனென்றால் முருங்கை இலைகளில் முடிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த முருங்கை இலைச்சாறு முடிக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுத்து முடியை வலுவூட்டுகிறது. மேலும் முடி உதிர்தல் மற்றும் முடி சேதத்தை தடுக்கிறது.

முருங்கை இலைச்சாற்றை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது மன அழுத்தத்தை குறைத்து சோர்வை போக்குகிறது. இந்த ஜூஸை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கிறது. இது உங்கள் உடலில் கார்டிசோல் அளவை சமநிலைப்படுத்தும். அதன் மூலமாக மன அழுத்தத்திற்கு தேவையான சக்தியை உடலில் மேம்படுத்துகிறது.

முருங்கை இலைச் சாற்றை தயாரித்துக் குடிப்பது மிகவும் எளிது. சிறிதளவு தண்ணீரை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்தவுடன் அதில் முருங்கை இலைகளை போட்டு 15 நிமிடங்கள் நன்றாக வேக வைத்து, ஆற வைத்து வெதுவெதுப்பான சூட்டில் இதை குடிக்க வேண்டும். தினமும் இதை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்து வரும் பொழுது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உங்களுடைய உடலுக்கு கிடைக்கும்.

  • 26
  • More
Comments (0)
Login or Join to comment.