- · 1 friends
-
கண்மணியே காதல் என்பது
பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்
பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை
பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…
காலமும் வந்ததம்மா…
நேரமும் வந்ததம்மா…
பெண்
: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…
பாடிடும் எண்ணங்களே…
இந்தப் பாவையின் உள்ளத்திலே…
ஆண்
: பூவிதழ் தேன் குலுங்க…
சிந்தும் புன்னகை நான் மயங்க…
பெண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
பெண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
பெண்
: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…
காரணம் நீயறிவாய்…
தேவையை நானறிவேன்…
ஆண்
: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…
வாலிபம் தந்த சுகம்…
இளம் வயதினில் வந்த சுகம்…
பெண்
: தோள்களில் நீயணைக்க…
வண்ணத் தாமரை நான் சிரிக்க…
ஆண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
தோரணமாய் ஆடிடுவேன்…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
ஆண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
கனடாவின் மிகவும் தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பியெரி பிலோஜீனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிலோஜீன் 2021 டிசம்பர் 22 அன்று சார்ல்ஸ்-ஒலிவியர் புஷேர் சவார்ட் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் நிலை கொலைக்கான குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தார் என மொன்றியல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே பகுதியில் செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலோஜீனை பிடித்ததாகவும், குறுகிய துரத்தலுக்குப் பிறகு வான்கூவர் போலீசின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டதாகவும் மெட்ரோ வான்கூவர் போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை நேசிக்கிறார். நான் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை.
நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என்றார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இத்தகைய உறுதியை அளித்தாரா என்பது குறித்த மின்னஞ்சல் கேள்விகளுக்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
கனடாவின் கிரேட்டர் டொரண்டோ பகுதியில், மிசிசாகா நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றில், இந்தியர்களை இனரீதியாக மோசமாக விமர்சிக்கும் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த விடயம் தொடர்பில் Freda Looker-Rilloraza (29) என்னும் கனேடியப் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
கனடாவில் சமீப காலமாக, இந்தியர்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகரித்துவருகிறது. சமீபத்தில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளானார்.
நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார். இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. துபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர் அணி,பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்தில் கடந்த வாரம் பங்கேற்றது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கூடினர். அதில் சிலர், அஜித்குமாரை பார்த்ததும் ஆரவாரம் செய்து விசிலடித்தனர்.
இதைக் கவனித்த அஜித் கோபமடைந்தார். விரலை அசைத்து, ‘அமைதியாக இருங்கள்’ என்ற சைகை செய்தார். உடனே ரசிகர்கள் ஆரவாரத்தை நிறுத்தி அமைதியானார்கள். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், பார்சிலோனா பந்தயத்தை முடித்துவிட்டு துபாய் திரும்பி இருக்கிறார். அடுத்து மலேசியாவில் டிசம்பர் மாதம் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். சுப காரியம் முயற்சிகள் கைகூடும். தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிதுனம்
தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். புதிய நட்புகள் மலரும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அச்சம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
சிம்மம்
திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் ஏற்படும். மனம் தெளிவு பெரும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். துணைவர் இடத்தில் அனுசரித்து செல்லவும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சபை பணிகளில் ஆதரவு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வீம்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
விருச்சிகம்
நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களுடன் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
தனுசு
சந்தேக உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் நிதானம் வேண்டும். எதையும் இரு முறை சிந்தித்து செயல்படுத்தவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
சுப காரிய செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கும்பம்
எதிர்பார்த்த சில வரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்த சிக்கல்கள் குறையும். நினைத்த காரியம் நிறைவேறும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை 16.10.2025.
இன்று பிற்பகல் 02.38 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று மாலை 05.08 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று காலை 07.41 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று அதிகாலை 03.01 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 02.38 வரை வரை பத்தரை. பின்பு பவம்.
இன்று மாலை 05.08 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.
பூனம் பாஜ்வாக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவரின் புகைப்படங்களுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இப்போது கிளாமரான ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
கனடாவின் ஒண்டாயோவில், கடந்த வாரம், அதாவது, அக்டோபர் மாதம் 6ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஹர்நூர் சிங் (27) மீது டிரக் ஒன்று மோதியது.
அந்த டிரக்கின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்த நிலையில், சிங் அந்த துயர விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
ஹர்நூர் சிங்கின் உடலை இந்தியா கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் பஞ்சாப் கேபினட் அமைச்சரான சஞ்சீவ் அரோரா என்பவரை அணுக, அவர் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அவரச உதவி கோரியுள்ளார்.
அதைத் தொடர்ந்து விரைவாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஹர்நூர் சிங்கின் உடல், நேற்று லூதியானாவில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவும் கனடாவும் சீர்குலைந்த தமது உறவைச் சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. சிறிது காலம் கசப்படைந்திருந்த இருதரப்பு உறவு கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நிர்வாகத்தின்கீழ் மேம்பட்டது.
கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் (Jaishankar) சந்தித்தார். அதோடு அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.
இந்நிலையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பானது இருதரப்பு உறவைச் சீரமைக்கும் முயற்சியாக அது பார்க்கப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு, நீரிழிவு நோய் உள்ள எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஹைப்பர் கிளைசீமியா, பாலியூரியா, பாலிஃபேஜியா, பாலிடிப்சியா, சிறுநீர் சர்க்கரை மற்றும் உடல் எடை போன்ற நீரிழிவு அறிகுறிகள் வாழைப்பூ மற்றும் சூடோஸ்டம் சிகிச்சையளிக்கப்பட்ட எலிகளில் மேம்படுத்தப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் வாழைப்பூ மற்றும் சூடோஸ்டம் ஆகியவை நீரிழிவு எதிர்ப்பு மற்றும் ஏஜிஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சப்ளிமெண்ட்ஸாகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழைப்பூ மற்றும் சூடோஸ்டில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் உணவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் அதிக உள்ளடக்கம் உள்ளது.
2013ம் ஆண்டு பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு இந்த கண்டுபிடிப்புகளை ஒப்புக்கொண்டது. மேலும், வாழைப்பூ மற்றும் சூடோஸ்டம் நீரிழிவு சிக்கல்களை மேம்படுத்தியது என்றும், மேம்பட்ட கிளைசேஷன் இறுதி தயாரிப்புகளின் (AGEs) உருவாக்கம் குறைக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது.
நீரிழிவு நோய், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற பல சிதைவு நோய்களின் வளர்ச்சி அல்லது மோசமடைவதில் அவை முதுமைக்கு ஒரு காரணியாக இருக்கலாம்.
வாழைப்பூ
வாழைப்பூ டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சமன் செய்வதால் நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஆக்ஸிஜனேற்றம் நிறைந்து காணப்படும் வாழைப்பூ, செல் ஆரோக்கியத்திற்கும் வயதான எதிர்ப்புக்கும் ஏற்றதாக அமைகிறது. இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. அதோடு வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.
இனப்பெருக்க உறுப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதற்கும், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் சிறந்ததாகவும் வாழைப்பூ உள்ளது.
உண்மையில், அவற்றில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிகமாகவும், சுமாரான அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், அவை மாதவிடாய் பிடிப்பைத் தணிப்பதாகவும் அறியப்படுகிறது.
வாழைப்பூவை நாம் பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ உண்ணலாம். மேலும் இவற்றை நாம் தயார் செய்யும் சாலடுகள், கறிகள் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.
ஜூன் 8, வியட்நாம் போர்: போரின் பயங்கரத்தைச் சொன்ன படம்!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 8ஆம் தேதி, வியட்நாமின் டிராங் பேங் கிராமத்திலிருந்து சிறுவர், சிறுமியர் அலறியபடியே ஓடிவந்தனர். அவர்களுக்கு பின்னால் அணுகுண்டு வெடித்த கரிய புகை.
இந்தக் காட்சியை வியட்நாமிய அமெரிக்கரான 'நிக் வுட்' படம் பிடித்தார். ஆடையின்றி உடல் முழுவதும் காயத்துடன் ஓடிவரும் 9 வயது சிறுமியான 'பான் தி கிம் ஃபூக்' படம் உலகத்தையே உலுக்கிவிட்டது.
போரின் கோரத்தை எடுத்துச் சொல்ல இந்தப் படம் ஒன்றே போதுமானதாக இருந்தது.
அசோசியேட்டட் பிரஸ் ஒளிப்படக் கலைஞர் நிக் வுட் அந்தச் சிறுமியை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அடிக்கடி அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.நிக் வுட்டின் அன்பும் சிறுமியின் உயிரைக் காப்பாற்றின. படம் வெளிவந்து உலகத்தை உறைய வைத்தது. பான் தி கிம் ஃபூக், ‘நேபாம் சிறுமி’ (நேபாம்-பெட்ரோல் குண்டு) என்று அழைக்கப்பட்டார்.
நிக் வுட்
1973ஆம் ஆண்டு நிக் வுட் இந்தப் படத்துக்காக புலிட்சர் விருதை வென்றார். பிறகே உலகம் முழுவதும் இந்தப் படம் பிரபலமானது.
ரஷ்யா, சீனா ஆதரித்த வடக்கு வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரித்த தெற்கு வியட்நாமுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட காலப் போர் 1975ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.
கிம் ஃபூக் - நிக் வுட்
“விமானங்கள் பறந்தன. குண்டுகள் விழுந்தன. தப்பி ஓடும்படி யாரோ கத்தினார்கள். என் உடை தீப்பற்றிக்கொண்டது. அதைக் கிழித்தெறிந்துவிட்டு ஓடினேன். உடல் எல்லாம் தீக்காயம். தாங்க முடியாத வேதனை. பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. இன்னும்கூட என் உடல் இயல்பாக இல்லை. எவ்வளவோ சிகிச்சைகள் செய்துவிட்டேன்” என்கிறார் கிம் ஃபூக்.
‘நேபாம் சிறுமி’க்கு இது ஐம்பதாவது ஆண்டு. ஆனால், இந்த உலகம் தான் இன்னும் போரிலிருந்து பாடம் கற்கவில்லை!
பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.
2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.
ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
2-3 பூண்டு பற்களுடன், 2 தக்காளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர, சளியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். இச்செயலை சளி நீங்கும் வரை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
மழைக்காலத்தில் பூண்டு சூப்பைக் குடித்து வந்தால், சளி, இருமல் போன்றவை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு சளி பிடிப்பது போன்று இருந்தால், ஒரு நாளைக்கு 2 -3 முறை பூண்டு சூப் குடித்து வந்தால், சளியை அப்படியே விரட்டிவிடலாம். மேலும் பூண்டு சூப் உடலுக்கு ஆற்றலை வழங்கும்.
அந்த முனிவர் காட்டில் ஒரு மரத்தினடியில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டிருந்தார். அவர் பெயர் கொங்கணவர்.
அது சமயம் அவர் அமர்ந்திருந்த மரத்தின் உச்சியில் இரு கொக்குகள் உட்கார்ந்திருந்தன.
அவைகள் இரண்டும் திடீரென ஒன்றுக்கொன்று கத்திக்கொண்டே சண்டையிடத் தொடங்கிவிட்டன.
அவற்றின் இரைச்சல் முனைவருக்கு இடைஞ்சலாக இருந்தது. அவரால் மனமொன்றி தவம் செய்ய முடியவில்லை. நிமிர்ந்து பார்த்து அவற்றை அதட்டிப் பார்த்தார். அவை அடங்குவதாயில்லை.
பொறுமை இழந்த முனிவர் ஆத்திரம் மிகுதியால் அவற்றைப் பார்த்தார். அவரின் தவ வலிமையினால் அவர் கண்களிலிருந்து தீ ஜ்வாலை எழுந்து சென்று அவற்றைத் தாக்க, அவையிரண்டும் எரிந்து விழுந்து மாண்டன.
சிறிது நேரம் கழித்து அவர் யாசகம் பெற்று சாப்பிடுவதற்காக ஊருக்குள் வந்தார். முனிவர்கள் பெரும்பாலும் இது போல வீடுகளில் யாசகம் பெற்று உண்பர். சில நேரங்களில் காடுகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் கிழங்குகளையும் சாப்பிடுவதுண்டு.
கொங்கணவ முனிவர் ஒரு வீட்டு முன்பு நின்று, "அம்மா, சாப்பாடு போடுங்க" என கேட்டார். அந்த வீட்டு பெண்மணி தன் கணவனுக்கு சேவை செய்வதையே தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து வரும் உத்தமி.
அப்போது அவர் தன் கணவனுக்கு சாப்பாடு போடுவதிலேயே கவனமாக இருந்தார். இருப்பினும் முனிவர் கூப்பிட்டது காதில் விழுந்தாலும் அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கணவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலேயே இருப்பது அவரின் வழக்கம். உள்ளிருந்தவாறு, "முனிவரே, கொஞ்சம் காத்திருங்கள், வருகிறேன்" என்று கூறினார்.
முனிவருக்கு பசி மயக்கம். அத்துடன் அந்த பெண்மணியும் வெளியில் வந்து பதில் சொல்லாதது அவரை சீற்றம் கொள்ள வைத்தன. உடனே அந்த பெண்மணியை சபிப்பதற்கு எண்ணினார்.
அவருடைய இந்த எண்ணம் அந்த கற்புக்கரசியின் உள்ளத்தில் பிரதிபலித்தது. உடனே அவர் உள்ளிருந்தவாறு, "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணாவா" என்று கேட்க, முனிவர் அதிர்ச்சியடைந்தார்.
'எங்கோ தூரத்தில் உள்ள காட்டில் தான் கொக்குகளை எரித்தது இங்கிருக்கும் அந்த பெண்ணுக்கு எப்படி தெரியும். அது மட்டுமல்லாது வந்திருப்பது யாரென்று வாசலில் வந்து பார்க்காமல் உள்ளிருந்தபடியே எப்படி அறிந்து கொண்டாள்'
அப்போதுதான் அந்த பெண்மணி எவ்வளவு கற்புக்கரசியாக இருக்கவேண்டும் என நினைத்தவுடன் அவருடைய அகந்தை அழிந்தது. அந்த பெண்மணி வாசலுக்கு வரும் வரை திண்ணையில் அமர்ந்திருந்தார்.
கணவன் சாப்பிட்டு முடித்தவுடன், முனிவருக்காக இலையில் சாப்பாட்டுடன் வெளியில் வந்த அப்பெண்மணியின் காலில் விழப்போனவரை அவள் தடுத்து அவரை அமரச்செய்து சாப்பாடு பரிமாறினாள்.
முனைவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கையெடுத்து அவளை வணங்கியவாறு சாப்பிடத் தொடங்கினார் முனிவர்
மஞ்சள், மாதுளம் பழச்சாறு போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் நாட்டுச் சர்க்கரை, வெள்ளம், கருப்பட்டி,தேன் கலக்கலாம்.இதை, முற்பகல், 11:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.
இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு, தண்ணீரை கொதிக்க வைத்து, தொடர்ந்து பருகி வரலாம்.
பூண்டை, பச்சையாக உட்கொள்ளலாம்.இரண்டு பூண்டு பற்களை பொடியாக வெட்டி, ஒரு டம்ளர் நீருடன் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
தேங்காய் எண்ணையுடன் கற்பூரம் கலந்து சூடாக்கி மார்பு மீது தடவினால் சளி, இருமல் குறையும். மூக்கடைப்பு ஏற்பட்டால், சுடுநீரில் உப்பு கலந்து, சுத்தமான பருத்தி துணியில் தொட்டு துடைக்கலாம். இவை, குழந்தைகளுக்கு உகந்த முறைகள்.
ஏலக்காய் பொடியுடன், நெய் கலந்து சாப்பிட, மார்பு சளி நீங்கும்.
வல்லாரை சூரணத்தை, தேன் கலந்து சாப்பிட்டால் சளி இருமல் நீங்கும்.
சின்ன வெங்காயசாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவில் கலந்து தினமும், ஒருவேளை என இரண்டு நாட்கள் சாப்பிட்டால் சளி தொல்லை நீங்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நினைத்த பணிகள் தாமதமாக நிறைவேறும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் அடைவீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதில் தன்னம்பிக்கை உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மிதுனம்
குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபார விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கடகம்
அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலை உருவாக்கும். எதிலும் திருப்தி அற்ற மனநிலை உண்டாகும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் சில மாற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் இருக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மாற்றத்தை உருவாக்கும். தவறிய சில முக்கியமான பொருள்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உருவாகும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விருச்சிகம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் தடைப்பட்ட பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். மனதளவில் உற்சாகப் பிறக்கும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
தனுசு
உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம் புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மீனம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே..
எனத் திருமூலர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை 15.10.2025
இன்று மாலை 03.24 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று மாலை 05.11 வரை பூசம். பின்னர் ஆயில்யம் .
இன்று காலை 09.39 வரை சித்தம். பின்னர் சாத்தியம் .
இன்று அதிகாலை 04.02 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.24 வரை வரை கரசை. பின்பு வணிசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
🌸 முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிய மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் 🌸
பயனாளிகள் :
👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்
இலவச தரிசன நேரங்கள் :
⏰ காலை – 10:00 மணி
⏰ பிற்பகல் – 3:00 மணி
எப்படி உள்ளே செல்லலாம்?
✅ உங்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயது சான்றிதழ் மட்டும் கொண்டு கவுண்டர் S-1 இல் சமர்ப்பிக்க வேண்டும்.
கோவிலுக்குள் செல்லும் வழி :
➡️ பாலம் கீழே உள்ள கேலரியின் வழியாக, கோவிலின் வலது பக்கச் சுவரைத் தொடர்ந்து செல்ல வேண்டும்.
➡️ எந்த படிகளையும் ஏற வேண்டியதில்லை.
➡️ போதுமான இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வசதிகள் :
1️⃣ இலவச அன்னதானம் : தரிசனத்திற்குப் பிறகு சூடான சாம்பார் (மசாலா) சாதம், தயிர் சாதம், சூடான பால் வழங்கப்படும்.
2️⃣ பேட்டரி கார்கள் :
பார்க்கிங் பகுதியில் இருந்து கவுண்டர் வரை,
அங்கிருந்து வெளியேறும் கதவு வரை பேட்டரி கார்கள் மூலமாக பயணம் செய்யலாம்.
முக்கிய குறிப்பு :
⚡ யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.
⚡ இந்த தரிசனம் மூத்த குடிமக்கள் (Senior Citizens) களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
⚡ ஒருமுறை வரிசையில் நுழைந்தால், மிகக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களில் தரிசனமும், வெளியேறுவதும் முடியும்.
உதவிக்கான தொடர்பு :
📞 TTD (திருமலை திருப்பதி தேவஸ்தானம்) ஹெல்ப்டெஸ்க் எண் : 8772277777
கனடாவின் ஒண்டாரியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் விற்கப்பட்ட பிஸ்தா (Pistachio) மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பொருட்கள் பலவும் சால்மொனெல்லா (Salmonella) என்ற ஆபத்தான உணவுக் கிருமி தொற்றின் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வரும் சால்மொனெல்லா தொற்று விசாரணையுடன் தொடர்புடையதாக கனடா கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.
அரசு பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், இந்தப் பொருட்களை உண்ணவோ, விற்கவோ, பரிமாறவோ, விநியோகிக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒண்டாரியோ மாகாணம் கொலிங்வுட் நகரில் ஆன்லைனில் விற்கப்பட்ட பிஸ்தா பாக்லாவா மற்றும் பிஸ்தா சீஸ்கேக், டொராண்டோவில் விற்கப்பட்ட பெரரல் பிராண்டின் ஹல்வா பிஸ்தான டெசர்ட், சில பொருட்களில் இவ்வாறு சல்மொனெல்லா தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை ஒண்டாரியோ மற்றும் க்யூபெக் மாகாணங்களில் விற்கப்பட்டன. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், பிராண்டு பெயர் குறிப்பிடப்படாத பல அளவுகளில் பிஸ்தாக்கள் திரும்பப் பெறப்பட்டன. மூன்லைட் க்ரோசர் நிறுவனம் விற்ற பிஸ்தா பொருட்களும் தொற்று அபாயத்திற்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன. திரும்பப் பெறப்பட்ட பொருட்களை உண்ட பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார்.
அவரை பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி.
உன் கடைசி வாழ்நாள் வரை இப்படிதான் இருக்கும் என்றார்.
பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ புத்தர் பெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார்.
பிச்சைக்காரன் புத்தரை பார்க்க புறப்பட்டான். வெகு நேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய். என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க. பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் பெண் உள்ளது. அவள் பிறவி ஊமை அவள் எப்போது பேசுவாள் என்று புத்தரிடம் கேட்டு எங்களுக்கு சொல்ல வேண்டும் என்றனர்.
அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஒய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான். வெகுநேரம் கடந்த பின் ஒரு பெரியமலை வந்தது. அதை கடக்க முடியாமல் இருந்த நேரத்தில் ஒரு மந்திரவாதி அங்கு வந்தார்.
அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன். நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார். பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன்.
நீ புத்தரிடம் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டு சொல்ல வேண்டும் என்றார். அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி மலையை கடந்து பிச்சைக்காரனை விட்டு சென்றார். மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன். அப்போது ஒர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடந்தால் தான் புத்தர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.
ஆற்றை கடக்க என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமை வந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து அதுவும் நான் உனக்கு உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ புத்தரிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை விட்டது. பிச்சைக்காரனும் ஒரு் வழியாக புத்தர் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். புத்தரை பார்த்து ஆசி பெற்றான். புத்தர் என்னிடம் இருந்து உனக்கு வேண்டியதை கேளென்றார். ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார்.
பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். புத்தரோ மூன்று தான் கேட்க வேண்டும் என்றார். என்ன செய்வது என்று புரியாமல் யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்து நம் காலத்தை ஒட்டிவிடலாம்.
ஆனால் அந்த மூன்று பேர்களின் பிரச்சினையையாவது தீரட்டும். என்று எண்ணி மூன்று பேரின் பிரச்சனையை புத்தரிடம் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பி வந்தான்.
முதலில் ஆமை என் கேள்விக்கு புத்தர் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஒட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான். உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்தது விட்டு பறந்துசென்றது. அந்த ஓட்டில் பவளமும், முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
மந்திரவாதியை பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை விட வேண்டும் என்றான். மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு முக்தி அடைந்தார்.
மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்க்கு பிடித்தவனை பார்க்கிறாளோ. அன்று அவள் பேசுவாள் என்றான் பிச்சைகாரன்.
மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் அப்பா இவர் தானே அன்று இரவு வந்தது என்று கேட்டால். செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார். அன்று முதல் அவன் ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான்.
இந்த கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் நம் துயரமும், பிறரின் துயரமும் மறைந்து விடும். அதே போல் கடவுள் நம் தலையில் எழுதிய விதியை அவரால் மட்டுமே மாற்றி எழுத முடியும்.
நம்மால் விதியை மாற்ற முடியும் என்று எண்ணி வீதிக்கு வராமல் இருந்தால் போதும்.