யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சளி வந்தால், அவ்வப்போது மூக்கை சிந்தி வெளியேற்ற வேண்டும். வேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். தினமும் வெந்நீர் மட்டுமே பருகி வர வேண்டும்.
மிளகு ரசம், சுக்கு, மல்லி காப்பி இவற்றை தொண்டைக்கு இதமாக பருக வேண்டும்.
அதிக காரம் இல்லாத, எண்ணெய், நெய் அதிகம் சேர்க்காத உணவுகள், ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டு வர, சளி குறைய தொடங்கும்.
தகுந்த முறையில் பயிற்சி பெற்று, சுவாசப் பயிற்சிகளை செய்து வரும் போது, நாளடைவில் சளி தொந்தரவு, சைனஸ் போன்றவைகளை கட்டு படுத்தலாம்.
கனடாவின் சர்ரே பகுதியில் வாகமொன்றிலிருந்து கருகிய நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டிரெய்லர் தீப்பிடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
102 அவென்யூ – 12200 பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த பயண டிரெய்லரில் தீப்பிடித்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சர்ரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்போது தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பொழுதுபோக்கு வாகனத்தின் (recreational vehicle) உள்ளே இரண்டு நபர்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர் என சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக காவல்துறையும் தீயணைப்புப் பிரிவும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
தீ பரவல் காரணமாக அருகிலுள்ள ஒரு வீடு முன்னெச்சரிக்கையாக காலி செய்யப்பட்டது. பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வசித்தவர்கள் பாதுகாப்பாக மீண்டும் திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக தகவல் உள்ளவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Zolo என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம், சமீபத்தில், ‘2025ஆம் ஆண்டில் கனடாவில் வாழ தலைசிறந்த இடங்கள்’ பட்டியலை வெளியிட்டது.
2025ஆம் ஆண்டில் கனடாவில் வாழ தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம், ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள குவெல்ஃப் (Guelph) ஆகும். இந்த பட்டியல், நகரிலுள்ள வீடுகள் விலை, சராசரி வருவாய், குற்றச்செயல் வீதம், ஆண்டுக்கு எத்தனை நாட்கள் சூரிய ஒளி இருக்கும், பாதசாரிகள் நடந்து செல்ல வசதி மற்றும் விலைவாசி ஆகிய காரணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குவெல்ஃப் நகரம், ஒண்டாரியோவிலிருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், நல்ல காபி ஷாப்கள், உள்ளூர் கடைகள், இருபுறமும் மரங்கள் நடப்பட்ட நடைபாதைகள் ஆகியவை குவெல்ஃப் நகரின் சிறப்பம்சங்கள் ஆகும்.
ஒண்டாரியோவிலுள்ள மிக பாதுகாப்பான நகரங்களில் ஒன்று குவெல்ஃப் என்பதால், குடியமர ஏற்ற நகரமாக அந்நகரம் கருதப்படுகிறது.
குவெல்ஃப் நகரில் வீடுகளின் விலை, 2025 செப்டம்பர் நிலவரப்படி, சுமார் 745,000 டொலர்கள் ஆகும். இந்த நகரிலுள்ள குடும்பங்களின் ஆண்டு சராசரி வருவாய், 119,100 டொலர்கள், இங்கு விலைவாசியும் குறைவுதான்.
நீங்கள் தற்போது வாழும் இடத்திலிருந்து ஒரு புதிய இடத்துக்கு குடிபெயர விரும்புவீர்களானால், குவெல்ஃப் நகரம், குடியமர்வதற்கு ஏற்ற, நாட்டின் தலைசிறந்த நகரங்களில் ஒன்று ஆகும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தன வரவுகள் திருப்தியை தரும். புதியவர்களின் நட்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மிதுனம்
பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்ற செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். சுப செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். இடம் பூமியால் நினைத்த லாபங்கள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் உண்டாகும். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். பெற்றோர் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
துலாம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்கள் வழியில் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு முயற்சிகளில் பொறுமை வேண்டும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். நவீன பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சிந்தனை போக்கில் தெளிவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். வியாபர பணிகளில் இருந்த நெருக்கடியான சூழல் மறையும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகரம்
நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் நிலவும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
கும்பம்
அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். சில பணிகள் தடைபட்டு முடியும். பிள்ளைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். உத்தியோகத்தில் விவாதம் இன்றி செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.புத்தி சாதூர்யத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.12.2025
இன்று காலை 11.30 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று அதிகாலை 05.31 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று மாலை 03.58 வரை வியாகாதம். பிறகு ஹர்ஷணம்.
இன்று காலை 11.30 வரை கரசை. பின்னர் இரவு 11.36 வரை வணிசை . பிறகு பத்தரை.
இன்று அதிகாலை 05.31 வரை மரண யோகம். பின்னர் காலை 06.23 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.46 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
வங்கதேசத்தில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர், கடந்த 12-ம் தேதி சைக்கிள் ரிக்ஷாவில் செல்லும்போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தலையில் சுட்டுவிட்டு தப்பினர். டாக்கா மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் பெரும் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில், மொட்டலேப் ஷிக்தர் (32) என்ற மற்றொரு மாணவர் தலைவர் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தேசிய குடிமக்கள் கட்சி (NCP)-ன் தொழிலாளர் முன்னணியின் மத்திய ஒருங்கிணைப்பாளரான இவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குல்னா நகரின் மஜித் சரணி பகுதியில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த மொட்டலேப் ஷிக்தர், ஆபத்தான நிலையில் குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஷிக்தரின் தலையின் இடது பக்கத்தில் சுடப்பட்டதாகவும், இதனால் அதிக ரத்தப் போக்கு இருந்ததாகவும், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கதேச செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளைக் கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படம். இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது.
சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படம் பற்றிய பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது.
உணர்வு பூர்வமான அரசியல் த்ரில்லராக இது உருவாகி வருகிறது. தற்போது போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார். ரவி மோகனின் 34-வது படமான இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் டப்பிங் இப்போது தொடங்கி இருக்கிறது.
இசைத்துறையில் ஏ.ஐ டெக்னாலஜி அதிக ஆதிக்கம் செலுத்துவதாக இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் சொன்னார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நான் இசை அமைத்துள்ள ‘ரெட்ட தல’, மோகன்லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்கள், டிச. 25 ம் தேதி வெளிவருகின்றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்சம் அதிகமாக உழைத்திருக்கிறோம்.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்திருக்கிறேன். இதில் சித்தி இட்னானி நடித்துள்ள பெண் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்தப் படம் நம் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடுவதற்கு முன் அவர் குரலில் ட்ராக் போல ஏ.ஐ.-யில் எடுத்தோம்.
தைக் கேட்டு தனுஷே ஆச்சரியப்பட்டார். டெக்னாலஜி எப்போதும் தவறில்லை. நாம் எப்படி பயன்படுத்து கிறோம் என்பது தான் முக்கியம். இசைத்துறையில் ஏ.ஐ.டெக்னாலஜி அதிக ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. ‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் படத்துக்கு இசை அமைத்த பிறகு நிறைய பக்தி படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பக்தி பாடல் வாய்ப்புகளும் வருகின்றன. ஐயப்பன் பாடல் ஒன்றை எழுதி இசை அமைத்துள்ளேன். அது விரைவில் வெளியாகும். ‘நாகினி’ தொலைக்காட்சித் தொடருக்கு டைட்டில் பாடல் அமைத்துள்ளேன்.
சர்தார் 2, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், புஷ்கர் காயத்ரி இயக்கும் படம், கன்னடத்தில் ஒரு படம், மாதவன், கங்கனா நடிக்கும் பான் இந்தியா படம் என சுமார் 10 படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். பிசியாக இருப்பதை ரசிக்கத் தொடங்கி இருக்கிறேன் என்று சாம் சி.எஸ் கூறினார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் கனடாவில் 20, 50 மற்றும் 100 டொலர் மதிப்புள்ள போலி கனடிய நாணயத் தாள்கள் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதாக கனடிய சில்லறை விற்பனை பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒரே ஒரு மாதத்தில் கண்டறியப்பட்ட போலி நாணயத் தாள்களின் எண்ணிக்கை, முந்தைய முழு ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலி நோட்டுகள் தயாரிக்கும் நபர்கள் தங்களின் தொழில்நுட்பங்களை மிகவும் மேம்படுத்தியுள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற கண்களுக்குக் கூட உண்மையான நோட்டுகளையும் போலி நோட்டுகளையும் வேறுபடுத்துவது கடினமாகி விட்டது.
ஹோலோகிராம்கள் கூட மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இந்த போலி நாணயத் தாள் பரவல் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்திருப்பது சாத்தியமானதென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் கடைகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பலர் வாங்குவதால், தவறுகளை கவனிப்பது கடினமாகிறது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை. இதன் காரணமாக வீதியில் சென்றுகொண்டிருந்த தானியங்கி கார்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றுவிட, அவ்வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இருள் சூழ்ந்த வேளையில் வீதி நெடுகிலும் வரிசையில் நின்ற கார்களின் சமிக்ஞை விளக்குகள் மட்டும் ஒளிர்ந்த காட்சி கழுகுப் பார்வையாய் பிடிக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர் முழுதும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அலங்கார வடிவமைப்புகள் களைகட்டி வருகிறது.
வணிக வளாகங்கள், கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சான் பிரான்சிஸ்கோவின் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (20) பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மின் இணைப்புச் சாதனங்கள் தீயில் எரிந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களால் அலைச்சல் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமித்தமாக புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சிம்மம்
தன வரவுகள் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அணுகுலம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகளை நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
புத்திசாலிதனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
துலாம்
முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
விருச்சிகம்
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில ஒப்பந்தம் சாதகமாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை உருவாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான தேடல்கள் அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
தனுசு
பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.
மகரம்
பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மற்றவர்களின் குறைகளை கனிவாக சுட்டிக்கட்டவும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதரவின்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.
கும்பம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரச்சனைகளின் காரணத்தை கண்டறிவீர். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 22.12.2025
இன்று காலை 10.46 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று அதிகாலை 04.07 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று மாலை 04.38 வரை துருவம். பிறகு வியாகாதம்.
இன்று காலை 10.46 வரை கௌலவம். பின்னர் இரவு 11.08 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று அதிகாலை 04.07 வரை சித்த யோகம். பின்னர் காலை 06.24 வரை அமிர்த யோகம். பிறகு மரணம் யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.46 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதா, இல்லையா என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இதனிடையே இப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் கையெழுத்தாகவில்லை. இதனால் வெளியீட்டு தேதியினை முடிவு செய்ய முடியாமல் இருக்கிறது படக்குழு.
ஜனவரி 23-ம் தேதி வெளியீடு என்றால் இப்போதே விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் வெளியீடு ஜனவரியில் இருக்காது என்பது தெளிவாகிறது. மார்ச் 19-ம் தேதி வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்திருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து படமும் தயாராகி விடும்.
‘கருப்பு’ விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால், வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்காமல் இருக்கிறது. ஆனால், ‘கருப்பு’ மார்ச் மாத வெளியீடு என்பதால், அதற்கு முன்னதாகவே வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கிவிடும் என தெரிகிறது. ஏனென்றால் இப்படம் மே மாதத்தில் வெளியிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை, ஓடிடி, தொலைக்காட்சி என அனைத்து உரிமைகளும் விற்பனையாகிவிட்டது.
ஒரு வயசான ஆளு நிலத்திலே உழுது கொண்டிருந்தார்.
கிழிந்து போன ஒரு சின்ன துண்டைதான் இடுப்பில் கட்டியிருந்தார்.
தலையில் ஒரு கந்தலை சுற்றி இருந்தார்.
உடம்பு பூராவும் சேறு.
ஏர் ஓட்டிக்கிட்டு இருக்கிறவர் வேறுஎப்படி இருப்பார்?
இருந்தாலும் அந்த ஆளு ரொம்ப ஜாலியா பாட்டு பாடிக்கிட்டே உழுது கொண்டிருந்தார்.
உடம்பிலேதான் அவர் ஏழையே தவிர மனசுல அவர் ஏழையா தெரியல.
அந்த சமயத்தில் அந்த நாட்டு ராஜா அந்தப்பக்கமாக வேட்டைக்கு போயிட்டு பரிவாரங்களோடு திரும்பி குதிரைமேலே வந்து கொண்டிருந்தார்.
ராஜா இந்த வயசான விவசாயியைப் பார்த்தார்.
அந்த ஆளு ரொம்பவும் ஏழைங்கிறது அவரைப் பார்த்தாலே பளிச்சுன்னு தெரியுது.
கட்டிக்கிறதுக்கு நல்ல துணி இல்லை.
உடம்பு இளைச்சுப் போய் இருக்கு. வயிறு முதுகோடு ஒட்டி போய் இருக்கு.
கண்ணு குழி விழுந்து போய் இருக்கு.
ஆனாலும் முகத்தை பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு.
இவ்வளவு உற்சாகமாக பாடிக்கொண்டிருக்காரேனு ஆச்சரியமாக பார்த்தார் ராஜா.
கொஞ்சம் பேச்சு குடுத்து பாக்கலாம்னு முடிவு பண்ணினார்.
ஐயா பெரியவரே கொஞ்சம் இப்படி வர முடியுமான்னார்.
பொழுது போறதுக்குள்ள இந்த வயல் பூராவும் உழுதாகணும். அதனாலே பேசுவதற்கு நேரமில்லைனார் பெரியவர்.
என்ன அவ்வளவு அவசரமா?
மீதி இருந்தா நாளைக்கு உழுதுக்க கூடாதா?
அது சரி உனக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கு?
விசாரிச்சார் ராஜா.
எனக்கு சொந்தமா உள்ளங்கை அளவு கூட நிலம் இல்லை.
இது எனது எஜமானன் நிலம்.
இதை பூராவும் உழுது முடிச்சாதான் அவர் கூலி கொடுப்பார்.
கூலிக்கு உழுகிறேன் உங்க கிட்ட பேசிகிட்டு இருந்தா அவருக்கு துரோகம் பண்ண மாதிரி ஆகும்னார்.
ராஜா குதிரையை விட்டு இறங்கி வரப்பிலே நடந்து அந்த பெரியவர் கிட்ட பேச ஆரம்பிச்சார்.
ஒரு நாள் பூரா உழுதா உனக்கு எவ்வளவு கூலி கிடைக்கும்.
எட்டணா கிடைக்கும்னார்.
இவ்வளவுதானா இதை வைத்துக்கொண்டு நீ எப்படி காலம் தள்ளுறே.
ஒன்னும் கவலை இல்லைனார்.
ராஜாவுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு.
எட்டணா கூலி வாங்குறவர் கவலை இல்லாமல் இருக்கார்.
ஏராளமான வசதியுடைய என்னால் கவலை இல்லாமல் வாழ முடியவில்லை என்று நினைத்தார்.
அது சரி எட்டணாவில் எப்படி குடும்பம் நடத்துற? என கேட்டார்.
எனக்கு கிடைத்த எட்டணாவில் இரண்டு அணா குடும்பத்துக்கு செலவழிக்கிறேன்.
இரண்டு அணா பழைய கடனுக்கு தருகிறேன்.
இரண்டு அணா தர்மம் செய்கிறேன். இரண்டு் அணா வட்டிக்கு கொடுக்கிறேன்.
ஒரு குறையும் இல்லைனார்.
ஒன்னும் புரியல ராஜாவுக்கு .
ஐயா எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு அணா செலவாகுது.
வயதான அம்மா அப்பா சின்ன வயசிலேயே என்னை காப்பாத்தினாங்க அவங்களுக்கு இரண்டு அணா செலவாகிறது.
அது பழைய கடன்.
என் தங்கச்சி ஒருத்தி ஆதரவில்லாத நிலையில் தன் மகனுடன் வீட்டிலேயே இருக்கு.
அவளுக்கும் அவள் மகனுக்கும் இரண்டு அணா செலவு பண்றேன். அது தர்மம்.
எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்காங்க அவங்களுக்கு இரண்டு அணா.
அது வட்டிக்கு கொடுக்கிறது மாதிரி பிற்காலத்தில் அவங்க என்னைக் காப்பாத்துவாங்க.
அந்த வகையிலே நான் திருப்தியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்னார்.
ராஜாவுக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்தது அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கி அந்த பெரியவருக்கு தானமாக கொடுத்துவிட்டார்.
உழுதவருக்கே நிலம் சொந்தம் ஆயிட்டது.
அரசனுக்கும் ஆறுதல் கிடைச்சதாம்.
இந்தக் கதையோட படிப்பினை என்னன்னா எட்டணா வருமானத்தை வச்சிக்கிட்டு இப்படி காலம் தள்ளுவது அப்படிங்கறது இல்லை.
நாம் எவ்வளவு தான் அதிகமாக சம்பாதித்தாலும் அந்தப் பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் திருப்தியாக கடனில்லாமல் வாழ முடியும் . அதோடு நிம்மதியும் மகிழ்ச்சியும் எம்மிடம் எப்போதும் குடியிருக்கும்.
















