- · 1 friends
-
1 followers
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவர் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் தமிழ் சினிமா அறிமுகமானார். பின் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் சனம் ஷெட்டி நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
2016ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டத்தை பெற்ற சனம் ஷெட்டி, பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியாவார். தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். எங்கள் இருவருக்கும் நிச்சயம் நடந்துவிட்டது. ஆனால், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சி பின் தர்ஷன் பிரபலமாகி விட்டதால், தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த தர்ஷன், நான் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது சனம் ஷெட்டி, தன் முன்னாள் காதலருடன் சேர்ந்து விடிய, விடிய பார்ட்டி நடத்தினார். அந்த விஷயம் எனக்கு தெரிந்ததால், நான் அவரைவிட்டு விரிந்து விட்டேன், ஆனால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாக அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் அப்போது பேசுபொருளானதால், சினிமா மூலம் பிரபலமாகாத சனம் ஷெட்டி இந்த விஷயத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து, பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடிய வீட்டில் 64 நாட்கள் இருந்தார்.
தற்போது, சனம் ஷெட்டிக்கு படவாய்ப்பு எதுவும் இல்லாததால், இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பெண்களுக்கும், மக்களுக்கும் எதிராக நடக்கும் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி நீச்சல் குளத்தில் போட்டோஷூட் எடுத்து இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், மிகவும் கவர்ச்சியாக நடிகை சனம் ஷெட்டி போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது தேவையில்லாத வேலை என்றும், கன்றாவி இருக்கு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
வடக்கு ஒண்டாரியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6 புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய இலக்குகள், ஏற்கனவே திறந்த குழி (open pit) முறையில் சுரங்கம் செய்யக்கூடிய வளங்களின் அருகே அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் பகிரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் லொஜிஸ்டிக்ஸ் (Logistics) மூலம் சுரங்கப்பணி எளிதாகும்.
ஜார்ஜியா லேக் (Georgia Lake) பகுதியில், லித்தியம் தாதுக்கள் பொதுவாகக் காணப்படும் பெக்மடைட் (pegmatite) கற்களில் இந்த வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
P&E Mining Consultants Inc. நிறுவனம், இந்த திட்டத்தின் மினரல் வள மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி, 3.4 மில்லியன் short tons (indicated) 0.85 சதவீதம் Lithium oxide மற்றும் 5.8 மில்லியன் short tons (inferred) 0.91 சதவீதம் Lithium oxide உள்ளது. இங்கு காணப்படும் லித்தியம் தாது spodumene ஆகும்.
ஆய்வக சோதனைகள், இதனை 6 சதவீதம் Lithium oxide concentrate-ஆக மேம்படுத்த முடியும் எனவும், சுமார் 81.5 சதவீதம் மீட்பு விகிதம் (recovery rate) கிடைக்கும் எனவும் காட்டுகின்றன.அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) 2025 அறிக்கையின் படி, உலகளவில் உற்பத்தியாகும் லித்தியத்தில் 87 சதவீதம் மின்கலங்களில் (Battery) பயன்படுத்தப்படுகிறது.
கனடாவில் டென்னிஸ் வீரர் ஓருவரின் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றிய ஐந்து பேருக்கு வீரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் கடந்த கோடை காலத்தில் மயங்கி விழுந்த டென்னிஸ் வீரர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய குழுவொன்றுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 5ஆம் திகதி பிரையன் சீ (Brian Seay) எனும் டென்னிஸ் வீரர் மைதானத்தில் மாரடைப்பு காரணமாக விழுந்த போது, ஐந்து பேர் உடனடியாக ஓடி வந்து உதவினர். அவர்கள் பிரையனை மயக்க நிலையில், மூச்சில்லாமல், இதயத் துடிப்பின்றி இருந்ததை கண்டனர் என்று பிரிட்டிஷ் கொலம்பிய அவசர மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் உடனடியாக 911க்கு அழைத்ததுடன், அவசர முதலுதவி செய்து, டெஃபிப்ரில்லேட்டரை (defibrillator) பயன்படுத்தினர்.
உடன் விரைந்து செயற்பட்டதனால் உயிர்காப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே பிரையனின் இதயத் துடிப்பு மீண்டும் செயற்படத் தொடங்கியது.
இந்த நற்பண்புகள் கொண்டவர்களின் உடனடி செயல் இல்லையெனில் அவர் இன்று உயிருடன் இருக்க முடியாது என பிரையனின் மனைவி ரே சீ (Rae Seay) தெரிவித்துள்ளார். உயிரை மீட்டவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரையன் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ ஒரு தச்சர். அவர் மலைப்பகுதிகளில் வீடுகளைக் கட்டினார். ஜோவின் மனைவி ஸ்டெல்லா நேர்த்தியான ஆடைகளைத் தைக்க ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தினார். துணிகளைத் தைக்க அழகான துணியை மட்டுமே பயன்படுத்தினார்.
அவர்களிடம் அதிக பணம் இல்லாததால், அவர்கள் ஒரு பழைய கொட்டகையில் வசித்து வந்தனர். மழை பெய்யும்போது தண்ணீர் சொட்ட
சில நேரங்களில் மாலையில், அவர்கள் நகர மையத்தில் நடந்து செல்வார்கள். கடை ஜன்னல்களைப் பார்த்து கனவு காண்பார்கள். ஸ்டெல்லாவுக்கு தந்த கைப்பிடி கொண்ட ஒரு ஹேர் பிரஷ் வேண்டும் என்று ஆசை. அழகாக மாற்றுவதற்கு பிரஷ் இல்லாததால், அவள் தினமும் தன் தலைமுடியை மேலே இழுத்தாள். ஜோ தனது தாத்தாவின் கடிகாரத்தை சரிசெய்ய விரும்பினான்.
அவர்களின் திருமண ஆண்டு விழாவிற்கு, ஸ்டெல்லா ஜோவுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கித் தர விரும்பினாள். ஆனால் பின்னர் அவள் கணக்குப் போட்டாள். போதுமான பணத்தை சேமிக்க குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். பின்னர் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவள் தன் முடியை எல்லாம் வெட்டி விற்றுவிட்டாள்.
இதற்கிடையில், ஜோ தனது கடிகாரத்தை ஒருபோதும் சரிசெய்ய முடியாது என்பதை அறிந்திருந்தான். அதனால் அவன் அதை பாலிஷ் செய்து விற்றான். ஹேர் பிரஷ் வாங்கும் அளவுக்கு அவன் சம்பாதித்தான்.
அவர்களின் திருமண ஆண்டு விழாவில், கதவு திடீரெனத் திறந்தது. ஸ்டெல்லாவுக்கு தனது பரிசை வழங்க ஜோ உற்சாகமாக இருந்தார். ஆனால் முதலில், ஸ்டெல்லா கடிகாரத்தை சரிசெய்ய பணத்தை அவருக்குக் கொடுத்தார். அவரது மனைவி முடி இல்லாமல் இருப்பதைக் கண்டதும், அவர் சிரித்தார். "உனக்கு ஹேர் பிரஷ் வாங்குவதற்காக நான் என் கடிகாரத்தை விற்றேன்," என்று ஜோ கூறினார். அவர் அவளுக்கு ஹேர் பிரஷ்ஷை கொடுத்தார், அவள் சிரித்தாள்.
ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியடைய மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றை விட்டுக்கொடுக்க அவர்கள் இருவரும் தயாராக இருந்தனர்.
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.
மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.
ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.
கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.
மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்.
விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.
நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.
யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.
உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.
அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.
பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!
அமெரிக்கச் சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணக்கஷ்டம். அவனுக்கு 50 டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகுநாட்களாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் 'கடவுள், அமெரிக்கா' என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான்.
பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்த கடிதத்தை, ஒரு விளையாட்டாக வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அதிபருக்கு ஒரே ஆச்சர்யம். சரி... இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறுபையனுக்கு ஐம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம் என்று அனுப்பி வைத்தார்.
பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினான். ரொம்ப நன்றி கடவுளே... நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க ... நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஆபீஸ் மூலமா பணம் ஆனாலும்.. அனுப்புனதை நான் கவரைப் பார்த்து தெரிஞ்சுக் கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க... நீங்க அனுப்புன காசுல, பாதியை அவங்க திருடிட்டாங்க...
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.
மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.
இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!
என வேண்டவே.... நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.
அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.
ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
பழம் கொட்டை என்பது கிடையாது.
அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். ஆன்மீகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அதிகார பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வியூகங்களை கையாளுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
பழைய நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இறை வழிபாடுகளால் நன்மைகள் உண்டாகும். உடன் இருப்பவர்களால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் மத்தியில் மரியாதை கூடும். பகைமை உணர்வுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சிம்மம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
துலாம்
சூழ்நிலை அறிந்த கருத்துக்களை வெளிப்படுத்தவும். சிந்தனைகளில் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். வரவுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கடின உழைப்பிற்கான பலன்கள் கைகூடும். சக ஊழியர்கள் இடத்தில் விவாதங்கள் தவிர்க்கவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். மற்றவர்களால் பொறுப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். வியாபார பயணங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். சந்தேக உணர்வுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செயல்களை தலையிடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.11.2025.
இன்று காலை 08.31 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று காலை 06.59 வரை சித்திரை . பின்னர் சுவாதி.
இன்று காலை 09.38 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
இன்று காலை 08.31 வரை வனிசை. பின்னர் இரவு 09.29 வரை பத்தரை. பின்பு சகுனி.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
வெகு பிஸியான பூந்தமல்லி ஆவடி சாலையில், கண்ணாடி கிளாஸில் இருந்த சர்க்கரை இல்லாத கசப்பு காஃபியை உறிஞ்சியபடி ஓடும் வாகனங்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த அவனிடம், ஒரு கிழவி "கண்ணு.. இன்னிக்கு பத்து பாக்கெட்டு தான் வாங்கியாந்தேன். ஒன்னே, ஒன்னு தான் மீந்து இருக்கு. நீ வாங்கிக்க ராஜா."
வயசு எழுபதுக்கு குறையாது. வெள்ளெருக்குத் தலை. வெளுத்துப் போன வெள்ளைப் புடவை. இன்ன நிறமென இனம் காணமுடியாத வண்ணத்தில் தோளில் தையல் விட்டுப் போன ரவிக்கை. கருத்தக் காய்ப்புக் காய்த்த கையில் சாயம் போன சரவணா ஸ்டோர்ஸ் பிளாஸ்டிக் பை. ஆழ்ந்த கவனம் கலைக்கப்பட்டாதால் உண்டான மெலிதான எரிச்சலில், 'ப்ச்ச்'சென முனகிக் கொண்டே குரல் வந்த திசையில் திரும்பினான் அவன்.
"என்னாது ஆயா?"
"இட்லி மாவு கண்ணு.."
"இட்லி மாவு..?"
"பொசு பொசுன்னு மல்லீப்பூ மாதிரி வரும். பாக்கெட்டு பதினஞ்சு ரூவா.. பாஞ்சு இட்லி வரும்."
"ம்ம்ம்.."
"வாங்கிக்கோ நயினா.
கட்சீ பாக்கெட்டு. பதினஞ்சு ரூவா கூட வாணாம்.. பத்து ரூவா குடுத்து எடுத்துக்கோ".
நான்கைந்து முறை வேண்டாமென்று சொன்ன பின்னும், இட்லி மாவு பாக்கெட்டைக் கையில் திணிக்காத குறையாக மல்லு கட்டி கொடுத்தது அந்தக் கிழவி.
மணி மாலை ஆறு தான் ஆகிறது. அதற்குள் ரூமுக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போகிறோம். கொஞ்ச நேரம் இதுகிட்டப் பேச்சுக் கொடுத்து தான் பார்ப்போமே......
"ஆயா உனக்கு பசங்க யாரும் இல்லையா ? ஏன் இந்த வயசுல இப்டீ தனியா கஷ்டப்படறியே?"
"கட்டிக்கினவன் குடிச்சே செத்துப் பூட்டான். விட்டுது சனியன்னு நெனைச்சா, ஒன்னே ஒன்னு தான் பெத்தது அதுவும் அவன் அப்பன் வழியிலே உருப்படமா குடிச்சி குடிச்சே சீரழியுது."
"ம்ம்ம்.. இந்த மாவை விக்கிறதல ஒரு நாளைக்கு உனக்கு எவ்ளோ தேறும்.."
"ஒரு பாக்கிட்டு பதிமூனுக்கு வாங்கறேன். பதினெஞ்சுக்கு விக்கறேன்."
"ம்ம்ம்."
"நாள் பூரா நாயா பேயா இங்க அங்க ஓடுனாலும் இருவது பாக்கெட்டு போனா, அதுவே தலைக்கு மேல வெள்ளம்."
சிக்னலில் க்ராஸிங் நேரத்தில் பிச்சையெடுப்பவர்கள் கூட நாளொன்றுக்கு வெகு எளிதாக இருநூறுக்குக் குறையாமல் பார்த்து விடுகிறார்கள். இந்த கிழவி நாள் முழுவதும் வேகாத வெயிலில் ஏன் இப்படி வெந்து சாகிறது ?
ஒரு நொடி மூடிய விழிகளுக்குப் பின்னால் அவனுடைய ஆசை ஆயாவின் முகம் வந்து போனது. மனசு வலித்தது அவனுக்கு.
"ஆயா.. மாவைக் குடு இப்டீ.."
கிழவியிடம் ஒரு நூறு ரூபாய்த் தாளை நீட்டினான் அவன்.
"கண்ணு சில்ற இல்ல நயினா.."
கிழவியின் முகம் சட்டெனத் தொங்கிப் போனது..
"ஆயா.. நீ தினம் இந்தப் பக்கம் வருவேல்ல?"
(நாளை மறுநாள் அவன் பெங்களூருக்கு ட்ரெயின் ஏறியே ஆக வேண்டும்.)
"ஆமா.."
"நான் ஆறு மணிக்கு தெனம் இங்க தான் வந்து டீ குடிப்பேன். காசு தீர்ற வரைக்கும் தினம் ஒரு பாக்கெட்டு குடுத்துக்கிட்டே போ.."
"இல்ல நயினா.."
"இன்னா இல்ல.?"
"ராவைக்கு என் மூச்சு நின்னு போச்சுன்னா உன் துட்டைத் திருப்பிக் குடுக்க நான் இன்னொரு ஜென்மம் எடுக்கணும். அதெல்லாம் வேணாம்."
பாட்டியின் கண்களில் ஒரு தீர்மானம், ஒரு நம்பிக்கை மின்னியது.
"ஆயா.. என்னாப் பேச்சு பேசற நீ..?"
"ஆமாம் கண்ணு. போன ஜென்மத்துலே நான் என்னாப் பாவம் பண்ணனோ இப்டீ நாயாப் பேயா அலையறேன். இதுக்கு மேல ஜென்மமே வாணாம் கண்ணு.."
அரசாங்கத்தையும், அடுத்தவன் சொத்தையும், ஏன் ஆண்டவன் சிலைகளையே மாற்றுபவர்கள் பிறந்த இதே தேசத்தில் தான், இந்த பாட்டியும் பிறந்திருக்கிறாள்.....
மும்பையில் பிறந்த நடிகை மீரா வாசுதேவன் சமுத்திரக்கனி இயக்கிய உன்னைச் சரணடைந்தேன் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில், வெங்கட் பிரபு மற்றும் எஸ். பி. பி. சரண் ஆகியோருடன் நடித்தார். அப்படத்தில் பாபி என்னும் ஒரு பிடிவாதமாக கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்ற மீராவிற்கு, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதை பெற்றார்.
அதன் பின் அஅறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், குமரி பெண்ணின் உள்ளத்திலேயே உள்ளிட்ட தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் 2005ஆம் ஆண்டு விஷால் அகர்வாலை திருமணம் செய்தார். பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்து இருவரும் பிரிந்தனர். அதன் பின், 2012 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கேனை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார். இந்த திருமண வாழ்க்கையும் சரியில்லாததால், அவரை 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான விபினை மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இருவருக்கும் திருமணமாகி ஓராண்டுக்குள் தற்போது விபினை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் மீரா தற்போது அறிவித்துள்ளார். இந்த தகவல் வெளியானவுடன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீரா வாசுதேவனின் இந்த முடிவு தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது
இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதி ஷங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய நிலையில், அவர் அவுட்டேட்டட் இயக்குநர் என ஓரங்கட்டப்பட்டு விட்டார். இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களின் தோல்வி அவரது அடுத்த கனவுப் படமான வேள்பாரி படத்திற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காத அளவுக்கு அவரை பாடாய்படுத்தி வருகிறது என்கின்றனர்.
அடுத்ததாக ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் ஹீரோவாகவும் சீக்கிரமே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிதி ஷங்கர் ஹீரோயினாக கார்த்தி, சிவகார்த்திகேயன் என கேரியரை தொடங்கினாலும், அதன் பிறகு அவருக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து விட்டன.
அடுத்ததாக ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் ஹீரோவாகவும் சீக்கிரமே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிதி ஷங்கர் ஹீரோயினாக கார்த்தி, சிவகார்த்திகேயன் என கேரியரை தொடங்கினாலும், அதன் பிறகு அவருக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து விட்டன.
கனடாவின் கல்கரியைச் சேர்ந்த யூஜி ஹு (Yuji Hu, வயது 39) என்பவர், தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில், யூஜி குடும்பம் கலிபோர்னியாவிலுள்ள கடற்கரை ஒன்றிற்குச் சென்றுள்ளது. திடீரென, தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த யூஜியின் 5 வயது மகளை அலை இழுத்துச் செல்ல, மகளைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளார் யூஜி. ஆனால், அலை அவரையும் இழுத்துச் சென்றுவிட்டது. கணவனும் மகளும் கண் முன்னே அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட யூஜியின் மனைவி கடலுக்குள் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரால் எதுவும் செய்ய இயலாமல் அவர் கரைக்கே திரும்பிவிட்டிருக்கிறார்.
அந்த நேரத்தில், கடலில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு அலை எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு வந்த lifeguard ஒருவரும், மற்றொரு நபரும் கடலுக்குள் இறங்கி யூஜீயை மீட்டு கரைக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
யூஜியும் அவரது மனைவியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், யூஜி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோருடன் சென்ற 2 வயதுக் குழந்தை கடலில் இறங்கவில்லை. அந்த குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரவு 9.00 மணி வரை தேடியும் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட தம்பதியின் 5 வயது மகள் கிடைக்கவேயில்லை. சுற்றுலா சென்ற இடத்தில் தந்தையும் மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ளது.
வங்காளதேச முன்னாள் பிரதமர் 78 வயதான ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து இன்று(17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது.
வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.
இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி, ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்ததுஇந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று (17) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அவளது கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய வைரம் தெரியும்.
இது 254 கேரட் ஜூப்ளி வைரம் ஆகும் , இது உலகப் புகழ்பெற்ற" கோஹ் - இ - நூர் " வைரத்தின் அளவு மற்றும் எடையிலும் இரட்டிப்பாக்கும்.
இந்தப் பெண் மெஹர்பாய் டாடா , அவர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் சர் டோராப்ஜி டாடாவின் மனைவி.
1924 இல் உலகில் மந்த நிலை ஏற்பட்டு டாடா நிறுவனம் ( டிஸ்கோ ) ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாத போது , மெஹர்பாய் இந்த விலைமதிப்பற்ற ஜூப்ளி வைரத்தை இம்பீரியல் வங்கியில் ரூ 1 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
இதனால் ஊழியர்கள் தொடர்ந்து சம்பளம் பெறுவதற்காகவும், மேலும் நிறுவனம் தொடர்ந்து இயங்குவற்காகவும், அடமானம் வைக்கப்பட்டது. மெஹர்பாய் டாடா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சரியான சிகிச்சையின்றி மரணமடைந்தார். அவரது அகால மரணத்திற்கு பிறகு , சர் டோராப்ஜி டாடா இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க எண்ணி இந்த வைரத்தை விற்று டாடா மெமோரியல் புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கினானார்.
அன்பிற்காகவும், மக்களின் நலன் கருதியும் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.
முரண்பாட்டைப் பாருங்கள்.. தாஜ்மஹாலை காதல் நினைவுச் சின்னமாக பெருமை படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கு நமது மக்களுக்கு உயிர் கொடுக்கும் வரலாறு உருவாகிய அடிப்படை செய்தி கூட தெரியவில்லை..?
- இணையத்தில் வெளியான தகவல்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பேச்சுக்களுக்கு மதிப்புகள் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
கனிவான பேச்சுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். நெருக்கமானவர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் குறையும். வழக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபார பணிகளில் சில மாற்றம் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பிறமொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழல்கள் குறையும். சில நுட்பமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைப் பொருள்களில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பங்குதாரர்கள் இணைப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். விமர்சன கருத்துக்களை தாண்டி முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கன்னி
பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நவீன சாதனங்கள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
செயல்பாடுகளில் ஒருவிதமான சேர்வுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மறைமுகமான சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் விவாதம் இன்றி செயல்படவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் சிலருக்கு ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
தனுசு
சுப காரிய முயற்சிகள் கைகூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் கிடைக்கும். பிரபலமானவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகளும் உயர்வும் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கும்பம்
வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக பணிகளில் தெளிவுகள் பிறக்கும். நிர்வாகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் முதலிடு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். பொருட்களை இரவில் தருவதை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நயமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு











